கால்பந்து உலகக்கிண்ணம் யாருக்கு? சிறு அலசல்

32 அணிகளுடன் ஆரம்பமான உலக கிண்ண போட்டிகளில் இப்போது மீதமிருப்பது எட்டே எட்டு அணிகள் மாத்திரம்தான். இந்த எட்டு அணிகளில் ஒரு அணிதான் உலக கிண்ணத்தை வெல்லப் போகிறது. 





ஆர்ஜன்டீனா மற்றும் பிரேசில் அணிகள் மீதுதான் ரசிகர்கள் அதிகம் பந்தயம் கட்டியிருக்கிறார்கள், இவ்வளவு திறமை காட்டியும் ஆர்ஜன்டினா பந்தயக்காரர்களின் வரிசையில் இரண்டாமி்டத்தில் இருக்கின்றது. பிரேசிலுக்குதான் முதலிடம். ஆனாலும் வழமையான உலகக்கோப்பைகளில் களம் கண்ட பிரேசில் அளவுக்கு இம்முறை அணி உறுதியானதான தெரியவில்லை. ஆனாலும் அரையிறுதியில் நெதர்லாந்தை வீழ்த்தினால் இறுதி போட்டிவரை போகலாம். ஆனால் சில வேளைகளில் நெதர்லாந்து பிரேசிலை வென்று பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கலாம், காரணம் நெதர்லாந்து இதுவரை சந்தித்த போட்டிகளில் உறுதியான விளையாட்டை வெளிக்காட்டியிருப்பதனாலாகும். எனவே நெதர்லாந்து, பிரேசில் அணிகள் விளையாடும் முதலாம் காலிறுதி போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது.

நாளை இடம்பெறும் இரண்டாவது அரையிருதிப் போட்டியில் கானா மற்றும் உருகுவே அணிகள் போட்டியிடுகின்றன. தென் கொரியாவுடனான போட்டியில் 2 கோல்களை போட்ட லூயிஸ் சுவாறெஸை கானா அணி சிரமத்தோடு எதிர் நோக்க போவது நிச்சியம். காரணம் இவரில்லாமலிருந்தால் உருகுவே காலிறுதிக்கு வராமலிருந்திருக்கலாம். 

மூன்றாவது காலிறுதி போட்டி இப் போட்டி தொடரின் மிக சிறந்த போட்டிகளில் ஒன்றாக கருதக்கூடிய ஒன்றாகும், ஆர்ஜன்டீனா மற்றும் ஜேர்மன் அணிகள் மோதும் இப்போட்டி உலக சாம்பியனை தீர்மானிக்ககூடிய போட்டியாக இருக்க கூடியது. இப்போட்டியில் வெல்லும் அணி உலக கிண்ணத்தை வெல்லக்கூடியதாக வாய்ப்புகள் அதிகமுண்டு.

நாலாவதும் இறுதியுமான காலிறுதிப் போட்டியில் பரகுவே மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் பலமான அணியாக கருதப்படும் ஸ்பெயின் வெற்றி கொள்ள வாய்ப்புண்டு. 

எனவே முதலாவது அரையிறுதி அரையிருதி போட்டியில் பிரேசில், உருகுவே அல்லது நெதர்லாந்து, உருகுவே அணிகளும் இரண்டாவது அரையிருதி ஆட்டத்தில் ஆர்ஜன்டீனா, ஸ்பெயின் அல்லது ஜேர்மன், ஸ்பெயின் அணிகளும் மோதலாம் என தனிப்பட்ட முறையில் நான் நினைக்கிறேன்.

இத்தொடரில் என்னைக் கவர்ந்த அணியான ஆர்ஜன்டீனா, சம்பியனாக அதிக வாய்ப்புகளுண்டு, சாதிப்பார்களா? அல்லது என்னை சோதிப்பார்களா?

3 Responses
  1. எனது எதிர்பார்ப்பும் ஆஜன்டீனா அணிமீதே...இலங்கையில் என்னுடைய நண்பர்கள் பலர் இங்கிலாந்து அணியை நம்பி பந்தயம்கட்டி பணத்தினை இழந்துள்ளனர்.


  2. தேசிய அணிகள் என்றால் என் தெரிவு இங்கிலாந்துதான்! என்ன செய்ய, இந்த முறை ஃபபியோ கபெல்லோவில் தவறான தெரிவுகளால் இங்கிலாந்து வெளியேறிவிட்டது.

    ஆா்ஜன்டீனா வெல்ல வாய்ப்பிருக்கிறது, ஆனால் பிரேசிலை நிராகரித்துவிட முடியாது, அவர்கள் விளையாடும் ஆட்டம் அப்படி. போட்டிக்கு போட்டி அவர்கள் ஆட்டம் கொஞ்சமேனும் மாறும். எனக்கு ஆர்ஜன்டீனா-பிரேசில் இறுதிப் போட்டியைக் காண ஆவல். ஆர்ஜன்டீனாவுக்கு முன்னால் இருக்கும் பெரிய சவால் ஜேர்மன் அணி - பிரேசிலுக்கு முன்னாள் இருக்கும் பெரிய சவால் நெதர்லாந்து அணி - இதை விட காத்திருக்கும் இன்னொரு சவால் ஸ்பெய்ன் அணி. இவற்றைக் கடக்கும் அணி வெற்றியாளராகலாம்!

    இம்முறை ஏனோ காற்பந்தாட்ட உலகக்கிண்ணம் எனக்கு பெரிதாக ரசிக்கக்கூடியதாக அமையவில்லை. ஆரம்பத்தில் நிறைய ட்ரோ போட்டிகள் ஏற்பட்டதும். பல “பெரிய” அணிகள் வெளியேறியதும், இம்முறை உலகக் கிண்ணத்தை அலுப்புத் தட்டச்செய்கிறது. மேற்குறிப்பிட்ட போட்டிகள் இடம்பெறும் போது அந்த அலுப்பு நீங்கும் என எண்ணுகிறேன்.ஆதுவும் குறிப்பாக ஆர்ஜன்டீனா-பிரேசில் இறுதியென்றால் அந்தத் திகிலுக்கு அளவிருக்காது!


  3. anuthinan Says:

    அண்ணாவின் கருது படி பிரேசில் அணியின் நிலை இன்று தெரிந்து விடும்!!!

    ஒருவேளை பிரேசில் ஆர்ஜண்டினாவை இறுதி போட்டியில் சந்தித்தால் நிச்சயம் பிரசில் வெற்றி பேரும் அண்ணா! அவர்களிடம் கடந்த வருடங்கள் போல பிரபலங்களும், ஆட்டமோ இலாத போதிலும் ஏதோ ஒன்று இருக்கிறது!!! நிகாம் வெல்வார்கள்


Facebook Badge