நூடுல்ஸ் (30-06-2010)





எனது மசாலா பதிவுகளுக்கு என்ன பெயர் வைப்பது என முன்னர் யோசித்திருந்தபோது லோஷன் நூடுல்ஸ் என வையுங்கள் என வேடிக்கையாக கூறியதையடுத்தே எனது பதிவுக்கு நூடுல்ஸ் என வைத்தேன். அந்த நாமகரணம் செய்த அதிர்ஷடமோ தெரியவில்லை, இன்று எனக்கும் இன்னும் 2 நண்பர்களுக்கும் சேர்த்து நூடுல்ஸ் சமைக்க போகிறேன். பாவம் அந்த இரண்டு நண்பர்களும்.

-------------------------------------------

செம் மொழி மாநாட்டு நிகழ்ச்சி எதையும் பார்க்க கிடைக்காக கவலையில் இருந்த நான் வார இறுதியில் வீட்டுக்கு சென்றிருந்த போது கலைஞர் தொலைக்காட்சியில் செம்மொழி மாநாட்டு நிகழ்வுகளை ஒளிபரப்புவதை பார்த்தேன். ஒரே ஒரு நிகழ்ச்சி பார்த்து நொந்து விட்டேன்.

நான் பார்த்த நிகழ்ச்சி சாலமன் பாப்பையாவின் தலைமையிலான பட்டிமன்றம், அதன் தலைப்பு “தமிழை வளர்த்தது சின்னத்திரை, வெள்ளித்திரை, எழுத்துதுறை” என்பதாகும். ஆனால் அங்கு பட்டிமன்றத்தில் சகலரும் வாதிட்டது கருணாநிதி வளர்த்தது வெள்ளித்திரையை, சின்னத்திரையை மற்றும் எழுத்துத்திரையை என்னும் தலைப்பிலாகும். இங்கு கதைத்த பலரும் கருணாநிதி என்னும் மனிதனை காக்காய் பிடிப்பதையே செய்தார்கள், இதில் லியோனி, சந்திரசேகர், எஸ்.வி.சேகர், பாரதிராஜா போன்றோர் எதை கதைத்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். லியோனி எல்லாம் ஒரு பேச்சாளராகவே எனக்கு தெரியவில்லை, சினிமா பற்றி கதைக்காமல் சினிமா பாட்டு பாடாமல் பேச சொன்னால் மனுஷன் ஊரை விட்டு ஓடிவிடுவார் என நினைக்கிறேன். இவர்களை எங்கள் ஊர்களில் கல்லூரி விவாதங்களில் பேசுவோரிடம் பயிற்சிக்கு அனுப்பலாம்.

உலக தமிழர்களின் தலைவராக கருணாநிதி என்னும் பேராசை பிடித்த மனிதனை உருவகப்படுத்தும் மேடை பேச்சாளர்களிடம் நான் சொல்ல விரும்புவது “ஐயா இந்தியாவிலே பலரும் அவரை தலைவராக ஏற்று கொள்ளவில்லை என்னும் போது, இலங்கையில் தமிழர்கள் யாரும் அவரை தலைவராக ஏற்று கொள்ளவில்லை” என்பதையாகும். தயவு செய்து உலக தமிழர்களின் தலைவராக அந்த பேராசை பிடித்த மனுஷனை சொல்லாதீர்கள். சினிமா கதை, சினிமா பாட்டு, தற்பெருமை கவிதை எழுதுவது எல்லாம் தமிழ் சேவை என்பதில் அடங்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எமது மொழிக்கு செய்யக்கூடிய பெரிய சேவை என்னவென்றால் இவ்வாறான கேலிக்கூத்துகளை அரங்கேற்றி தமிழையும் தமிழனையும் கேவலப்படுத்தாமலிருப்பதாகும்.

-------------------------------------------

உலக கிண்ண கால்பந்து போட்டிகள் சுவாரஸ்யமான கட்டத்திற்கு வந்துவிட்டன, அது பற்றி தனியாக ஒரு பதிவு போட எண்ணியிருக்கேன். 32 அணிகளுடன் தொடங்கிய போட்டிகளில், இப்போதைக்கு மீதமிருப்பது 8 அணிகளாகும். எதிர்பார்த்திருந்த பல அணிகள் வெளியேறியது ரசிகர்களுக்கு கவலையான விடயமாகும். தென் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் ரொம்ப போராடி தோல்வியடைந்தது எனக்கு கொஞ்சம் கஷ்டமாகவிருந்தது. ஆனாலும் இறுதிவரை போராடியதற்காக இரண்டு ஆசிய அணிகளும் பெருமைபட்டு கொள்ளலாம். இப்போதைக்கு மீதமிருக்கும் அணிகளில் ஆர்ஜன்டினாவே உலக கோப்பையை வெல்லக்கூடிய அணியாக நான் கருதும் அணி. இவர்களது ஆட்டத்தை ரசித்து கொண்டேயிருக்கலாம், என்ன நளினமாய் விளையாடுகிறார்கள், அதிலும் லயனல் மெஸ்ஸியின் ஆட்டம். பார்த்து கொண்டேயிருக்கலாம்.

I Love Argentina


முக்கியமான பல போட்டிகளை காட்டாமல் விட்ட ஐ அலைவரிசை அதற்கு பதிலாக அறுவை நாடகங்களை காட்டுவது ஏனோ தெரியவில்லை, இப்படி நாடகம் தான் முக்கியம் என்றால், வேறு ஏதாவது அலைவரிசைக்கு இப்போட்டிகளை விட்டு கொடுத்திருக்கலாம்.
-------------------------------------------

இலங்கை தமிழ் வானொலிகளில் மலையத்தில் அநேகமானோரின் விருப்பத்திற்குறிய வானொலியாக இருப்பது “வெற்றி” வானொலியாகும். சதவீதப்படி பார்த்தால் மேல் மாகாணத்தை விட அதிக வீதமாக வெற்றியின் நேயர்கள் மலையகத்தில் இருப்பார்கள் என நினைக்கிறேன், ஆனாலும் வெற்றி தொலைக்காட்சி ஒளிபரப்பில் மலையகம் புறக்கணிக்கப்பட்டிருப்பது கவலைக்குறிய விடயமாகும்.

-------------------------------------------

கிரிக்கட்டில் அவுஸ்திரேலியாவை இங்கிலாந்தும், மேற்கிந்திய தீவுகளை தென்னாபிரிக்காவும் துவைத்து எடுத்து கொண்டிருக்கின்றன. எந்த போட்டிகளையும் பார்க்கவில்லை. அவுஸ்திரேலியா இறங்குமுகத்தில் இருக்கிறதா இல்லை அடுத்த வருட உலக கிண்ணத்திற்கு பாய்வதற்கு முன்னர் இப்போது பதுங்குகிறதா என தெரியவில்லை. பாவம் பொன்டிங்

-------------------------------------------
அழகென்றால் அனுஷ்காதான்
(வசன உதவி - இளைய தளபதி)
13 Responses
  1. Bavan Says:

    //இன்று எனக்கும் இன்னும் 2 நண்பர்களுக்கும் சேர்த்து நூடுல்ஸ் சமைக்க போகிறேன்.//

    கொலைமுயற்சி??..:P

    செம்மொழி மாநாடு

    கஐணாநிதி செத்தா தமிழே அழிஞ்சிடுமாம்.. அந்தளவுக்கு அந்தாளுக்கு ஐஸ் மழை பொழிந்தார்கள்..

    தள்ளாத வயசிலயும் எப்பிடி அவ்வளவு ஐசையும் தாங்கிறாரோ.. கொடுமை கொடுமை

    கால்ப்பந்து நான் பிரேசிலுக்குதத்தான் சப்போர்ட் (நம்புங்கப்பா நானும் புட்பால் பாக்கிறன்)

    அவுஸ்திரேலியா - யானைக்கும் அடிசறுக்கும்,

    //அழகென்றால் அனுஷ்காதான்
    (வசன உதவி - இளைய தளபதி) //

    ஆங்.. இதுக்கு நீங்க சமைக்கிற நூடுல்சே பெட்டர்..:P

    அடுத்த முறை ராவணா ஐஸ் வருவாரா???


  2. Bavan Says:

    ஐய் நானா முதலாவது
    @கன்கொன் - தொப்பி தொப்பி..:P


  3. பாவம் நண்பர்கள்.
    ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துவிடுங்கள். :)))

    செம்மொழி - செம்மறி...
    கதைக்க ஒன்றுமேயில்லை.
    அந்தப் பட்டிமன்றத்தை நானும் பார்த்தேன்.
    பாரதிராஜா தொடக்கிவைத்த காக்காய் பிடித்தலை அனைவரும் நன்றாகவே தொடர்ந்தார்கள். :(

    உலகத்தமிழர் தலைவன் -
    ஹி ஹி...
    அத நாங்கள் சொல்லோணும். :)

    உ.கிண்ணம் - :)))

    வெற்றி - லோஷன் அண்ணா பதில் தருவார். :D

    அவுஸ்ரேலியா -
    அவுஸ்ரேலியாவின் இறங்குமுகம் என்பதை விட இங்கிலாந்து வளர்கின்றது என்பது சரியாக இருக்கும்.
    அருமையாக ஆடினார்கள்.
    ஆனால் இன்றைய 4ஆவது போட்டியில் பழைய அவுஸ்ரேலியா வந்திருக்கிறது.

    :)))


  4. @பவன் -
    போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தபடியால் பிந்திவிட்டது.
    பரவாயில்லை... :'( :'( :'(


  5. anuthinan Says:

    // இன்று எனக்கும் இன்னும் 2 நண்பர்களுக்கும் சேர்த்து நூடுல்ஸ் சமைக்க போகிறேன். பாவம் அந்த இரண்டு நண்பர்களும்.//

    அவசர உதவி இலக்கங்களுக்கு இப்பவே ஒரு மிஸ் கால் குடுத்து விடவும்!!!

    //“ஐயா இந்தியாவிலே பலரும் அவரை தலைவராக ஏற்று கொள்ளவில்லை என்னும் போது, இலங்கையில் தமிழர்கள் யாரும் அவரை தலைவராக ஏற்று கொள்ளவில்லை”//

    அதை அவர் ஏற்றுகொள்ள மாடார் போல!!!

    //I Love Argentina//
    I Love பிரேசில்

    // வெற்றி தொலைக்காட்சி ஒளிபரப்பில் மலையகம் புறக்கணிக்கப்பட்டிருப்பது கவலைக்குறிய விடயமாகும்//
    நாங்களும் கூட....

    //அழகென்றால் அனுஷ்காதான்//
    அனுஷ்கா !!!! உங்கள் எல்லோருக்கும் தெர்யுமா? நானும் அவவும் சேம் உயரம்!!!


  6. Subankan Says:

    நண்பர்களுக்கு எனது அனுதாபங்கள்.

    செம்மொழி மாநாடு - எல்லாம் எதிர்பார்த்துதான்

    FIFA - நானும் ஆர்ஜென்டீனாவைத்தான் லவ்வுகிறேன்

    கிரிக்கெட் - தகவலுக்கு நன்றி

    அனுஷ்கா - அப்படியா?


  7. ARV Loshan Says:

    யோவ்...நண்பருக்கு சமைச்சுப் போடுறதெல்லாம் சரி.. அதுக்காக என்னையும் எடுத்துக் குடுக்கணுமா?
    நண்பர்களே சமைப்பவரை மட்டும் சபியுங்கள்.

    செம்மொழி? சாரி.. அவுட் ஒப் சப்ஜெக்ட்

    I predict Argentina will be the champs..
    Messi and Maradona ll rule the world :)

    ஆனால் அரையிறுதியில் வியாவின் ஸ்பெயினை சந்திப்பதே பெரிய சவாலாக இருக்கும்.

    வெற்றி டிவி ?? இன்னும் டிவி யாக நாங்கள் அதை உருப்படுத்தவில்லை யோகா.
    எங்கள் நிகழ்ச்சிகள் வந்த பிறகே வெளியூர்களுக்கான விரிவாக்கம்.

    ஆஸ்திரேலியா - ஆனைக்கும் மூன்று தரமாவது சறுக்கும். :)
    மூன்றாவது போட்டியில் இறுதிவரை போராடி இருந்த ஆஸ்திரேலியா இன்று back to form :)
    எழுவார்கள் மீண்டும்.

    அனுஷ்கா? விஜய்க்கு வேறு வேலை இல்லையா? இப்படித்தான் பூர்ணா என்று ஒரு புண்ணாக்கை அடுத்த அசின் என்றார். இப்போ பூர்ணா எங்கே?
    (அனானிகள் வந்தால் யோ பார்த்துக் கொள்ளுங்க)
    மொபைலா பாடலில் தான் அனுஷ்கா அழகு.. இப்போ அனு அக்கா பெட்டர்


    LOSHAN
    http://arvloshan.com/


  8. // அனுஷ்கா? விஜய்க்கு வேறு வேலை இல்லையா? இப்படித்தான் பூர்ணா என்று ஒரு புண்ணாக்கை அடுத்த அசின் என்றார். இப்போ பூர்ணா எங்கே? //

    அசின் மட்டும் எங்கயாம்? :P


  9. செல்லாது செல்லாது.. அனுஷ்காவிற்கு ஏன் அனிமேசனில் உடுப்புப் போட்டிருக்கிறீர்கள்?

    :)


  10. ARV Loshan Says:

    அசின் மட்டும் எங்கயாம்? :P//

    இப்போ இலங்கையில் :)


  11. ARV Loshan Says:

    வந்திட்டாரையா வாத்சாயனர்.. ;)


  12. noodles சாப்பிட்டவங்க உசிரோட இருக்காங்களா?

    //சினிமா கதை, சினிமா பாட்டு, தற்பெருமை கவிதை எழுதுவது எல்லாம் தமிழ் சேவை என்பதில் அடங்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.//

    சாட்டை, சாணி...

    அனுஷ்கா ஸ்டில் கொள்ளையழகு...


  13. அந்த நண்பர்களுக்க்கு என்ன நடந்தது?

    செம்மொழி மாநாடு பதிவு போட்டு என் கருத்தைத் தெரிவித்துவிட்டேன் என்ன செய்வது எல்லாம் தமிழனின் விதி. தமிழகத்திலேயே 50% மான மக்கள் கருணாதியைத் தலைவராக ஏற்காத போது நாம் ஏன் ஏற்கவேண்டும்?

    ஆர்ஜென்டீனா தான் இம்முறை சாம்பியன் கவலைப்படவேண்டாம்.

    நான் இங்கிலாந்திற்க்குச் சென்ற பின்னர் தான் இங்கிலாந்து திறமையாக விளையாடுகின்றது. 20க்கு 20 கிண்ணம் எடுத்தார்கள். இப்போ ஆஸியுடன் தொடர் வெற்றி ஹிஹிஹி. அமெரிக்காவும் என்னை அழைத்தால் என்னுடைய ராசியில் அமெரிக்காவும் கிரிக்கெட் போட்டியில் சாம்பியனாகலாம்.ஓவல் போட்டி பார்க்கப்போகவிருந்தேன் , நல்ல காலம் போகவில்லை.

    என்னாது அனுஷ்கா அழகா? அனுஷ்காவை விட என் பக்கத்துவீட்டு ஜாமேக்கா கறுப்புப் பெண் அழகியாக இருக்கின்றார‌.


Facebook Badge