Showing posts with label கிரிக்கட். Show all posts
Showing posts with label கிரிக்கட். Show all posts

மறக்க முடியா உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் - போட்டி 1

மறக்க முடியாத உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் என்னும் தொடரை இன்று முதல் எழுத எண்ணியுள்ளேன். உங்களின் ஆதரவுடன் தொடர்ந்து இதை எழுதலாம் என்றிருக்கிறேன்


போட்டி - 1996ம் ஆண்டு உலக கிண்ண போட்டிகள் அரையிறுதி ஆட்டம்
அணிகள் - அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள்
மைதானம் - மொகாலி
நாணய சுழற்சியில் வெற்றி - அவுஸ்திரேலியா


நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி தலைவர் மார்க் டெயிலர் வேக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மொகாலி ஆடுகளத்தில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானிக்கிறார். முதலில் துடுப்பெடுத்தாட இந்த ஆடுகளம் சிறப்பானதல்ல என்பதை மேற்கிந்திய வேகபந்து வீச்சாளர்கள் அவுஸ்திரேலியாக்கு உணர்த்தினார்கள். தொடர் முழுவதும் சிறப்பாக ஆடி வந்த மார்க் வாஹ்வை கர்ட்லி அம்ரோஸ் ஓட்டம் பெற முன்னரே ஆட்டமிழக்க செய்தார், தொடர்ந்து மார்க்டெயிலர், ரிக்கி பொன்டிங், ஸ்டீவ் வாஹ் ஆகியோரை குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்தனர். ஸ்டீவ் வாஹ் ஆட்டமிழக்கும் போது அவுஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 4 விக்கட் இழப்புக்கு 15 ஓட்டங்கள். இப்போட்டியில் வென்றால்தான் உலக கிண்ண இறுதி போட்டியில் விளையாடலாம் என்னும் இக்கட்டான போட்டியில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட முதுகெழும்பை முறியடித்தனர் மேற்கிந்திய தீவுகளின் வேக பந்து வீச்சாளர்கள் அம்ரோசும் மற்றும் இயன் பிஷோப். 


பின்னர் ஆடுகளத்தில் இணைந்த அக்காலப்பகுதியில் ஆபத்பாந்தவனாக அவுஸ்திரேலியா அணிக்கு கை கொடுக்கும் மைக்கல் பெவன் மற்றும் சகல துறை ஆட்டக்காரர் ஸ்டுவர்ட் லோ ஆகிய இருவரும்  ஒரு சிறப்பான இணைப்பாட்டத்தினை வழங்கினர். இவ்விருவருக்கும் இடையிலான 137 ஓட்ட இணைப்பாட்டதுடன், இறுதி நேரத்தில் இறங்கிய இயன் ஹீலியின் அதிரடியான 31 ஒட்டமும் சேர அவுஸ்திரேலிய அணிக்கு ஓரளவுக்கு போராட கூடிய 207 என்னும் ஓட்ட எண்ணிக்கை கிடைத்தது.


208 என்னும் இலகுவான இலக்கினை நோக்கி ஆட தொடங்கிய மேற்கிந்திய அணிக்கு ஓரளவு சிறப்பான ஆரம்பத்தை பெற்று தந்தனர். அவ்வணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சிவ்நரின் சந்தர்போல் மற்றும் கோட்னி பிரவுண் ஆகியோர். எப்படியாவது ஒரு விக்கட் எடுக்க வேண்டும் என்று முயன்ற அவுஸ்திரேலிய அணி தலைவர் மார்க் டெயிலர் பவர்பிளே முடிய முன்னர் தனது மாயாஜால பந்து வீச்சாளரான ஷேன் வோர்னை அழைத்தார். மார்க் டெயிலரின் திட்டம் பலித்தது, தனது முதலாவது பந்திலேயே பிரவுணை ஆட்டமிழக்க செய்தார் ஷேன் வோர்ன். அதன் பின்னர் இணைந்து ஆட தொடங்கிய இடது ஆட்டக்காரர்களான லாரா மற்றும் சந்தர்போல் போட்டியை மேற்கிந்திய அணிக்கு வெற்றிக்கு இட்டு செல்ல சிறப்பாக ஆடினர். வேகமாக 45 ஓட்டங்களை பெற்ற பிரையன் லாராவின் முக்கியமான விக்கட்டை ஸ்டீவ் வாஹ் வீழ்த்துகையில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 2 விக்கட் இழப்புக்கு 93. தொடர்ந்து அணித்தலைவர் ரிச்சி ரிச்சர்ட்சனும் சந்தர்போலும் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை 163வரை கொண்டு சென்றனர். காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக சிறப்பாக விளையாட இயலாத சந்தர்போல் கிளன் மெக்ராவின் பந்து வீச்சில் பிளமிங்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழக்கும் போது ஓட்ட எண்ணிக்கை 165. அவர் பெற்ற ஓட்ட எண்ணிக்கை 80. இன்னும் 9 ஓவர்களின் 43 ஓட்டங்களை பெற வேண்டும், கைவசம் 7 விக்கட்டுகள் உள்ளன, மேலும் அணித்தலைவர் ரிச்சி ரிச்சர்ட்சன் சிறப்பாக விளையாடி கொண்டிருக்கிறார் என்பதால் இலவாக இப்போட்டியை வென்று விடலாம் என மேற்கிந்திய அணி எண்ணியிருக்கையில் அடுத்த விக்கட்டையும் வீழ்த்துகிறார் கிளன் மெக்ரா. எனினும் ஆட்டமிழந்த வீரர் ரொஜர் ஹாப்பர், இவர் ஒரு பந்துவீசும் வீரராகவே அறியப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து ஆடுகளத்தில் இறங்கிய சகலதுறை வீரர் ஒட்டிஸ் கிப்சன் வோனின் மாயசுழலில் மாட்டி விக்கட் காப்பாளர் ஹீலியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழக்கையில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 178. தொடர்ந்து துடுப்பெடுத்தாட வந்த அணியின் துடுப்பாட்ட வீரர் ஜிம்மி அடம்ஸை ஓட்டம் பெற முன்னர் ஷேன் வோர்ன் ஆட்டமிழக்க செய்ய, தொடர்ந்து ஆட வருகிறார், ஒற்றைகையால் ஆறு ஓட்டங்களை அடிப்பதில் கில்லாடியான கீத் ஆர்த்தட்டன். இவரை ஒரு சிறப்பான பந்து வீச்சின் மூலம் ஆட்டமிழக்க செய்கிறார் டேமியன் பிளமிங். Attacking Field Setting செய்து பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களுக்கு ஓட்டம் பெற முடியாதவாறு செய்த அவுஸ்திரேலிய அணி தலைவர் மார்க் டெயிலருக்கு ஆதரவா சிறப்பாக பந்து வீசினர் அவ்வணி பந்து வீச்சாளர்கள். முக்கியமாக ஷேன் வோர்ன் தனது கடைசி 3 ஓவர்களில் ஆறு ஓட்டங்களை கொடுத்து 3 விக்கட்டுகளை பெறுகின்றார்.  ஆனாலும் சிறப்பாக ஆடி கொண்டிருக்கும் தலைவர் ரிச்சி ரிச்சட்சன் கடைசி ஓவரை முகம் கொடுக்கும் போது அணியின் வெற்றிக்கு தேவையான ஓட்ட எண்ணிக்கை 10. மீதமுள்ள விக்கட்டுகளின் எண்ணிக்கை 2.  இறுதி ஓவரை வீச மார்க் டெயிலர் பந்தை டேமியன் பிளமிங்கிடம் கொடுக்கிறார்.


முதலாம் பந்து - மிட் விக்கட் திசையில் அப்பந்தை அடித்து ஆடிய ரிச்சட்சன் 4 ஓட்டங்களை பெறுகிறார். இன்றும் 5 பந்துகளில் 6 ஓட்டங்கள் தேவை.


இரண்டாம் பந்து - ரிச்சட்சனின் துடுப்பில் உள்பகுதியில் பட்ட பந்துக்கு ஓட்டம் பெற முயன்றனர் அம்ரோசும், ரிச்சட்சனும். பந்தை எடுத்த ஹீலி விக்கட்டை நோக்கி எறிகிறார். மூன்றாம் நடுவரின் தீர்ப்பின்படி அம்ரோஸ் ஆட்டமிழக்கப்பட்டவராக அறிவிக்கப்படுகிறார். இன்னும் நான்கு பந்து களில் 6 ஓட்டங்கள் தேவை. பந்தை எதிர் கொள்ள வந்திருப்பவர். உலகில் அதிக முறை பூச்சியத்துக்கு ஆட்டமிழந்த வீரர் என்னும் சாதனையை கொண்டிருந்த வீரர் கோட்னி வோல்ஷ்


மூன்றாம் பந்து - கிளீன் போல்ட். பிளமிங் விக்கட்டை நோக்கி வீசிய பந்தை கோட்டை விட்ட வோல்ஷ் உலக கிண்ண கனவையும் கனவாகவே மாற்றிவிட்டார். மறுபுறத்தில் 49 ஓட்டங்களுடன் அணிதலைவர் ஆடுகளத்தில் இருந்தும் போட்டியை 5 ஓட்டங்களால் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது அவுஸ்திரேலிய அணி


ஸ்கோர் சுருக்கும் 


அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கட் இழப்புக்கு 207 ஓட்டங்கள்
 துடுப்பாட்டத்தில் மைக்கல் பேவன் - 69, ஸ்டுவர்ட் லோ - 72, ஹீலி - 31
 பந்து வீச்சில் அம்ரோஸ் 26/2, பிஷப் 35/2


மேற்கிந்திய தீவுகள் அணி 49.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 202 ஓட்டங்கள்

  துடுப்பாட்டத்தில் சந்தர்போல் - 80, லாரா - 45, ரிச்சட்சன் - 49 ஆட்டமிக்காமல்
   பந்து வீச்சில் ஷேன் வோர்ன் 36/4, பிளமிங் 48/2, மக்ரா 30/2

 போட்டியின் சிறப்பாட்டக்காரர் ஷேன் வோர்ன்



குறிப்பு - இப்போட்டியை மறக்காமைக்கு இன்னொரு முக்கிய காரணம், எனது விருப்பத்துக்குறிய வீரர்களில் ஒருவரான ரிச்சி ரிச்சட்சனின் இறுதி சர்வதேச போட்டி இதுவென்பதாலாகும்.

கிரிக்கட் பதிவர்கள் ஆடிய கிரிக்கட்

இலங்கை தமிழ் பதிவர்கள் ஆடிய கிரிக்கட் போட்டி இனிதே கடந்த வார இறுதியில் நடந்து முடிந்தது, அது பற்றிய முழு விபரங்களை லோஷனின் பதிவில் வாசித்திருப்பீர்கள், வாசிக்காதவர்கள் இந்த சுட்டியில் வாசிக்கலாம்


*நிரூஜா எனப்படும் மாலவன் எங்களது அணிக்கு தலைவராகவும், அனுதினன் மற்றைய அணிக்கு தலைவராகவும் அறிவிக்கப்பட்டனர். நாணய சுழற்சியில் நாங்கள் தோற்று களத்தடுப்பை தேர்வு செய்தோம் (வென்றிருந்தால் துடுப்பாட்டத்தை தேர்வு செய்திருப்போம் என்பது வேறு விடயம்.)

* எமது ஆரம்ப பந்து வீச்சாளர்களான மருதமூரான் மற்றும் சி.பொ. கோபிநாத்தின் சிறப்பான பந்து வீச்சில் ஆரம்பத்தில் மெதுவாக ஒட்டங்களை பெற்ற அனுதினன் அணியினர், 11 வருடங்களுக்கு பின்னர் துடுப்பெடுத்தாட மைதானத்திற்குள் நுழைந்த ஜனாவின் அதிரடியோடு வேகமாக ஒட்டங்களை பெற்றனர், லோஷன் 4 விக்கட்டுகளை வீழ்த்தி அவ்வணியினரின் ஓட்டங்களை 93ஆக கட்டு படுத்த உதவினார். தொடர்ந்து ஆடிய எமது அணியினர் ஆரம்பத்தில் சிறப்பான அடித்தளத்தை இட்டாலும் தொடர்ந்து விக்கட்டுகள் சரிய நானும், சி.பொ. கோபிநாத்தும் சிறந்த ஒரு இணைப்பாட்டத்தை வழங்கினோம், எனினும் நான் தேவையற்ற விதமாக தலைக்கு மேல் சென்ற பந்தை பைன்லெக் பக்கமாக திருப்ப முயற்சிக்க அது Top Edge ஆக மாறி வரோவினால் பிடியெடுக்கப்பட்டதும், கோபிநாத் முக்கியமான தருணத்தில் ரன்அவுட் ஆனதாலும் போட்டியை நாம் 6 ஓட்டங்களால் தோற்க நேரிட்டது. தலைவர் அனுதினன் 4 விக்கட்டுகளை எடுத்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார். திருமலைக்குஞ்சு பவனும் சிறப்பாக பந்து வீசினார்.

*முதலாம் போட்டியில் தோற்றதால் எப்படியும் வென்றுவிட வேண்டும் என்னும் உத்வேகத்தோடு நாம் இரண்டாவது ஆட்டத்தில் மைதானத்தில் இறங்கினோம். முன்னைய போட்டியோடு ஒப்பிடுகையில் இம்முறை சிறப்பாக பந்து வீசினோம், ஆனால் களத்தடுப்பில் பல பிடிகளை விட்டு எமது உலக தரத்தை வெளிக்காட்டினோம். கடந்த போட்டியில் 4 விக்கட்டுகளை எடுத்த லோஷன் இம்முறை 5விக்கட்டுகளை எடுத்தார். இதன் காரணமாக அனுதினன் அணியினர் 79 ஒட்டங்களுக்கு கட்டுபடுத்தினோம். (அவ்வணியின் முக்கிய ஆட்டக்காரர் ஜனாவின் பிடியை பல கிலோமீற்றர் ஒடி சென்று பிடித்த யோகாவின் அதி சிறந்த பிடியும் ஓட்ட எண்ணிக்கையை மட்டுபடுத்த ஒரு முக்கிய காரணம் என கிரிக்இன்போவில் ரிச்சி பேனோ சொல்லியிருக்கிறார்), மேலும் பால்குடி மற்றும் வதீஸ் ஆகியோரின் 2 சிறப்பான பிடிகளும் எங்களுக்கு விக்கட்டுகளை பெற்று தந்தன. இம்முறை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தரமுயர்த்தப்பட்ட கோபிநாத் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டம் ஆடி எமது அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். ஆட்டமிழக்காமல் அரைச்சதம் பெற்ற கோபிநாத்தோடு லோஷனும் போட்டியின் முடிவுவரை களத்தில் இருந்தனர். 

டிஸ்கி
* போட்டோ போட்டு எல்லாரையும் கலாய்க்கும் பவன் மைதானத்தில் அமைதியின் சிகரமாய் இருந்தார்.

* தரங்கம் புகழ் சுபாங்கன் அடித்த பந்து சிக்சருக்கு சென்றுவிட்டது என மகிழ்ந்திருந்தால் அப்பந்தை மது பிடியெடுத்து சிக்சரை விக்கட்டாக மாற்றினார். 

* அனலிஸ்ட் கோபி அனுதினனின் ஷார்ட் பிட்ச் பந்துக்கு ரொக்கட் விட்டார்.

* பிரபல வேக பந்து வீச்சாளர் யோகா (நான்தான்) வீசிய அதிகமான பந்துக்கள் புல்பிட்சாகவே சென்றது.

* கூல் போய் பந்து தடுக்கும் இடங்களுக்கு பந்து செல்லவேயில்லை, காரணம் ஏதேனும் ஸ்பொட் பிக்சிங்கா?

* மருதமூரானின் பந்து வீச்சு பாணி மிக அழகாக இருந்தது, போட்டியை பார்க்க வந்திருந்த ரசிகைகள் அனைவரும் அவரையே வைத்த கண் பார்க்காமல்  பார்த்து ரசித்தனர். (வந்திருந்தால்)

* போட்டிக்காக இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து பல பதிவர்கள் வந்திருந்தது போட்டியின் ஏற்பாட்டாளர்களுக்கு அதிக உந்து சக்தியை வழங்கியது என்றால் அது மிகையாகாது. எதிர்காலத்தில் இவ்வாறான ஏற்பாடுகளை முன்னெடுக்க இவர்கள் முயல்வார்கள் என நினைக்கிறேன்

* கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததை போல், நானும் அனலிஸ்ட் கன்கொன்னின் உதவியுடன் மைதானத்தை கண்டறிந்தேன். அதற்கு முதல் நாள் இரவு பெய்த மழையால் விளையாட முடியாமல் போய்விடுமோ என கவலைப்பட்டே கன்கொன் விடிய விடிய தூங்கமலிருந்ததாக பதிவுலீக்ஸ் தகவல்கள் தெரிவித்திருந்தன.

* நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராக வந்த “மதுயிசம்” புகழ் மதுவுக்கு மின்சார இணைப்பை மைதானத்திற்கு கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகியிருக்கும். ஆனாலும் தடைகற்களை எல்லாம் படிக்கல்லாக மாற்றிய மது போட்டியை செவ்வனே நேரடியாக ஒளிபரப்பினார். (இப்போட்டி நேரடியாக ஒளிபரப்பானதால் ஸ்டார் கிரிக்கட் சமகாலத்தில் ஒளிபரப்பிய ஆஷஸ் போட்டியை பலர் பார்க்காமல் விட்டு அவ் அலைவரிசைக்கு பாரிய நட்டம் ஏற்பட்டது வேறு விடயம்). இங்கிலாந்திலிருந்து எமது ஆட்டத்தை ரசித்த பதிவர் வந்தி அடிக்கடி எம்மோடு அரட்டையிலும் ஈடுபட்டார்.


நான் துடுப்பெடுத்தாடும் ஒரு காட்சி.

இரண்டாவது போட்டியில் வென்ற எமது அணியினர் மகிழ்ச்சியுடன்

முதலாவது போட்டியில் வெற்றி பெற்ற அணியினருடன் சேது ஐயா அவர்கள் உரையாடுகிறார். எமது அணியை சேர்ந்த லோஷனும் உரையாடலில் பங்கெடுக்கிறார்

ரிக்கி பொண்டிங் - சுய அறிக்கை Ver 2.0


முழுப் பெயர் - ரிக்கி தோமஸ் பொன்டிங்

செல்லப்பெயர் - Punter (அத சொல்ல மாட்டேன்)

ரொம்ப சந்தோஷபட்டது - தலைவனாக 2 உலக கோப்பை பெற்றது(அது ஒரு கனா காலம்)

பிடித்த பாடல் (முன்பு) - ராஜாவுககு ராஜா நான்தான்... (ம்ம் எப்படியிருந்த நான்?இப்ப என்னடானா, ஒன்னா விளையாண்ட ஷேன் வோன் கூட கலாய்க்கிறான்)


பிடித்த பாடல் (தற்போது) - நானொரு ராசியில்லா ராஜா... (அவ்வ் அழுதிடுவேன்)

முணுமுணுப்பது - இளைய தளபதி ரேஞ்சுக்கு நம்மள கலாய்க்கிறாங்களே! (ர் ர் ர் ர் நற நற)

எதிரி (வெளிப்படையாக) - லட்சுமன், சச்சின் (வயசாக வயசாக திறமை கூடுதே)

எதிரி (மனதில்) -இப்போதைக்கு ஹுரிட்ஸ் (அவன் பாவம் என்னா செய்வான், பந்து சுழலாததற்கு)

நண்பன் - யாருமே இல்லை,  (எல்லாம் கட்டதொர மாதிரியே இல்ல பார்க்கிறானுங்க)

எரிச்சல் - தரப்படுத்தலில் கீழிறங்கியது (மழை கூட வர மாட்டேங்குது)

நீண்ட நாள் சாதனை - தொடர் வெற்றிகள் பெற்றது (அது.. அப்ப)

தற்போதைய சாதனை - பெங்களுர் போட்டியின் 2ம் இனிங்சில் அருமையான ஆட்டம் (ஒரு நாதாரியும் சப்போர்ட் பண்ணல, இல்லாட்டி வென்றிருக்கலாம்)

கடுப்பு - வோன், ஹேடன், மெக்ரா, கில்லி, மாடின் நான் தலைவனாயிருக்கப்ப விலகியது (வௌங்க மாட்டாங்க)

பொறாமை -  சச்சினின் சதங்கள் (கிட்ட வர வர தூர போயிடுறான்)

வேதனை - பதவி விலக சொல்லுவது (அழுதுடுவேன்)



  ஒரு சீரியஸ் பதிவு போட்டதால மொக்கை பதிவுகளை மீணடும் போடுமாறு வேண்டி ஒபாமா, ஆர்னோல்ட் ஸ்வாஸ்நேர்,  பில் கிளிங்டன், பங்கி மூன் போன்றோர் கேட்டு கொண்டதால் நம்ம ரிக்கி பொண்டிங் பற்றிய மொக்கை பதிவு 

பி.கு- ரிக்கி பொன்டிங் இதை வாசித்து விட்டு இனி மேல் தேவையில்லை என நட்பை துண்டித்து கொண்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.


பி.பி.கு - இது சென்ற வருடம் ஏற்கனவே நான் எழுதிய பதிவு, இப்போதை எழுத எதுவும் வராதபடியால் மீண்டும் கொஞ்சம் மாற்றங்களுடன் பதிவிடுகிறேன்,


பி.பி.பி.கு- நான் ஒரு ரிக்கி பொண்டிங் ரசிகன், அவரது தற்போதைய நிலை கவலையளிக்கிறது.பி.கு- ரிக்கி பொன்டிங் இதை வாசித்து விட்டு இனி மேல் என் நட்பு தேவையில்லை என எனது நட்பை துண்டித்து கொண்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். 

நூடில்ஸ் (01.09.2010)


01நான் ADSL இணைய இணைப்பை பாவித்துவந்த நான் கடந்த மார்ச் மாதத்திலிருந்து Mobitel Broadband இணைய இணைபுக்கு மாறிவிட்டேன், மார்ச் மாதம் வாங்கிய இணைப்புக்கு இதுவரை ஒரு கட்டண பட்டியலையும் மொபிடெல் நிறுவனம் எனக்கு அனுப்பவில்லை, ஏதோ போனால் போகட்டும் என ஒவ்வொரு மாதமும் இணைய பாவனைக்கு என ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை கட்டி வந்தேன், இடையில் மொபிடெல் நிறுவனத்திற்கு சென்று இரு முறையும், தொலைபேசியில் ஒரு முறையும் எனக்கு பில் வரவில்லை என முறையீடும் செய்திருக்கிறேன், ஒவ்வொருமுறையும் அவர்கள் பில்லை தபாலில் அனுப்பியிருக்கிறோம், வராதது ஏனென பார்க்கிறோம் என நம்பிக்கையளிக்கும் வகையில் பதிலளித்தனர்


திடீரென கடந்த வாரம் எனது இணைய இணைப்பு இயங்கவில்லை கஸ்டமர் கெயாரை தொடர்பு கொண்டால் நான் கட்டணம் செலுத்த தவறியதால் எனது இணைப்பை துண்டித்து விட்டார்களாம், எவ்வளவு கட்டணம் என அறியாமல் எப்படி செலுத்துவதாம்? நேற்று தொடர்பு கொண்ட போது நான் ஈ-பில்லிங் (e-Bill) சேவையை தெரிவு செய்திருப்பதால் எனக்கு பில் அனுப்பவில்லை என சொன்னார்கள், அது எப்பவொ நான் முயற்சி செய்து பார்த்து மறந்து போனது, எனது பிரச்சினை என்னவென்றால் ”அவ்வளவு பெரிய நிறுவனத்திற்கு எனக்கு பில் வராததன் காரணத்தை கண்டுபிடிக்க 3 மாதம் ஆனதா?“ என்பதாகும். இதற்கே இப்படி என்றால் வேறு பெரிய ஒரு பிரச்சினை ஏற்பட்டிருப்பின் என்ன செய்வார்கள்? இந்த பிரச்சினையால் நான் வேறு ஒரு நிறுவன இணைய இணைப்புக்கு மாற யோசித்துள்ளேன்

------------------------------------------------------------------------------------------------------
சம்பின்ஸ் லீகில் இலங்கை வயம்ப அணிக்கு அனுசரனை வழங்குவதற்கு பாலியல் ஊக்குவித்தல் தொடர்பான மருந்துகளை விநியோகிக்கும் நிறுவனம் முன்வந்திருப்பது பலரது அதிருப்தியை சம்பாதித்துள்ளது.  என்னை கேட்டால் நானும் இது வேண்டாமென்றெ சொல்லுவேன், காரணம் அதிக பணம் கொடுப்பதற்காக யாரையும் ஏற்று கொள்ளலாமென்றில்லை. இவ்வாறான அதிக பணம் மீதான மோகமே பாகிஸ்தான் வீரர்களை லஞ்சம் வாங்கி ஸபொட் பிக்சிங் (தமிழ் வார்த்தை யாதோ?) செய்ய வழிவகுத்துள்ளது. ஆகவே பணமே விளையாட்டு என்பதை ஊக்குவிக்காமலிருக்க வேண்டும், இலங்கை கிரிக்கட் சபை இதை செய்யுமா?
------------------------------------------------------------------------------------------------------
கடந்த ஆகஸ்ட் 29ம் திகதி திருமண பந்தத்தில் இணைந்த “அறிந்ததும் அனுபவமும்” பதிவரும், சக்தி வானொலி அறிவிப்பளருமான டயானா சதாசக்திநாதன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். 
------------------------------------------------------------------------------------------------------
உயர்தர பரீட்சையின் போது பரீட்சை திணைக்களம் விட்ட தவறுகளால் பரீட்சை எழுதவியலாமல் போன இரு மாணவர்களை நேற்றைய தொலைக்காட்சி செய்தியில் பார்க்க கிடைத்தது, இனி எவ்வளவுதான் மன்னிப்பு கேட்டாலும் இழந்து போன அம்மாணவர்களது பரீட்சை கனவு நனவாகாது என்பது கசப்பான உண்மை கடந்த காலங்களில் வினாதாள்களில் தவறுகளை விட்ட பரீட்சைகள் திணைக்களம், இவ்வாறு மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடுவது கண்டிக்கதக்கது, சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா?

உயர்தர பரீட்சை பற்றிய இன்னொரு செய்தி, ஒரு மாணவி பரீட்சைக்கு விடையளிக்க நேரம் போதாமையால் தற்கொலை செய்து கொண்டாள் என்பது, இவ்வாறு பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தற்கொலை செய்வது தற்போது அதிகமாகிவிட்டது வருந்தத்தக்கது.
------------------------------------------------------------------------------------------------------
நேற்று மூட் சரியில்லை என மூஞ்சிப்புத்தகத்தில் ஸ்டேஸ் போட்டு சில நேரத்திலேயே தொலைபேசியில் தொடர்பு கொண்டு கனிவாக பேசிய நண்பர் பதிவர் “சிதறல்கள்” ரமேசுக்கு  எனது நன்றிகள், மே மாதம் எனது இணைய கணக்குகள் ஹேக் செய்யப்பட்டவுடன் என்னுடன் தொடர்பு கொண்டு எனக்கு உதவிய பதிவுலக நண்பர்கள, நேற்று தொடர்பு கொண்ட பதிவர் என பல சிறந்த நண்பர்களை தந்ததற்கு பதிவுலகிற்கு நன்றி சொல்கிறேன்.

------------------------------------------------------------------------------------------------------
இனிமேல் கிரிக்கட்டில் நடுவர்கள் இப்படிதான் இருக்க வேண்டி வருமோ?


நூடில்ஸ் (12.08.2010)

முதலாவது பதிவர் சந்திப்பு நடந்து இம்மாதத்துடன் ஒரு வருடமாகிறது, எங்கெங்கொ தனி தனியாக பதிவிட்டு கொண்டிருந்த இலங்கை தமிழ் பதிவர்களை ஒன்று சேர்த்த அந்த நிகழ்வுக்கு முக்கிய காரணமானது புல்லட் கண்ட பதிவர் சந்திப்பு பற்றிய கனவு பதிவு. இப்போது புல்லட் எழுதுவதை காணவில்லை, ஏனென்று தெரியவில்லை?, சீக்கிரம் பதிவுலகிற்கு வருமாறு புல்லட்டை கேட்டு கொள்கிறேன். 

---------------------------------------------------------------------------------

மேலும் இந்த ஆகஸ்ட் 31ம் திகதியுடன் ப்லொக்கருக்கு 11 வயதாகிறது. இம்முறை இலங்கை பதிவர்கள் அனைவரும் சேர்ந்து ப்லொக்கரின் பிறந்த நாளன்று கூகுல் குழுமத்தில் சந்திப்பொன்றை நடத்தினால் நல்லதென்று நினைக்கிறேன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

---------------------------------------------------------------------------------

இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் ஒரு நாள் கிரிக்கட் போட்டிகள் மீண்டும் தொடங்கி விட்டன, தொடர்ந்து இந்த இரண்டு அணிகளுக்கிடையில் போட்டிகள் நடப்பது எனக்கென்னவோ கிரிக்கட் பார்க்கும் ஆசையையே இல்லாமல் செய்து விட்டது.  மீண்டும் மொஹம்மட் யுசுப் பாகிஸதான் அணிக்கு விளையாட போகிறார், “மீண்டும் யுசுப்”, இவர் எத்தனை முறை ஓய்வு பெற்றார் என்பதை இவரே மறந்திருப்பார் என நினைக்கிறேன். உலகத்திலே புரிந்து கொள்ள முடியாதது இரண்டு விடயங்கள் என நினைக்கிறேன், முதலாவது பெண்களின் மனது அடுத்தது பாகிஸ்தான் கிரிக்கட் சபை எடுக்கும் முடிவுகள்.

---------------------------------------------------------------------------------

எந்திரன் பட பாடல்கள் கலக்கோ கலக்கல், மணிரத்தினம் படங்களை போல் ரகுமானுக்கு சங்கர் படங்களில் வித்தியாசமான இசையை வழங்கமுடியாது காரணம், சங்கர் படங்களில் ஒரு குறிப்பிட்ட பார்முலாவிற்குதான் இசையமைக்க முடியும், அதிலும் ரகுமான் ஸ்கோர் பண்ணியிருப்பது மகிழ்ச்சியே. “புதிய மனிதா” பாடலை கேட்கும் போது எஸ்.பீ.பாலசுப்ரமணியத்திற்கு இன்னும் 20 வயதோ என எண்ண தோணுகிறது. மனுஷனின் குரல் இன்னும் இளமையாகி கொண்டே போகிறது. அவர் இன்னும் 100 வருடங்கள் வாழ்ந்து பல பாடல்களை தர வேண்டும்.

---------------------------------------------------------------------------------

தஞ்சை பெருங்கோயிலின் 1000மாவது வருட நிகழ்வை தமிழக அரசு கொண்டாட போகிறதாம், பாவம் தமிழக மக்கள் கோயிலும் கருணாநிதியின் பெருமைகளை கேட்க போகிறார்கள், அதில் எனக்கொரு சந்தேகம் தஞ்சை பெருங்கோயிலை கட்டியது கருணாநிதியின் பாட்டன் என சொல்ல போகிறார்களோ?
---------------------------------------------------------------------------------

கிரிக் இன்போ இணைய தளத்தில் வெளியான இரண்டு கார்ட்டுன்கள் கீழே



முரளி - சர்ச்சைகளின் நாயகன்

மு.கு.
அறியாத வயதில் நான் முழுதாக பார்த்த முதல் டெஸ்ட் போட்டி. 1992ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இலங்கை அவுஸ்திரேலிய முதலாம் டெஸ்ட் போட்டி ஆகும். அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 256 ஓட்டங்களை பெற்றது, இலங்கை துடுப்பெடுத்தாடுகையில் முதல் முறையாக இலங்கைக்காக விளையாடிய ரொமேஷ் களுவித்தாரன 26 பவுண்ரிகளுடன் 132 ஓட்டங்களை பெற்று அக்காலத்தில் இமாலய ஓட்டமாக கருதப்பட்ட 547 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா ஒரளவுக்கு சுதாகரித்து ஆடி இலங்கைக்கு வெற்றி பெற இலக்காக 180ஆக வைத்தது. கடைசி நாள் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானது என்பதையறியாத நான் இலங்கை இலகுவாக போட்டியில் வெல்லும் என நினைத்திருந்தேன், ஆனால் இலங்கைக்கு பெற முடிந்ததோ 164 ஓட்டங்களை தான், அப்போட்டி தோல்வியின் பின் அன்று முழு நாளும் அழுதேன். அப்போட்டியில் கடைசியாக ஆட்டமிழந்த ரஞ்சித் மதுருசிங்க என்னும் சுழல் பந்து வீச்சாளர் மீது எனக்கும் இன்னும் ஒரு கோவமிருக்கிறது. 

இரண்டாவது போட்டியில் மதுருசிங்கவை நீக்கி இலங்கை தேர்வு குழுவினர் முரளிதரனுக்கு இடமளித்தது தனிப்பட்ட முறையில் எனக்கு அதிக மகிழ்ச்சியை தந்தது. அன்று முதல் இன்றுவரை அந்த முரளி என்னும் மாயக்காரனை நான் ரசித்து வந்திருக்கிறேன்.

முரளி பற்றி ஏராளமான சர்ச்சைகள் வந்திருக்கின்றன, அவற்றில் அநேகமானவை முரளி பற்றிய பொறாமையினால் வந்தவையே, அவற்றில் சிலவும் அதன் பற்றிய எனது கருத்துக்களும்

சர்ச்சை 1.
முரளி பங்களாதேஷ், சிம்பாபே போன்ற பலம் குன்றிய அணிகளுடனே அதிகம் விக்கட்டுகள் சரித்திருக்கிறார்.

இலங்கை அதிகம் டெஸ்ட் விளையாடும் அணிகளுடன் தான் அதிகம் விக்கட்டுகள் விக்கட்டுகளை பெறலாம், முரளி பற்றிய பயத்தினாலோ அல்லது இலங்கை பற்றிய பயத்தினாலோ இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா இலங்கைக்கு அதிக போட்டிகளை வழங்குவதில்லை. அப்படியிருக்கும் போது அதிகம் விளையாடாத நாடுகளுடன் முரளி எப்படி அதிகம் விக்கட்டுகளை சாய்ப்பார்?

சிம்பாவே, பங்களாதேஷ் அணிகளை போலவே இங்கிலாந்து அணியும் சுழல் பந்து வீச்சாளர்களை சந்திப்பதில் பயப்படும் அணியே. அது முரளி இங்கிலாந்துக்கு எதிராக செய்த சாதனைகளிலிருந்து தெரிந்திருக்கும். அப்படியாயின் ஷேன் வோர்ன் இங்கிலாந்துக்கு எதிராக பெற்ற விக்கட்டுகள் எல்லாம் சாதாரணமானதா? (வோர்ன் என்னும் அற்புத பந்து வீச்சாளரை நான் குறைத்து மதிப்பிடவில்லை. நான் பார்த்து வியந்த பந்துவீச்சாளர்களில் வோர்னும் ஒருவர்).

இன்னொரு முக்கிய விடயம் டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் 50 விக்கட்டுகளை பெற்ற ஒரே வீரர் முரளியாகும். இப்படியிருக்கும்  போது முரளியின் சாதனை பங்களாதேஷ், சிம்பாபே அணிகளுக்கு எதிராக மட்டுமே என எப்படி கூறலாம்.

சர்ச்சை 2
முரளி பந்தை எறிகிறார்.

முரளி என்னும் பந்து வீச்சாளரை கண்டு பொறாமைப்பட்ட வெள்ளையர்கள் அவரை கட்டுபடுத்த செய்த சதியே அவரை எறி பந்து வீச்சாளர் கூறியது, முரளியை அவுஸ்திரேலியர்கள் பந்தை எறிபவர் என கூறியது ஒரு திட்டமிட்ட சதியேயாகும். அவர் வீசிய லெக்ஸ்பின் பந்துகளுக்கும் எறிவதாக நோபோல் வழங்கப்பட்டதே அதற்கு சான்றாகும். லெக்ஸ்பின் பந்துகளை எறியவியலாது என்பது கிரிக்கட் பற்றி அறிந்த கற்றுக்குட்டிகளுக்கும் தெரியும். முரளிதரனின் பந்துவீச்சை குறை கூறும் அவசரத்தில் நடுவர் ரோஸ் எமர்சன் அவர் வீசிய லெக்ஸ்பின் பந்துகளையும் எறிவதாக கூறியது நகைப்புக்குறிய விடயமாகும்.

எத்தனையோ பரிசோதனைகளுக்கு முகம் கொடுத்து தன்னை நிரூபித்துள்ள முரளியைவிட பிரெட்லீ அதிக கோணத்தில் (Angle) பந்தை வீசுவது  அவுஸ்திரேலிய பரிசோதனை கூடங்களிலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சை 3
முரளி இலங்கையிலேயே அதிக விக்கட்டுகளை பெற்றிருக்கிறார்.

இலங்கைக்காக விளையாடும் பந்துவீச்சாளர் தான் அதிகம் விளையாடிய இலங்கை மைதானங்களில் விக்கட்டுகளை பெறாமல் சோமாலியாவுக்கு சென்றா விக்கட்டுகளை பெறுவது.

சர்ச்சை 4
முரளி தமிழில் பேசுவது இல்லை, சிங்களம் மட்டுமே பேசுகிறார். அவர் தமிழர்களை மதிப்பதில்லை.

முதலில் விளையாட்டு வீரர்களை வீரர்களாக மாத்திரம் பாருங்கள், இனம், மதம், சாதி கொண்டு பிரிக்காதீர்கள்.

முரளி தமிழில் பேசாமல் தமிழகத்தை சேர்ந்த தனது மனைவிடன் சிங்களத்திலா பேசியிருப்பார், இல்லை மதிமலர் சிங்களம் பயின்ற பின்னரே அவரை திருமணம் செய்தார். யாருடன் எம்மொழியில் தனது கருத்தை தெரிவிக்க முடியுமோ அவருடன் அம்மொழியில் கதைத்தால் போதும். அவரது தாய் வெற்றி வானொலியின் அவதாரத்தில் கூறியது போல் முரளியுடன் தமிழில் கதைத்தால் தமிழில் கதைப்பார், சிங்களத்தில் கதைத்தால் சிங்களத்தில் கதைப்பார், அல்லது தசாவதார இசை வெளியீட்டு விழாவில் ஜாக்கி சானின் முன்னிலையில் கருணாநிதி தமிழில் ஜாக்கியை வாழ்த்தியதை போல பேச வேண்டும் என்கிறீர்களா? 



பி.கு. (அன்று கருணாநிதி பேசிய தமிழ் எங்களுக்கு விளங்க வில்லை, ஆனால் எல்லாம் விளங்கியயது போல் எப்படி ஜாக்கி சான் தலையசைத்து சிரித்தாரோ தெரியவில்லை)

சாதனை வீரர் முரளி - ஒரு படமும் படம் சார்ந்த பதிவும்

ஒரு வேக பந்து வீச்சாளரை போன்ற முக பாவம், கண்களாலே துடுப்பாட்டவீரரை கலவரப்படுத்துவதால்தான் இவரை சிரிக்கும் வில்லன் என்று அழைக்கிறார்களோ?




கிட்டதட்ட 20 வருடமாக விளையாண்டாலும் இன்னமும் சின்ன பிள்ளை போல் துள்ளி குதிக்கும் சிறுவனாய் முர



மாயக்காரன் முரளியின் அப்பீல்



இந்த அடியை யாராலும் கொப்பி பண்ண முடியாது, முரளி துடுப்பெடுத்தாடுவதை பார்க்க என்னை போல் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.



எல்லாரையும் கிளீன் போல்டாக்கிய முரளியை கிளீன் போல்டாக்கிய மதிமலர் 



“வளரும் பயிர் முளையிலே தெரியும்”, சிறந்த பாடசாலை கிரிக்கட் வீரராக பரிசு பெறும் முரளி




இலங்கையில் சீனியர் முதல் ஜுனியர் வரை அனைத்து தரப்பினரையும் நண்பராக கொண்ட முரளி



முரளியின் இறுதி டெஸ்டன்று காலி கோட்டையை அலங்கரிக்கும் முரளியின் பதாகையை காவல் காக்கும் படை வீரர்


தனது பந்தில் தானே பிடியெடுக்கும் முரளி



கிரிக்கட்டில் எதிரணி வீரர்களுடன் நட்பாயிருப்பதில் உலகில் முதலிடம் முரளிக்குத்தான்




எத்தனை எத்தனை சோதனைகள், அத்தனையையும் சாதனைகளாக மாற்றிய முரளி தன்னை எறிபவர் அல்ல என நிரூபிக்கும் போது




முரளியின் வாழ்வில் முக்கிய இடம் வகிக்கும் அர்ஜுன முரளிக்காக வாதாடுகிறார்




சாதனை வீரனை சகாக்கள் வரவேற்கிறார்கள்



முரளியின் வாழ்வில் மறக்க முடியாத பொக்சிங் டே டெஸ்ட் போட்டி, பொறாமைக்கார டெரல் ஹெயாரினால் தண்டிக்கப்படும் போது.


உலகின் மிக சிறந்த ஆப்ஸ்பின் பந்து வீச்சாளர் உலகின் மிக சிறந்த லெக்ஸ்பின் பந்து வீச்சாளருடன்



பந்து சிக்சருக்கு போய் விட்டது, துடுப்பெடுத்தாடிய முரளியோ கீழே



90களின் நடுப்பகுதயில் நம்மவர் முரளி


ஓய்வை அறிவிக்கும் கவலையில் முரளி


இனிமேல் இனிய இல்லற வாழ்வுக்கு முதலிடம் கொடுக்கவிருக்கும் முரளி தம்பதியினர் மகிழ்ச்சியாய்

எரிந்து சாம்பலாகினாலும் எழுந்து வரும் ஃபீனிக்ஸ் பறவை போல் சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றிய முரளியின் வாழ்க்கை சிறப்புற வாழ்த்துகிறேன்

கிரிக்கட் - பிழையான தீர்ப்புகளினால் இந்தியா தோற்க வேண்டும்

  
இலங்கை இந்திய அணிகள் தனது முதலாவது டெஸ்ட் போட்டியை இன்று விளையாடுகின்றன. எனது எதிர்பார்ப்பெல்லாம் இத்தொடரில் இந்தியா நடுவர்களின் பிழையான தீர்ப்பினால் படு தோல்வி தோற்கவேண்டும் என்பதேயாகும், ஆனாலும் இலங்கையுடனான போட்டியில் ஐசீசீ நடுவர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்படுவார்களா என்பது கேள்விகுறியே?



நான் இவ்வளவும் கூறுவதற்கு காரணம் இந்திய அணியினர் இத்தொடரில் நடுவர்களின் தீர்ப்புப்பை 3வது நடுவருக்கு பரிசோதிக்க வழங்கும் UDRS எனப்படும் நடுவர்களின் தீர்ப்பை மாற்றும் முறையை பாவிக்க எதிர்ப்பு தெரிவித்திருப்பதனாலாகும். தொழிநுட்ப வசதிகள் மிகுந்துள்ள இக்காலப்பகுதியில் இவ்வாறான வசதிகளை பாவிக்க வேண்டும், அதை தவிர்த்து இவ்வாறு இந்திய கிரிக்கட் சபை இம்முறைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது சாதாரணமாகாது. 

உதாரணமாக இந்தியா இலங்கையை வென்று டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாமிடத்திற்கு வந்த தொடரில்  கடைசி டெஸ்டில் செவாக்குக்கு ஆட்டமிழப்புக்கு ஆட்டமிழப்பு வழங்காமலும், மிக சிறந்த போமிலிருந்த டில்சானுக்கு எதிராக வழங்கப்பட்ட பிழையான ஆட்டமிழப்புகளும் போட்டியின் முடிவை தீர்மானித்தது என்பது பலரும் அறிந்ததாகும். இவ்வாறு தவறுகள் நடைபெறாத சிறந்த போட்டிகளையே நாங்கள் பார்க்க விரும்புகிறோம். கடந்த முறை இந்தியாவுக்கு எதிரான இலங்கையில் நடைபெற்ற தொடரில் இம் UDRS முறை மூலம் இலங்கை 11 பிழையான தீர்ப்புகளை மாற்றியமை குறிப்பிடதக்கதாகும், இந்திய அணி 1 பிழையான தீர்ப்பையே மாற்றியது, இதற்கு காரணம் அணியாக இல்லாமல் தனிப்பட்ட வீரர்களுக்காகவே இம் UDRS முறையை பயன்படுத்தியது. கும்ப்ளே ஏராளமான சரியான முடிவுளை தனக்கு தேவையான முறையில் மாற்ற முயற்சித்தமையே இந்திய அணிக்கு பிழையான ஆரம்பத்தை UDRS முறையில் ஏற்பட்டது எனலாம்.
ஐசீசீயின் சமச்சீரற்ற தன்மையினாலேயே இவ்வாறான விடயங்கள் ஏற்படுகின்றன. இயன் சேப்பல் கிரிக்இன்போவில் எழுதியபடி UDRS நடை முறைபடுத்தப்படுவது ஒன்று சகல அணிகளுக்கும் கட்டாயமாக்கப்படல் வேண்டும், அல்லது இம்முறை இல்லாமலாக்கப்படல் வேண்டும். இல்லாமல் ஒரு தொடருக்கு UDRS முறை இருப்பதும், இன்னொரு தொடருக்கு UDRS இல்லாமலிருப்பதும் பிழையான விடயமாகும். பணபலமிக்க இந்திய கிரிக்கட் சபைக்கு ஐசீசீயில் இருக்கும் முக்கியத்துவத்தினால் இது சாத்தியப்படுமா என்பது சந்தேகமே? ஏனெனில் வீரர்களுக்கு ஊக்க மருந்து பாவிப்பதற்கு எதிரான WADA ஒப்பந்தத்தில் இந்திய அணி வீரர்கள் கையெழுத்திடாததினால் இன்னும் இவ்வொப்பந்தம் கிடப்பில் காணப்படுவது குறிப்பிடதக்கதாகும்.


இப்பதிவை பார்த்து இந்திய ரசிகர்கள் என்மேல் பாயக்கூடும் அவர்களுக்காகதான் ஆரம்பத்திலேயே “பிழையான தீர்ப்புகளினால் இந்தியா தோற்க வேண்டும் என எழுதினேன், அப்போது அவர்களின் UDRS மீதான பார்வை மாறும்.

ஐ.பி.எல்லில் சாதித்த இந்திய இளம் வீரர்கள் சிம்பாபேயிடம் தோல்வி கண்டது ஏன்?


ஐ.பி.எல்லில் ஆறும் நான்குமாகவே அடித்த தினேஷ் கார்த்திக், ரெய்னா, முரளி விஜய் போன்ற வீரர்கள் சிம்பாபே தொடரில் சாதிக்காமல் போனதற்கு என்ன காரணம் என யோசித்து பார்த்தால், டுவென்டி டுவென்டி ஒரு முழுமையான கிரிக்கட் வடிவமல்ல. அது இன்ஸ்ட்ண்ட் நூடுல்ஸ் போன்றது. அவசரத்துக்கு சாப்பிடலாம் எனினும் தொடர்ந்து அதை கொண்டு பசியாற முடியாது.

எதிர்கால சிறந்த கிரிக்கட் வீரர்களை உருவாக்க வேண்டுமானால் சிறிய வயதில் அவர்கள் 50 ஓவர் போட்டிகளில் விளையாடுவதை குறைக்க வேண்டும் என எங்களது பாடசாலை கிரிக்கட் பயிற்சியாளர் அந்த காலத்தில் சொல்லிய விடயம் எவ்வளவு உண்மை என்பதை மறுக்கவியலாது. 50 ஓவர் போட்டிகளே இப்படியாக மாறினால் 20 ஓவர் போட்டிகளின் அவர்களை எவ்வாறு மாற்றிவிடும் என யோசிக்க தோன்றுகிறது.

ஆறு, நான்கு அடிப்பதுதான் துடுப்பாட்டமும், துடுப்பாட்ட வீரர்களை ஓட்டங்களை எடுக்கவிடாமல் கட்டுபடுத்துவதுதான் பந்துவீச்சும் என விளையாடும் 20-20 போட்டிகள் 25 வருடங்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டிருந்தால் இன்று சச்சின் டெண்டுல்கார், சங்கக்கார, அரவிந்த டீ சில்வா, கவாஸ்கர், டிராவிட், லாரா போன்ற துடுப்பாட்ட வீரர்களும் முரளிதரன், கபில்தேவ், சேர். ரிச்சர்ட் ஹாட்லி, வசீம் அக்ரம், இம்ரான் கான் போன்ற பந்து வீச்சாளர்களும் உலகத்திற்கு கிடைக்காமல் போயிருப்பார்கள்.

இந்தியா இத்தொடரில் இறுதி போட்டிக்கு செல்லாமல் வெளியேறியது மற்ற எல்லா நாடுகளை விடவும் இந்தியாவிற்கு இது பெரிய ஒரு அபாய அறிவிப்பு மணி என எடுத்து கொள்ளலாம். காரணம் ஐ.பி.எல் என்னும் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறியாக கொண்டுள்ள தொடர் முழுக்க முழுக்க இந்திய கிரிக்கட் சபையால் நடாத்தப்படுவதாலாகும்.

இரண்டாம் தர இந்திய அணியை அனுப்பியதால் தோல்வியுற்றோம் என சப்பை காரணம் இந்திய தெரிவாளர்களால் சொல்ல முடியாது ஏனெனில், இத்தொடரில் இந்தியாவை இருமுறை தோலவியுற செய்த சிம்பாபே அணியின் வீரர்களை பார்க்கும் போது, இத்தொடரில் விளையாடிய பல இந்திய வீரர்கள் சர்வதேச போட்டிகளில் அனுபவம் உள்ளவர்களே ஆகும். மேலும் இந்திய கிரிக்கட் சபையின் சொத்தின் ஐநூறில் ஒரு பங்கு கூட இல்லாத சிம்பாபே கிரிக்கட் சபையின் கிரிக்கட் கட்டமைப்பு உலகறிந்ததே. எனவே உள்நாட்டு கிரிக்கட் போட்டிகளிற்கு பயிற்சி பெறவே சிறந்த கட்டமைப்பு இல்லாத சிம்பாபே அணி இந்திய இளம் வீரர்களை (அனைவரும் ஐ.பி.எல் போட்டிகளில் திறமை காட்டிய வீரர்கள்) கொண்ட அணியை வெற்றி கொண்டதற்கு முக்கிய காரணமாக நான் காண்பது, இன்னமும் 20-20 மோகம் சிம்பாபே அணிக்கு ஏற்படவில்லை என்பதாகும். இன்னமும் 20-20 போட்டிகளை ஐசீசீ ஆதரித்து வளர்த்தெடுத்தால் கிரிக்கட் இன்னும் பாதாளத்தை நோக்கியே விழும்.


நல்ல வேளை சச்சின் தெண்டுல்கார் 20-20 சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். யோசிக்க தெரிந்த அந்த வீரர் தொடர்ந்து சிறப்பாக விளையாட கூடிய மனநிலையை தொடர்ந்து தக்கவைத்து கொள்ளவெ அந்த முடிவை எடுத்திருப்பார் என நினைக்கிறேன்.

முன்னொரு போதும் இப்படியான பதிவெழுதிய போது, இந்திய கிரிக்கட் சபை மீது கொண்ட பொறாமையால்தான் இவ்வாறு எழுதினேன் கருத்து தெரிவித்த நண்பர்கள் இப்போது என்ன சொல்ல போகிறார்கள்?


இலங்கை அணிக்கு இந்திய அணியின் தோல்வியிலிருந்து படிக்க வேண்டிய விடயங்கள் ஏராளமாக உள்ளன. இந்த இலங்கை அணி ஒரு அவுஸ்திரேலியா இளம் அணியிடம் விளையாடியிருந்தால் முடிவு வேறுவிதமாக கிடைத்திருக்கலாம். எளியவர்களின் கூட்டத்தில் வலியவனாக இருக்கும் இலங்கை வீரர்களில் பலரும் 20-20 மோகத்திற்கு உட்பட்டவர்களே. எனக்கு தெரிந்து இலங்கை கிரிக்கட் சபை இலங்கை வீரர்களை ஐ.பி.எல் போன்ற வெளிநாட்டு 20-20 போட்டி தொடர்களில் விளையாடுவதை தடுக்க முயல வேண்டும். பணக்கார இந்திய கிரிக்கட் சபைக்கு எதிராக சுண்டைக்காய் கிரிக்கட் சபையான இலங்கை கிரிக்கட் சபைக்கு இது முடியுமான காரியமா என தெரியவில்லை? கவுண்டி போட்டிகளில் விளையாண்டு தனது துடுப்பாட்டத்தை மெறுகேற்றிய அரவிந்த டீ சில்வா போன்ற வீரர்கள் விளையாண்ட போட்டி தொடரல்ல வெளிநாட்டு 20-20 கிரிக்கட் லீக்குகள்.

இலங்கை பாடசாலை மட்ட கிரிக்கட் போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை, அவற்றின் தரமும் அவ்வாறே. அதை நேற்று வந்த தினேஷ் சந்திமால் தொடக்கம் அந்த கால அர்ஜுன ரணதுங்க வரை நிரூபித்திருக்கிறார்கள். இப்பாடசாலை விளையாட்டுகளின் தரத்தை தொடர்ந்து பேண வேண்டுமானால் பாடசாலைகளில் 20-20 கிரிக்கட் போட்டிகளை தடை செய்ய வேண்டும்.

20-20 போட்டிகள் எப்பவாவது விளையாண்டால் அது ஏற்று கொள்ள கூடிய விடயம் தான் ஆனால் எந்நாளும் அதை விளையாடுவதை, அதற்காக டெஸ்ட் போட்டிகளை எதிர்கால கிரிக்கட் அட்டவணையிலிருந்து ஒதுக்குவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். இன்னமும் டெஸ்ட் போட்டிகள் தான் சிறந்த வகை கிரிக்கட் போட்டிகள் என்பதை நம்புகிறேன்.

நண்பர்களே நீங்களும் உங்களது கருத்துகளை சொல்லிவிட்டு போங்கள்

Facebook Badge