நூடுல்ஸ் (30-06-2010)





எனது மசாலா பதிவுகளுக்கு என்ன பெயர் வைப்பது என முன்னர் யோசித்திருந்தபோது லோஷன் நூடுல்ஸ் என வையுங்கள் என வேடிக்கையாக கூறியதையடுத்தே எனது பதிவுக்கு நூடுல்ஸ் என வைத்தேன். அந்த நாமகரணம் செய்த அதிர்ஷடமோ தெரியவில்லை, இன்று எனக்கும் இன்னும் 2 நண்பர்களுக்கும் சேர்த்து நூடுல்ஸ் சமைக்க போகிறேன். பாவம் அந்த இரண்டு நண்பர்களும்.

-------------------------------------------

செம் மொழி மாநாட்டு நிகழ்ச்சி எதையும் பார்க்க கிடைக்காக கவலையில் இருந்த நான் வார இறுதியில் வீட்டுக்கு சென்றிருந்த போது கலைஞர் தொலைக்காட்சியில் செம்மொழி மாநாட்டு நிகழ்வுகளை ஒளிபரப்புவதை பார்த்தேன். ஒரே ஒரு நிகழ்ச்சி பார்த்து நொந்து விட்டேன்.

நான் பார்த்த நிகழ்ச்சி சாலமன் பாப்பையாவின் தலைமையிலான பட்டிமன்றம், அதன் தலைப்பு “தமிழை வளர்த்தது சின்னத்திரை, வெள்ளித்திரை, எழுத்துதுறை” என்பதாகும். ஆனால் அங்கு பட்டிமன்றத்தில் சகலரும் வாதிட்டது கருணாநிதி வளர்த்தது வெள்ளித்திரையை, சின்னத்திரையை மற்றும் எழுத்துத்திரையை என்னும் தலைப்பிலாகும். இங்கு கதைத்த பலரும் கருணாநிதி என்னும் மனிதனை காக்காய் பிடிப்பதையே செய்தார்கள், இதில் லியோனி, சந்திரசேகர், எஸ்.வி.சேகர், பாரதிராஜா போன்றோர் எதை கதைத்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். லியோனி எல்லாம் ஒரு பேச்சாளராகவே எனக்கு தெரியவில்லை, சினிமா பற்றி கதைக்காமல் சினிமா பாட்டு பாடாமல் பேச சொன்னால் மனுஷன் ஊரை விட்டு ஓடிவிடுவார் என நினைக்கிறேன். இவர்களை எங்கள் ஊர்களில் கல்லூரி விவாதங்களில் பேசுவோரிடம் பயிற்சிக்கு அனுப்பலாம்.

உலக தமிழர்களின் தலைவராக கருணாநிதி என்னும் பேராசை பிடித்த மனிதனை உருவகப்படுத்தும் மேடை பேச்சாளர்களிடம் நான் சொல்ல விரும்புவது “ஐயா இந்தியாவிலே பலரும் அவரை தலைவராக ஏற்று கொள்ளவில்லை என்னும் போது, இலங்கையில் தமிழர்கள் யாரும் அவரை தலைவராக ஏற்று கொள்ளவில்லை” என்பதையாகும். தயவு செய்து உலக தமிழர்களின் தலைவராக அந்த பேராசை பிடித்த மனுஷனை சொல்லாதீர்கள். சினிமா கதை, சினிமா பாட்டு, தற்பெருமை கவிதை எழுதுவது எல்லாம் தமிழ் சேவை என்பதில் அடங்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எமது மொழிக்கு செய்யக்கூடிய பெரிய சேவை என்னவென்றால் இவ்வாறான கேலிக்கூத்துகளை அரங்கேற்றி தமிழையும் தமிழனையும் கேவலப்படுத்தாமலிருப்பதாகும்.

-------------------------------------------

உலக கிண்ண கால்பந்து போட்டிகள் சுவாரஸ்யமான கட்டத்திற்கு வந்துவிட்டன, அது பற்றி தனியாக ஒரு பதிவு போட எண்ணியிருக்கேன். 32 அணிகளுடன் தொடங்கிய போட்டிகளில், இப்போதைக்கு மீதமிருப்பது 8 அணிகளாகும். எதிர்பார்த்திருந்த பல அணிகள் வெளியேறியது ரசிகர்களுக்கு கவலையான விடயமாகும். தென் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் ரொம்ப போராடி தோல்வியடைந்தது எனக்கு கொஞ்சம் கஷ்டமாகவிருந்தது. ஆனாலும் இறுதிவரை போராடியதற்காக இரண்டு ஆசிய அணிகளும் பெருமைபட்டு கொள்ளலாம். இப்போதைக்கு மீதமிருக்கும் அணிகளில் ஆர்ஜன்டினாவே உலக கோப்பையை வெல்லக்கூடிய அணியாக நான் கருதும் அணி. இவர்களது ஆட்டத்தை ரசித்து கொண்டேயிருக்கலாம், என்ன நளினமாய் விளையாடுகிறார்கள், அதிலும் லயனல் மெஸ்ஸியின் ஆட்டம். பார்த்து கொண்டேயிருக்கலாம்.

I Love Argentina


முக்கியமான பல போட்டிகளை காட்டாமல் விட்ட ஐ அலைவரிசை அதற்கு பதிலாக அறுவை நாடகங்களை காட்டுவது ஏனோ தெரியவில்லை, இப்படி நாடகம் தான் முக்கியம் என்றால், வேறு ஏதாவது அலைவரிசைக்கு இப்போட்டிகளை விட்டு கொடுத்திருக்கலாம்.
-------------------------------------------

இலங்கை தமிழ் வானொலிகளில் மலையத்தில் அநேகமானோரின் விருப்பத்திற்குறிய வானொலியாக இருப்பது “வெற்றி” வானொலியாகும். சதவீதப்படி பார்த்தால் மேல் மாகாணத்தை விட அதிக வீதமாக வெற்றியின் நேயர்கள் மலையகத்தில் இருப்பார்கள் என நினைக்கிறேன், ஆனாலும் வெற்றி தொலைக்காட்சி ஒளிபரப்பில் மலையகம் புறக்கணிக்கப்பட்டிருப்பது கவலைக்குறிய விடயமாகும்.

-------------------------------------------

கிரிக்கட்டில் அவுஸ்திரேலியாவை இங்கிலாந்தும், மேற்கிந்திய தீவுகளை தென்னாபிரிக்காவும் துவைத்து எடுத்து கொண்டிருக்கின்றன. எந்த போட்டிகளையும் பார்க்கவில்லை. அவுஸ்திரேலியா இறங்குமுகத்தில் இருக்கிறதா இல்லை அடுத்த வருட உலக கிண்ணத்திற்கு பாய்வதற்கு முன்னர் இப்போது பதுங்குகிறதா என தெரியவில்லை. பாவம் பொன்டிங்

-------------------------------------------
அழகென்றால் அனுஷ்காதான்
(வசன உதவி - இளைய தளபதி)

நூடுல்ஸ் (25-06-2010) பீபா உலக கிண்ண ஸ்பெஷல்


ஹாய் மக்கள்ஸ் உலக கிண்ணம் பார்க்கிறீர்களா?

---------------------------------------------------------------

கால்பந்து காய்ச்சல் உலக மக்களிடையே அதிகரித்து காணப்படும் காலப்பகுதியில் ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகளை ஏன் வைத்தார்களோ தெரியவில்லை, ஆசிய கிண்ண போட்டிகள் நடந்ததும் தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை, இவ்வளவுக்கும் ஆசிய கிண்ண போட்டிகள் நடந்த மைதானம் கண்டியிலிருக்கும் எங்களுக்கு மிகவும் அருகிலுள்ள தம்புள்ளை மைதானத்திலாகும், வேறு காலத்தில் என்றால் போட்டிகளை பார்க்க சென்றிருக்கலாம். கால்பந்து உலக கிண்ண போட்டிகளை பார்க்க வேண்டியிருப்பதால் போக முடியவில்லை.

இன்றைய தினம் முதலாம் சுற்றின் மிக சிறந்த போட்டி நடந்து கொண்டிருக்கிறது. பிரேசில் மற்றும் போர்த்துக்கல் அணிகள் போட்டியிடுகின்றன. முதல் 40 நிமிடத்தில் இரு அணியும் கோல் கணக்கை தொடங்கவில்லை, இரு அணிகளும் சரிக்கு சமனாக விளையாடுகின்றன. கடந்த போட்டியில் சிகப்பு அட்டை வழங்கப்பட்டதால் காகா விளையாடாவிடினும் பிரேசில் அணியினர் சிறப்பாகவே விளையாடுகின்றனர்.

எதிர்பார்ப்பு மிகுந்த அணிகளாக தென்னாபிரிக்கா வந்திறங்கிய உலக சம்பியன் இத்தாலி மற்றும் பிரான்ஸ் அணிகள் இம்முறை முதலாம் சுற்றோடு வெளியேறிவிட்டன. அதிகம் எதிர்பார்க்கப்படாத அமெரிக்கா, ஜப்பான் போன்ற அணிகள் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ள நிலையில் உலக கிண்ணம் யாருக்கு கிடைக்கும் என எதிர்வுகூற இயலாத நிலையிலுள்ளது.

வடகொரிய அணியை துவைத்து எடுத்த போர்த்துக்கல் அரையிறுதி வரை வரலாம், கிறிஸ்டியானோ ரொனால்டோ சிறப்பான போர்மில் இருப்பது போர்த்துக்கல் அணிக்கு பலம். பிரேசில் சிறப்பான அணியாக இருந்தாலும் இறுதி போட்டி வரை வர இன்னும் கொஞ்சம் அதிகமாக திறமை காட்ட வேண்டும்.

இதுவரை விளையாண்ட அணிகளிளே அதிகம் திறமை காட்டிய அணியாக நான் நினைப்பது ஆர்ஜன்டினா அணியையே ஆகும், லயனல் மெஸ்ஸி என்னும் அற்புதமான வீரரை கொண்ட இவர்களது அணிக்கு மேலும் பலம், கடந்த போட்டியில் ஹெட்ரிக் அடித்த கொன்சாலோ ஹிக்குயன் இருப்பது அணிக்கு பலம் சேர்ப்பதாகவே இருக்கிறது.

இங்கிலாந்து அரையிறுதி வரை வரவேண்டுமாயின் வேன் ரூனி இன்னும் சிறப்பாக விளையாடவேண்டும். ஜேர்மன், நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் அணிகளும் சிறப்பாக விளையாண்டால் அரையிறுதி வரை வரலாம்.

இப்போதைக்கு இரண்டாம் சுற்றுக்கு தெரிவான அணிகளிலே அதிகம் பலம் வாய்ந்த அணியாக நான் கருதுவது ஆர்ஜன்டீனா அணியைதான்.

---------------------------------------------------------------


இப்பதிவை எழுதி கொண்டிருக்கும் நேரத்தில் பிரேசில், போர்த்துக்கல் அணிகளுக்கிடையிலான போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல்களை பெறாவிடினும் இரண்டு அணிகளும் இணைந்து 7 மஞ்சள் அட்டையை பெற்றிருப்பது குறிப்பிடதக்கதாகும்.

---------------------------------------------------------------

இலங்கையில் உலக கிண்ணத்தை ஒளிபரப்ப உரிமை பெற்றிருக்கும் ஐ தொலைக்காட்சியில் பல போட்டிகளை நேரடியாக காட்டாததற்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்
---------------------------------------------------------------
பல இளைஞர்களுக்கு இப்போதைய தேசிய கீதமாக காணப்படும் உலக கிண்ண தீம் பாடலின் வரிகள் கீழே..

Ooooooh Wooooooh

Give me freedom, give me fire, give me reason, take me higher
See the champions, take the field now, you define us, make us feel proud
In the streets are, exaliftin , as we lose our inhabition,
Celebration its around us, every nation, all around us


Singin forever young, singin songs underneath that sun

Lets rejoice in the beautiful game.
And together at the end of the day.


WE ALL SAY


When I get older I will be stronger
They'll call me freedom Just like a wavin' flag

And then it goes back
And then it goes back

And then it goes back

When I get older I will be stronger
They'll call me freedom
Just like a wavin' flag
And then it goes back
And then it goes back

And then it goes


Oooooooooooooh woooooooooohh hohoho


Give you freedom, give you fire, give you reason, take you higher
See the champions, take the field now, you define us, make us feel proud
In the streets are, exaliftin, every loser in ambition,
Celebration, its around us, every nations, all around us


Singin forever young, singin songs underneath that sun

Lets rejoice in the beautiful game.
And together at the end of the day.

WE ALL SAY

When I get older, I will be stronger
They'll call me freedom
Just like a wavin' flag
And then it goes back
And then it goes back
And then it goes back

When I get older I will be stronger
They'll call me freedom
Just like a wavin' flag
And then it goes back
And then it goes back
And then it goes

Wooooooooo Ohohohoooooooo ! OOOoooooh Wooooooooo

WE ALL SAY !


When I get older I will be stronger
They'll call me freedom
Just like a wavin' flag

And then it goes back
And then it goes back

And then it goes back


When I get older I will be stronger
They'll call me freedom
Just like a wavin' flag

And then it goes back
And then it goes back
And then it goes

Wooo hooooo hohohohoooooo
And everybody will be singinit

Wooooooooo ohohohoooooo
And we are all singinit

இதன் வீடியோ லிங்க்

---------------------------------------------------------------
உலக கிண்ணத்திற்காக “வக்கா வக்கா” பாடலை பாடிய ஷாகிரா



நூடுல்ஸ் (16-06-2010)

ரொம்ப நாளாக பதிவு எழுதாவிடின் தொடர்பு விட்டு போய்விடும் என்பதால் ஒரு நூடுல்ஸ் போடுகிறேன்.

--------------------------------------------------------------------------------------------
கால்பந்து காய்ச்சல் வந்து பலரை வாட்டுகிறது, முக்கியமான போட்டிகள் நள்ளிரவில் நடை பெறுவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது (நேற்று நம்ம பிரேசில் விளையாடிய நேரம், போட்டியை பார்த்தால் அலுவலகத்தில் தூங்கி வழிய வேண்டி வரும். அடுத்த சுற்று போட்டிகள் தொடங்கிய பின்னர் எல்லா போட்டிகளையும் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என நினைக்கிறேன்.

--------------------------------------------------------------------------------------------
நேற்று கிரிக்கட் பார்க்கும் எண்ணம் இருக்க வில்லை காரணம் கால்பந்து, சும்மா பார்க்க தொடங்கினேன், செம திரிலாக இருந்தது. யப்பா அப்ரிடிக்கு எப்படி அந்தளவு பொறுமை வந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. வருவார் 2, 3 சிக்சர் அடித்துவிட்டு போய்விடுவார் என எதிர் பார்த்தால் மனுஷன் சூப்பரா விளையாண்டார், எப்போதுமே அப்ரிடியின் அதிரடியை ரசிப்பேன், நேற்று அந்த மனுஷனுக்கு தசைபிடிப்பு வந்திருக்காவிடின் போட்டியை எப்போதோ வென்றிருப்பார். பதிவர் பவனின் பஞ்ச் படி அப்ரிடி அடித்தது அடியல்ல, ஒவ்வொன்றும் இடி.

பாவம் முரளி, அடித்து நொறுக்கி விட்டார்கள், அடுத்த சிங்கத்துக்கும் வயதாகிறதோ? அப்படியாயின் சனத் மாதிரி தொங்கி கொண்டிருக்க வேண்டாம்.

மத்தியுஸ், மாலிங்க சிறப்பாக விளையாண்டு இலங்கையின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்கள்.
-----------------------------------------------------------------------------------------------
திங்கட்கிழமை காலை நுவரெலியாவிலிருந்து கண்டி வருகையில் வழமை போல வெற்றி எப் எம்மில் விடியல் கேட்டு கொண்டு வந்தேன், ஆபிரிக்கா பற்றி பல தெரியாத விடயங்களை அந்நிகழ்ச்சியினால் அறிந்து கொண்டேன், இந்த மாதிரி நிகழ்ச்சிகளை அதிகமாக லோஷனிடம் எதிர்பார்க்கிறோம்.

தங்கிலீஸ் பேசும் வானொலிகளில் இவ்வாறான நிகழ்ச்சிகளை எதிர் பார்க்க முடியாதே. அதனால்தான் வெற்றியிடம் எதிர்பார்க்கிறோம்.

வெற்றி வானொலியில் குறையே இல்லை என கேட்க வேண்டாம், நான் அதிகமாக வானொலி கேட்கும் காலை நேரங்களில் விடியல்தான் சிறந்தது என்பதில் சந்தேகமேயில்லை.
--------------------------------------------------------------------------------------------
கொஞ்ச நாளாக “உசுரே போகுது” என பலரது உள்ளங்களை கொள்ளை கொண்ட பாடலுக்காகவே முதல் நாள் ராவணன் பார்க்க யோசித்துள்ளேன், எப்போதுமே நான் ரசிக்கும் ரகுமான், மணிரத்னம், சீயான், ஐஸ் ஆகியோருக்காக கட்டாயம் படம் முதல் நாள் பார்க்க வேண்டும். சுறா அசல் போன்றவற்றையே தியேட்டர்ல பார்த்து பழகிட்டோம், இதை விட கொடுமையாக ராவணன் இருக்காது என நம்பலாம்.
--------------------------------------------------------------------------------------------

--------------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது

அய்யப்ப பணிக்கர் எனும் மலையாள கவிஞர் எழுதியதாக வைரமுத்து குமுதத்தில் குறிப்பிட்ட கவிதை. தந்தையின் மறைவுக்கு அமெரிக்காவிலிருந்து மகன் அனுப்பும் செய்தி

“விடுமுறை இல்லை,
வீடியோ அனுப்புங்கள்,
வாரக்கடைசியில் பார்த்து
வருத்தப்பட.
வீடியோ கலரில் இருப்பது
உத்தமம்,
ஏனெனில் -
மலையாள மரணம்
பார்த்ததில்லை
என் அமெரிக்க நண்பர்கள்
யாரும்”

--------------------------------------------------------------------------------------------
பார்த்ததில் பிடித்தது


ஜெஸ்ஸி ஜெஸ்ஸி ஜெஸ்ஸி .....

ஐ.பி.எல்லில் சாதித்த இந்திய இளம் வீரர்கள் சிம்பாபேயிடம் தோல்வி கண்டது ஏன்?


ஐ.பி.எல்லில் ஆறும் நான்குமாகவே அடித்த தினேஷ் கார்த்திக், ரெய்னா, முரளி விஜய் போன்ற வீரர்கள் சிம்பாபே தொடரில் சாதிக்காமல் போனதற்கு என்ன காரணம் என யோசித்து பார்த்தால், டுவென்டி டுவென்டி ஒரு முழுமையான கிரிக்கட் வடிவமல்ல. அது இன்ஸ்ட்ண்ட் நூடுல்ஸ் போன்றது. அவசரத்துக்கு சாப்பிடலாம் எனினும் தொடர்ந்து அதை கொண்டு பசியாற முடியாது.

எதிர்கால சிறந்த கிரிக்கட் வீரர்களை உருவாக்க வேண்டுமானால் சிறிய வயதில் அவர்கள் 50 ஓவர் போட்டிகளில் விளையாடுவதை குறைக்க வேண்டும் என எங்களது பாடசாலை கிரிக்கட் பயிற்சியாளர் அந்த காலத்தில் சொல்லிய விடயம் எவ்வளவு உண்மை என்பதை மறுக்கவியலாது. 50 ஓவர் போட்டிகளே இப்படியாக மாறினால் 20 ஓவர் போட்டிகளின் அவர்களை எவ்வாறு மாற்றிவிடும் என யோசிக்க தோன்றுகிறது.

ஆறு, நான்கு அடிப்பதுதான் துடுப்பாட்டமும், துடுப்பாட்ட வீரர்களை ஓட்டங்களை எடுக்கவிடாமல் கட்டுபடுத்துவதுதான் பந்துவீச்சும் என விளையாடும் 20-20 போட்டிகள் 25 வருடங்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டிருந்தால் இன்று சச்சின் டெண்டுல்கார், சங்கக்கார, அரவிந்த டீ சில்வா, கவாஸ்கர், டிராவிட், லாரா போன்ற துடுப்பாட்ட வீரர்களும் முரளிதரன், கபில்தேவ், சேர். ரிச்சர்ட் ஹாட்லி, வசீம் அக்ரம், இம்ரான் கான் போன்ற பந்து வீச்சாளர்களும் உலகத்திற்கு கிடைக்காமல் போயிருப்பார்கள்.

இந்தியா இத்தொடரில் இறுதி போட்டிக்கு செல்லாமல் வெளியேறியது மற்ற எல்லா நாடுகளை விடவும் இந்தியாவிற்கு இது பெரிய ஒரு அபாய அறிவிப்பு மணி என எடுத்து கொள்ளலாம். காரணம் ஐ.பி.எல் என்னும் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறியாக கொண்டுள்ள தொடர் முழுக்க முழுக்க இந்திய கிரிக்கட் சபையால் நடாத்தப்படுவதாலாகும்.

இரண்டாம் தர இந்திய அணியை அனுப்பியதால் தோல்வியுற்றோம் என சப்பை காரணம் இந்திய தெரிவாளர்களால் சொல்ல முடியாது ஏனெனில், இத்தொடரில் இந்தியாவை இருமுறை தோலவியுற செய்த சிம்பாபே அணியின் வீரர்களை பார்க்கும் போது, இத்தொடரில் விளையாடிய பல இந்திய வீரர்கள் சர்வதேச போட்டிகளில் அனுபவம் உள்ளவர்களே ஆகும். மேலும் இந்திய கிரிக்கட் சபையின் சொத்தின் ஐநூறில் ஒரு பங்கு கூட இல்லாத சிம்பாபே கிரிக்கட் சபையின் கிரிக்கட் கட்டமைப்பு உலகறிந்ததே. எனவே உள்நாட்டு கிரிக்கட் போட்டிகளிற்கு பயிற்சி பெறவே சிறந்த கட்டமைப்பு இல்லாத சிம்பாபே அணி இந்திய இளம் வீரர்களை (அனைவரும் ஐ.பி.எல் போட்டிகளில் திறமை காட்டிய வீரர்கள்) கொண்ட அணியை வெற்றி கொண்டதற்கு முக்கிய காரணமாக நான் காண்பது, இன்னமும் 20-20 மோகம் சிம்பாபே அணிக்கு ஏற்படவில்லை என்பதாகும். இன்னமும் 20-20 போட்டிகளை ஐசீசீ ஆதரித்து வளர்த்தெடுத்தால் கிரிக்கட் இன்னும் பாதாளத்தை நோக்கியே விழும்.


நல்ல வேளை சச்சின் தெண்டுல்கார் 20-20 சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். யோசிக்க தெரிந்த அந்த வீரர் தொடர்ந்து சிறப்பாக விளையாட கூடிய மனநிலையை தொடர்ந்து தக்கவைத்து கொள்ளவெ அந்த முடிவை எடுத்திருப்பார் என நினைக்கிறேன்.

முன்னொரு போதும் இப்படியான பதிவெழுதிய போது, இந்திய கிரிக்கட் சபை மீது கொண்ட பொறாமையால்தான் இவ்வாறு எழுதினேன் கருத்து தெரிவித்த நண்பர்கள் இப்போது என்ன சொல்ல போகிறார்கள்?


இலங்கை அணிக்கு இந்திய அணியின் தோல்வியிலிருந்து படிக்க வேண்டிய விடயங்கள் ஏராளமாக உள்ளன. இந்த இலங்கை அணி ஒரு அவுஸ்திரேலியா இளம் அணியிடம் விளையாடியிருந்தால் முடிவு வேறுவிதமாக கிடைத்திருக்கலாம். எளியவர்களின் கூட்டத்தில் வலியவனாக இருக்கும் இலங்கை வீரர்களில் பலரும் 20-20 மோகத்திற்கு உட்பட்டவர்களே. எனக்கு தெரிந்து இலங்கை கிரிக்கட் சபை இலங்கை வீரர்களை ஐ.பி.எல் போன்ற வெளிநாட்டு 20-20 போட்டி தொடர்களில் விளையாடுவதை தடுக்க முயல வேண்டும். பணக்கார இந்திய கிரிக்கட் சபைக்கு எதிராக சுண்டைக்காய் கிரிக்கட் சபையான இலங்கை கிரிக்கட் சபைக்கு இது முடியுமான காரியமா என தெரியவில்லை? கவுண்டி போட்டிகளில் விளையாண்டு தனது துடுப்பாட்டத்தை மெறுகேற்றிய அரவிந்த டீ சில்வா போன்ற வீரர்கள் விளையாண்ட போட்டி தொடரல்ல வெளிநாட்டு 20-20 கிரிக்கட் லீக்குகள்.

இலங்கை பாடசாலை மட்ட கிரிக்கட் போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை, அவற்றின் தரமும் அவ்வாறே. அதை நேற்று வந்த தினேஷ் சந்திமால் தொடக்கம் அந்த கால அர்ஜுன ரணதுங்க வரை நிரூபித்திருக்கிறார்கள். இப்பாடசாலை விளையாட்டுகளின் தரத்தை தொடர்ந்து பேண வேண்டுமானால் பாடசாலைகளில் 20-20 கிரிக்கட் போட்டிகளை தடை செய்ய வேண்டும்.

20-20 போட்டிகள் எப்பவாவது விளையாண்டால் அது ஏற்று கொள்ள கூடிய விடயம் தான் ஆனால் எந்நாளும் அதை விளையாடுவதை, அதற்காக டெஸ்ட் போட்டிகளை எதிர்கால கிரிக்கட் அட்டவணையிலிருந்து ஒதுக்குவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். இன்னமும் டெஸ்ட் போட்டிகள் தான் சிறந்த வகை கிரிக்கட் போட்டிகள் என்பதை நம்புகிறேன்.

நண்பர்களே நீங்களும் உங்களது கருத்துகளை சொல்லிவிட்டு போங்கள்

என் முதல் பதிவு (மீண்டும் நான்)



மீண்டும் பதிவுலகிற்கு புதிய பக்கத்தோடு வந்துள்ளேன். முன்னர் எனக்கு ஆதரவளித்த அனைவரும் மீண்டும் ஆதரவளிப்பார்கள் என்னும் நம்பிக்கையோடு மீண்டும் எழுதுகிறேன்.

எனது புலோக்கர் தவிர்ந்த மற்றைய தனிப்பட்ட தொடர்புகளை கொண்டிருந்த யாகூ மெயில் மற்றும் எனது நண்பர்ளோடு தொடர்புகளை வைத்திருந்த மூஞ்சிப்புத்தகம் என்னும் பேஸ்புக் ஆகியவற்றோடு ஹேக் பண்ணப்பட்ட ஜீமெயில்/புளோக்கர் கணக்கு இன்னும் கிடைக்கவில்லை ஆனாலும் யாகூ மற்றும் பேஸ் புக் ஆகியன மீண்டும் கிடைத்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி...

எனது ஹேக் செய்யப்பட்ட கணக்குகளை மீண்டும் எனக்கு கிடைக்க பல வழிகளிலும் உதவியது பதிவுலக நண்பர்களாகும். பதிவர்களான கன்கொன், சுபாங்கன், பவன், அனுதினன், சதீஷ், பகிரதன், சிவதயாளன், என்ன கொடுமை சார், டிவிட்டர்களான ஹர்சேந்திரதிரா, முர்ஷிட் மற்றும் ஏனையவர்களுக்கும் நன்றிகள்.. யாருடைய பெயராவது விடு பட்டிருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் நண்பர்களே.. மேலும் இப்பிரச்சினை காரணமாக மன உளைச்சலுக்குள்ளாகியிருந்த எனக்கு துணையாகவிருந்த எனது தனிப்பட்ட நண்பர்களுக்கும் என் நன்றிகள்..

இணைய நட்பு ஏனைய நட்புகளை போலவே என்பதை அனுபவத்தின் மூலம் உணர்ந்தேன்.

இனி அடிக்கடி பதிவுலகம் வரலாம் என இருக்கிறேன்.

என்ன வரலாம் தானே நண்பர்களே?



Facebook Badge