ரோஷன் - சுய அறிக்கை

உலக பிரபலங்களை கலாய்த்து போரடித்துவிட்டது, அதனால் இம்முறை உள்ளுர் பிரபலம் ஒருத்தரை கலாய்ப்போமா?
முழுப் பெயர் - ரோஷன் (முழுப்பெயர் எழுதினால் மூச்சு வாங்கும்)

செல்லப்பெயர் - இப்போதைக்கு விக்கிரமாதித்தன் (காரணம் அனைவருக்கும் தெரியும்

ரொம்ப சந்தோஷபட்டது - ஹெட்ரிக் எடுத்த போது(நல்ல வேளை ஸ்பொட் பிக்சிங் என யாரும் சொல்லல)

பிடித்த பாடல் (இன்று) - ஐலே ஐலே குத்துது கொடையுது... (யாருக்கு குத்துது? யாருக்கு கொடையுது?)


பிடித்த பாடல் (எப்போதும்) - நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்... (அதுவும் கிரிக்கட்டில் நடந்துவிட்டால், அவ்வளவுதான்)

பாசக்கார நண்பன் - மந்தி வயு (புனைவு கூட எழுதிட்டோமுல்ல)

நீண்ட நாள் சாதனை - கிரிக்கட் போட்டி எதிர்வுகூறல்கள் நேர் மாறாக பலித்தல் (யப்பா ஒரு மாதிரி இந்தியா வெல்லும் என கூறி நியுசிலாந்தை காப்பாத்திட்டம்)

தற்போதைய சாதனை - ”கிறிஸ் கேயில் லாராவின் சாதனையை உடைப்பாரா?” என கேட்டு மூஞ்சி புத்தகத்தி அப்டேட்டி லாராவை காப்பாற்றியது(லாரா போனில் வாழ்த்து தெரிவித்தது மறக்க முடியாத விடயம்)

கடுப்பு - சில சமயங்களில் எதிர்கூறல் பலித்துவிடுதல் (எப்பிடிதானோ தெரியல)

பொழுது போக்கு - பதிவெழுதுவது (சில சமயம் நடுராத்திரியிலும் பொழுது போக்குவமுல்ல)

பி.கு ரொம்ப நாளாக இலங்கை பதிவுகளில் கும்மி இல்லாமலிருப்பதால் இப்பதிவை எழுதி உங்களது கும்மிகளுக்கு சமர்ப்பிக்கிறேன். இப்பதிவு யாரையும் குறித்து எழுதப்பட்டதல்ல என தெரிவிக்க விருப்பம்தான், ஆனாலும் நம்பவா போறீங்க. 

இந்த பிரபலத்த கும்ம உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த நீங்கள் தயாரா?
டீலா நோடீலா?

Facebook Badge