இசைப்புயலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து

எத்தனை நாட்கள் உன் பாடல் கேட்டு தூங்காமலிருந்திருக்கிறேன்
எத்தனை முறை இசை என்பது இவ்வளவு இனிமையானது என
உணர்த்தியிருக்கிறாய்.
அடுத்த வீட்டுக்கு சென்றாலே
ஆங்கிலம் பேசி தாய் மொழி மறக்கும்
மக்கள் அதிகமுள்ள காலத்தில்
உலக மேடையில் உன் தாய்
மொழியால்
நன்றி சொன்னவன் நீ...
நிறை குடம் தளம்பாது என்பதை
நான் உன்னில் கண்டு கொண்டேன்..
முயற்சித்தால் முடியாதது எதுவுமில்லை
என உலகுக்கு காட்டியவன் நீ
எல்லாரும் செய்வதை நீயும் செய்திருந்தால்
ஆயிரத்தில் ஒருத்தானாய் லட்சத்தில் ஒருத்தானாய்
இருந்திருப்பாய்....
எதையுமே தனித்து, ரசித்து செய்தவதால்
உலகுக்கே ஒருத்தனாய் மாறி விட்டாய்...
உன் மீது விழும் விமர்சனங்களுக்கு
புன்னகையாலும், நன் இசையாலும்
பதில் சொல்லுகிறாய்...

உன்னளவிற்கு நான் யாரையுமே வெறித்தனமாக
பின்பற்றியதில்லை, என்றைக்குமே நீதான்
என் ஹீரோ..

அல்லா ரக்கா ரஹ்மானே...
உனக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
இன்னும் பல்லாண்டு காலம்
நீயும் உன் இசையும் வாழ
”எல்லா புகழும் கொண்ட இறைவனை”
பிரார்த்திக்கிறேன்

Happy Birthday Ar Rahman Sir.

Facebook Badge