முழுப் பெயர் - ரிக்கி தோமஸ் பொன்டிங்
செல்லப்பெயர் - Punter (அத சொல்ல மாட்டேன்)
ரொம்ப சந்தோஷபட்டது - தலைவனாக 2 உலக கோப்பை பெற்றது(அது ஒரு கனா காலம்)
பிடித்த பாடல் (முன்பு) - ராஜாவுககு ராஜா நான்தான்... (ம்ம் எப்படியிருந்த நான்?இப்ப என்னடானா, ஒன்னா விளையாண்ட ஷேன் வோன் கூட கலாய்க்கிறான்)
பிடித்த பாடல் (தற்போது) - நானொரு ராசியில்லா ராஜா... (அவ்வ் அழுதிடுவேன்)
முணுமுணுப்பது - இளைய தளபதி ரேஞ்சுக்கு நம்மள கலாய்க்கிறாங்களே! (ர் ர் ர் ர் நற நற)
எதிரி (வெளிப்படையாக) - லட்சுமன், சச்சின் (வயசாக வயசாக திறமை கூடுதே)
எதிரி (மனதில்) -இப்போதைக்கு ஹுரிட்ஸ் (அவன் பாவம் என்னா செய்வான், பந்து சுழலாததற்கு)
நண்பன் - யாருமே இல்லை, (எல்லாம் கட்டதொர மாதிரியே இல்ல பார்க்கிறானுங்க)
எரிச்சல் - தரப்படுத்தலில் கீழிறங்கியது (மழை கூட வர மாட்டேங்குது)
நீண்ட நாள் சாதனை - தொடர் வெற்றிகள் பெற்றது (அது.. அப்ப)
தற்போதைய சாதனை - பெங்களுர் போட்டியின் 2ம் இனிங்சில் அருமையான ஆட்டம் (ஒரு நாதாரியும் சப்போர்ட் பண்ணல, இல்லாட்டி வென்றிருக்கலாம்)
கடுப்பு - வோன், ஹேடன், மெக்ரா, கில்லி, மாடின் நான் தலைவனாயிருக்கப்ப விலகியது (வௌங்க மாட்டாங்க)
பொறாமை - சச்சினின் சதங்கள் (கிட்ட வர வர தூர போயிடுறான்)
வேதனை - பதவி விலக சொல்லுவது (அழுதுடுவேன்)
ஒரு சீரியஸ் பதிவு போட்டதால மொக்கை பதிவுகளை மீணடும் போடுமாறு வேண்டி ஒபாமா, ஆர்னோல்ட் ஸ்வாஸ்நேர், பில் கிளிங்டன், பங்கி மூன் போன்றோர் கேட்டு கொண்டதால் நம்ம ரிக்கி பொண்டிங் பற்றிய மொக்கை பதிவு
பி.கு- ரிக்கி பொன்டிங் இதை வாசித்து விட்டு இனி மேல் தேவையில்லை என நட்பை துண்டித்து கொண்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
பி.பி.கு - இது சென்ற வருடம் ஏற்கனவே நான் எழுதிய பதிவு, இப்போதை எழுத எதுவும் வராதபடியால் மீண்டும் கொஞ்சம் மாற்றங்களுடன் பதிவிடுகிறேன்,
பி.பி.பி.கு- நான் ஒரு ரிக்கி பொண்டிங் ரசிகன், அவரது தற்போதைய நிலை கவலையளிக்கிறது.பி.கு- ரிக்கி பொன்டிங் இதை வாசித்து விட்டு இனி மேல் என் நட்பு தேவையில்லை என எனது நட்பை துண்டித்து கொண்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.