இசைப்புயலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நாளை பிறந்த நாளை கொண்டாடவிருக்கும் எங்களது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உலக தமிழர்களை தலை நிமிர வைத்த ஒஸ்கார் தமிழனது பிறந்த நாளுக்கு வாழ்த்துவதில் நான் சந்தோஷமடைகிறேன்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கப்பலில் நடந்த மன்மதன் அம்பு பட இசை வெளியீட்டு முன்னோட்டத்தில் மன்மதன் அம்பு பட இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தை வாழ்த்தும் போது கமல் தெரிவித்த ஒரு கருத்து என்னை போன்ற ரகுமான் ரசிகர்களுக்கு மனவருத்தத்தை தந்தென்பதை மறுக்கவியலாது. “எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா என்னும் இருவருக்கு பிறகு தமிழ் திரையிசையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல கூடிய தகுதி தேவி ஸ்ரீ பிரசாத்திடமே உள்ளது என கமல் கூறினார். கமலுக்கு ரகுமான் என்னும் இசையமைப்பாளரின் சாதனைகள் மறந்துவிட்டதா இல்லை வேண்டுமென்றே ஒரு சாதனை தமிழனை புறக்கணிக்கிறாரோ தெரியவில்லை.

உலக அரங்கில் தன்னை நிரூபித்த இசைப்புயலை எம்மவர்கள் சிலர் புறக்கணிப்பது வருத்தத்திற்குறியதே. எம்.எஸ்.வி., இளையராஜா பாடல்கள் எவ்வாறு காலத்தால் அழியாததோ அதே போன்று ரகுமானின் இசையும் காலத்தால் அழியாததே. 

சரளமாக ஆங்கிலம் பேச முடிந்தும், ஏராளமான ஆங்கில பார்வையாளர்களுக்கு முன்னர் “எல்லா புகழும் இறைவனுக்கே” என தன செந்தமிழில் பேசிய ஆஸ்கார் நாயகன் நாளை ஜனவரி 6ம் திகதி தனது 45ம் அகவையில் காலடி எடுத்து வைக்கிறார். இவ்வருடத்தை ஓய்வு வருடமாக அறிவித்துள்ள இசைப்புயல். ஓய்வின் பின்னர் பழைய போர்முக்கு திரும்பி எம்மை இசை மழையில் நனைய வைப்பார் என நம்பலாம்.

இசைப்புயல் இம்முறையும் ஆஸ்கார் விருது பெற்று எம்மை இன்னும் மகிழ்வடைய செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன்

இசைப்புயலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இசைப்புயலின் மனதை வருடும் இரு இசைக்கோலங்கள் கீழேFacebook Badge