எனக்கு பிடித்து 80களின் பாடல்கள் (இளையராஜா ஸ்பெஷல்)

இன்று இளையராஜா ஸ்பெஷல் விடியல் கேட்ட பின்னர் எனக்கு பிடித்த சில இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்களை இணையத்தில் தேடி ரசித்தேன். அப்பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி
1. இளையநிலா பொழிகிறது.

இசைஞானி இளையராஜாவின் இசையில், கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில், பாடும் நிலா S.P.B. யின் மனதை மயக்கும் இனிய குரலில் அமைந்துள்ள இப்பாடலை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இசை பற்றிய ஞானம் இல்லாத சிறிய வயதில் (இப்ப மட்டும் இருக்கா என்ன?) இப்பாடலை ரசித்திருக்கிறேன். கிட்டாரை ரசிப்பவர்கள் இப்பாடலை தவறவிட மாட்டார்கள். மனதில் ஏதாவது கவலைகள் இருக்கும் பட்சத்தில் இப்பாடலை கேட்டு கேட்டு என்னை புத்துணர்ச்சியாக்கிக் கொள்வேன்.


2. என் இனிய பொன் நிலாவே
     இதுவும் மனதை மயக்கும் கிட்டார் இசையை கொண்டுள்ள பாடலாகும். கங்கை அமரனின் அற்புத வரிகளுக்கு இசை வடிவம் கொடுத்திருப்பது இசைஞானி, பாடலுக்கு தன் வசீகர குரலால் உயிர் கொடுத்திருப்பவர் K.J. ஜேசுதாஸ்.


3.பொன் மாலை பொழுது
கவிப்ரேரசை இசைஞானி தமிழ் திரையிசைக்கு அறிமுகம் செய்து வைத்த பாடல், பாடலுக்கு S.P.B. தன் குரலால் உயிர் கொடுத்திருப்பார்.  வைரமுத்து தன் கவி வரிகளை இசைஞானியின் அற்புத இசையோடு சங்கமிக்க வைத்திருப்பார்.


4. மடை திறந்து தாவும் நதியலைதான்
இந்த பாடல் கொடுக்கும் உற்சாகம் சிறப்பானது, இளையராஜாவின் இசையில் எம்மை உற்சாகபப்படுத்த சிறந்த பாடல். பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் கவி மார்க்கண்டேயர் வாலி. பாடியவர் பாடும் நிலா S.P.B. இப்பாடல் சற்று காலத்திற்கு முன்னால் ரீமிக்சாகவும் அடுத்த தலைமுறையினரிடமும் வெளியாகி சக்கை போடு போட்டது.



5. காதலின் தீபம் ஒன்று
S.P.B.யின் குரலில் சூப்பர் ஸ்டாருக்காவே வடிவமைத்த மென்மையான இசையினை வழங்கியிருப்பார் இசைஞானி. வரிகளுக்கு சொந்தக்காரர் பஞ்சு அருணாசலம்.
6. மன்றம் வந்த தென்றலுக்கு
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்களில் ஒன்று. மீண்டும் இசைஞானி, பாடும் நிலாவின், கவி மார்க்கண்டேயரின் முக்கூட்டணி எம்மை ஆக்கிரமித்த பாடல்.


7. சங்கீத ஜாதி முல்லை
  கர்நாடக இசையறிவு அற்ற எனக்கே இப்பாடல் பிடிக்குமென்றால், கொஞ்சமாவது இசையை கற்றறிந்தவர்களுக்கு இப்பாடல் ஒரு அமுத சுரபியாக இருக்குமென நினைக்கிறேன். மீண்டும் இசைஞானி, வைரமுத்து, S.P.B.  போட்டி போட்டு பங்களித்திருப்பார்கள்.
8. சங்கீதம் கேளு
  இன்றுவரை இப்பாடலுக்கு இசையமைத்தவர் இசைஞானி என்றே எண்ணியிருந்தேன். இன்று கூகுகிலாண்டவரிடம் தேடி பார்த்த போதுதான் இது இசைஞானியின் தமையனாரான கங்கை அமரனின் இசையில் வெளிவந்த பாடல் என அறிந்தேன். எனினும் இப்பாடல் கேட்க மிகவும் இனிமையாக இருக்கும். பாடலை பாடியவர் அமரர் மலேசியா வாசுதேவன் அவர்கள்.




9.பனி விழும் மலர் வனம்
இசைஞானி, வைரமுத்து, S.P.B. கூட்டணியின் மற்றுமொரு மகுடம். இரவு வேளைகளில் இப்பாடலை கண்ணை மூடிக் கொண்டு கேட்டு பாருங்கள், சொர்க்கம் தெரியும்
10. அஞ்சலி அஞ்சலி அஞ்சலி 
நான் சிறுவனாக இருக்கும் போது வெளிவந்த இப்பாடல் இன்றும் எனக்கு பிடித்தமான பாடலாக இருப்பது இசைஞானியின் வெற்றி எனலாம். பாடலுக்கு குரல் கொடுத்தவர் சிறிய வயது பவதாரிணி. பாடல் வரிகள் கவி மார்க்கண்டேயர் வாலி என நினைக்கிறேன்.


பி.கு.- இன்னும் ஏராளமான பாடல்களை எழுதி கொண்டே போகலாம். ஆனாலும் 10 பாடல்களுடன் முடித்து கொள்கிறேன். இளமையெனும் புங்காற்று, நிலாவே வா, இதயம், புன்னகை மன்னன், இதயக்கோவில் என பட பாடல்கள் எழுத நினைத்தேன், நேரப்பற்றாக்குறை காரணமாக எழுதுவில்லை யாராவது விரும்பினால் தொடரலாம்
14 Responses
  1. எவ்வளவு காலத்துக்கு பிறகு! நீங்கள் பதிந்த 10ல் இளைய நிலா பொழிகிறது பாடலே எனக்கு இவற்றில் படித்தது. முதல்10ல் இடம்பெற வேண்டிய பல பாடல்களை நீங்கள் மிஸ் பண்ணிட்டிங்க எண்டு நினைக்கிறேன்!


  2. சூப்பர்... அண்ணா

    நிறைய பாடல்களை நானும் எடுத்து வைத்துள்ளேன்.. அவை இந்த மாதம் முழுவதும் பதிவுகளாக வரும்.. S.P.B & Raja தெரிவுகள் என அவை அதிகமாக இருக்கும்..
    ஒரு பதிவு இன்று தொடக்கி விட்டாச்சு..


  3. anuthinan Says:

    யோ அண்ணே!!!! பதிவுலகில் சந்திப்பதில் மகிழ்ச்சி!!!

    இளைய ராஜா எண்டா சும்மாவா அண்ணே!!! கலக்கல்தான்!!!


  4. ARV Loshan Says:

    நீங்கள் தந்துள்ள எல்லாப் பாடல்களும் எனக்கும் பிடித்தவையே :)

    சங்கீதம் கேளு - எனக்கும் பிடித்தது.. ஆமாம் ஜீவா படப் பாடல்களுக்கு கங்கை அமரன் தான் இசை.

    சங்கீத ஜாதிமுல்லை - இரவுகளில் கேட்கையில் இதன் பீலிங்க்ஸ் தனி.

    இன்று இளையராஜா ஸ்பெஷல் விடியல் கேட்ட பின்னர் //
    :) :)
    ஆனால் எனக்கு நேற்றைய நிகழ்ச்சியில் பூரண திருப்தியில்லை யோ


  5. sinmajan Says:

    நல்ல தெரிவுகள்


  6. Bavan Says:

    வாவ் தலைவா.. சேம் பிளட்..:-))

    //1.இளையநிலா பொழிகிறது,
    2.என் இனிய பொன் நிலாவே
    3.பொன் மாலைப் பொழுது
    4.மடை திறந்து
    5.காதலின் தீபம் ஒன்று
    6.மன்றம் வந்த தொன்றலுக்கு
    7.சங்கீத ஜாதி முல்லை
    9.பனி விழும் மலர்வனம்//

    தினமும் கேட்கும் இளையராஜா பாடல்களில் அடங்கியிருக்கின்றன அவை. இரவு நேரத்தில் இளையராஜா பாடல் கேட்பது தனி சுகம்தான்..:-))

    சிறந்த இசையுடன் வரிகளும் அருமையாக அமையும் போது பாடல் இன்னும் பிடித்துப் போகிறது..

    அதுவும்
    இசைஞானி+SPB+ வைரமுத்து= சொர்க்கம் தான்..:-))


  7. Ramesh Says:

    மெளனராகம்... அருமை.. என்றும் அந்த இசையில் லயித்திருக்கிறேன்.. அவ்வப்போது மெல்லிய வருடலிசை இனிக்கும்.


  8. Ramesh Says:

    மெளனராகம்... அருமை.. என்றும் அந்த இசையில் லயித்திருக்கிறேன்.. அவ்வப்போது மெல்லிய வருடலிசை இனிக்கும்.


  9. நல்ல பாடல் தெரிவுகள் யோகா அண்ணா வாழ்த்துக்கள்


  10. நல்ல பாடல் தெரிவுகள் நண்பரே...

    நேற்றிரவு உங்கள் பதிவுக்கு வந்து அதன் மூலம் youtube இல் இளையராஜா பாடலுக்கு தாவி அதிகாலையிலேயே இரவுத்தூக்கத்துக்கு சென்றேன்..

    இப்போதும் இளையநிலாவிலிருந்து ஆரம்பித்துள்ளேன்.


  11. சிறு வயது ஞாபகங்களைக் கொண்டுவந்தீர்கள்; நன்றி.


  12. எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.
    மேலும் விபரம் அறியவும்....
    இந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....
    எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...


  13. நீண்டகாலத்தின் பின் பதிவில் வாரும் யோ பாடல் பிரமாதம் எல்லாமே அஞ்சலியில் குட்டீஸ்க்கு யுவன் சங்கரும் சேர்ந்து பாடியிருக்கின்றார்!எனக்கு அதிகம் பிடிக்கும் மடைதிறந்தும் ,இளைய நிலா ,மன்றம் வந்த தென்றல்!


  14. Anonymous Says:

    உலக சாதனைப் பாடகன் ,பாட்டு தலைவன் , பாடும் நிலா - எஸ்.பி.பி. நான்கு தலை முறை பாடகன் - இவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது .இவருக்கு கிடைத்த அவார்ட் பல
    அது போல் இளையராஜாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது


Facebook Badge