நூடுல்ஸ் (06-07-2010)

இந்திய அரசியலில் மீண்டும் இலங்கை பிரச்சினை பெரிதாக கதைக்கப்படுகிறது, கிட்டடியில் தமிழகத்தில் ஏதாவது தேர்தல் வர போகிறது என நினைக்கிறேன். பதிவர் பவனின் பதிவில் இந்திய நண்பாகள் பலரும் இலங்கை தமிழருக்காக இந்திய மக்கள் பரிந்து பேசுவது தப்பா? என கேட்டார்கள்,  இல்லவேயில்லை, தமிழக சகோதரர்கள் இலங்கை தமிழர்கள் மீது வைத்திருக்கும் பாசம் அளவில்லாதது, ஆனால் தமிழக சந்தர்ப்பவாத அரசியல் வாதிகள் இலங்கை தமிழர்களை தங்களது அரசியல் நலனுக்காக மாத்திரமே பாவிப்பது இங்குள்ள பலருக்கும் தெரிந்த விடயம்.  அவர்களால் எம்மவர்களுக்கு எந்த வித நன்மையும் கிடைக்க போவதில்லை, தந்தியடிக்கவும்,  தண்ணயடிக்கவுமே இலங்கை தமிழரை பற்றி பேசுவார்கள், இந்த லட்சணத்தில் செம்மொழி மாநாடு வேறு...

பல கோடி ரூபா செலவில் கருணாநிதிக்கு பாராட்டு விழாவாகதான் நான் இவ்விழாவை பார்த்தேன், அதில் வீணடிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை இங்குள்ள அகதிகளுக்கு கொடுத்திருந்தால் பல நாட்கள் அதில் பசியாறியிருக்கலாம்.

-----------------------------------------------------------------------------------

இலங்கை ரக்பி லீக் சுற்று போட்டியின் இறுதிப்போட்டியில் கண்டி விளையாட்டு கழகம் கடைசி நேரத்தில் CH & FC கழகம் வெற்றி பெற்றது. வழமை போல் கண்டி விளையாட்டு கழகம் வெற்றி பெறாமை, கொஞ்சம் கவலையான விடயமாக இருந்தாலும் சுற்று போட்டியில் சகல போட்டிகளிலும் கிடைத்த புள்ளிகளின் அடிப்படையில் கண்டி விளையாட்டு கழகம் சம்பியனாக அறிவிக்கப்பட்டது சந்தோஷமே.

-----------------------------------------------------------------------------------

கால்பந்து உலக கிண்ணம் கடைசி கட்டத்தை நெருங்குகிறது, உருகுவே, நெதர்லாந்து, ஸ்பெயின், ஜேர்மன் அணிகள் மாத்திரம் எஞ்சியிருக்கின்றன, இன்றைய முதலாம் அரையிருதியில் நெதர்லாந்தும் கள்ளத்தனத்தால் காலிறுதியை வெற்றி பெற்ற உருகுவே அணியும் மோதுகின்றன, காலிறுதியில் உருகுவே வீரர் சுவாறெஸ் கையால் பந்தை தட்டிவிட்டு அணியை காப்பாற்றிவிட்டார், எனக்கு பிடித்தமான வீரராக இருந்த சுவாறெஸ் என்னும் வீரர் அன்றிலிருந்து எனக்கு பிடிக்காத வீரராகி விட்டார். பின் வாசல் வழியாக அரையிருதிக்கு வந்த உருகுவே அணியை நெதர்லாந்து துவைத்து எடுக்க வேண்டுமென்பதே எனது அவா.

-----------------------------------------------------------------------------------

இலங்கை கிரிக்கட்டின் பிதாமகனான முரளி தனது ஓய்வை டெஸ்ட் போட்டிகளில் அறிவித்து விட்டார், தன்னை யாரும் விலக்க முன்னர் தானாகவே விலகி தன்னை ஒரு கண்ணியவானாக மீண்டும் நிருபித்து விட்டார், நிறைகுடம் என்றும் தளம்பாது என்பதற்கு முரளி ஒரு சிறந்த உதாரணம், இன்றைக்கு பிராட்மனை கிரிக்கட்டின் சிறந்த துடுப்பாட்ட வீரராக விளிப்பதை போல், எதிர்காலத்தில் அக சுழற்பந்து வீச்சின் தந்தையாக முரளியை கூறுவர்,  முரளியின் கண்கள் காட்டும் பாவம் (உணர்ச்சி) எந்த நாட்டியகாரரிடமும் காணக்கிடைக்காது, முரளியின் முதலாதவது போட்டியிலிருந்து அவரை ரசிப்பதில் பெருமையடைகிறேன், இனி மேல் அவரை டெஸ்ட் போட்டிகளில் பார்க்க முடியாது என்பதை நினைக்கையில் சொல்ல முடியாத கவலை ஏற்படுகிறது.

 சுழற்பந்து வீச்சு முரளி, ஷேன் வோர்ன், குமப்ளே காலம் பொன்னெழுத்துகளால் எழுதப்பட வேண்டிய காலமாகும், முரளி பற்றி தனியாக ஒரு பதிவு போட வேண்டும், கீழே உள்ள வீடியோ 1998ல் இங்கிலாந்தில் முரளி நிகழ்த்திய ஒன்பது விக்கட் சாதனையை காட்டுகிறது, இப் போட்டியில் இங்கிலாந்து அணியின் இரண்டாம் இனிங்சின் பத்து விக்கட்டுகளில் ஒன்பதை முரளி பெற்றது மறக்கவியலாதது, (எஞ்சிய ஒரு விக்கட் உபுல் சந்தனவினால் ரன் அவுட் ஆக்கப்பட்டது) 


முரளி என்னும் வீரரை பிரதியீடு செய்வது இலங்கை கிரிக்கட்டுக்கு இலகுவாக இருக்க போவதில்லை என்பது திண்ணம்.

-----------------------------------------------------------------------------------

ராவணன் படத்தின் இறுதியில் ரகுமானின் குரலில் ஒலிக்கும் “நான் வருவேன், நானே வருவேன்” பாடலை தேடி கொண்டிருக்கிறேன், யாராவது டவுன்லோட் லிங்க் தந்து உதவுங்கள்

-----------------------------------------------------------------------------------

கால்பந்து அரையிறுதி போட்டி தொடங்க போகிறது,  நான் பார்க்க போகிறேன், அதனால் இப்பதிவிற்கு இத்துடன் முற்றுப்புள்ளி, இந்த படத்திலுள்ள மாதிரி எதிர் காலத்தில் நடந்தாலும் நடக்கலாம், காரணம் நாளைய உலகம் விளம்பர உலகம்.
6 Responses
  1. anuthinan Says:

    ராவணன் பாடல் லிங்க்
    (http://www.4shared.com/audio/GQkHNfjv/Naan_Varuvaen__a_s_k_a_r_.html)

    அண்ணே முரளியின் ஓய்வு எனக்கும் கவலையை தருகிறது!

    //பின் வாசல் வழியாக அரையிருதிக்கு வந்த உருகுவே அணியை நெதர்லாந்து துவைத்து எடுக்க வேண்டுமென்பதே எனது அவா//

    எனக்கும் அதே!


  2. அரசியல் - ஐயா கலைஞர் அறிக்கை விடுத்திருக்கிறார்.
    வாழ்த்துங்கப்பா...

    முடியல... :(

    றக்பி - கால்பந்து - :)))

    முரளி- ஆமாம்.
    பெரிய இழப்புத்தான்.
    ஆனால் சாதனைகளுக்கெல்லாம் ஒரு முடிவு உண்டு தானே.
    கிறிக்கற் தாண்டிய அவரின் எதிர்கால வாழ்வு சிறப்புற அமையட்டும்.

    விளம்பரம் - :)))


  3. வாசிச்சுட்டேன் நோ கமெண்ட்ஸ்...


  4. 'நான் வருவேன் மீண்டும் உனைத் தொடர்வேன்' பாடலை நானும் தேடிக்கொண்டிருந்தேன். தொடுப்பைக் கேட்ட யோகாவுக்கும், தொடுப்பை வழங்கிய அனுதினனுக்கும் நன்றி.


  5. சட்டமன்றத் தேர்தல் வருகின்றதாம். அப்படியே வீரவன்சாவின் வீரப்பிரதாபங்களையும் எழுதியிருக்கலாம்.

    ரக்பி வாழ்த்துக்கள்

    முரளியின் ஓய்வு கவலைதான் ஆனாலும் சிங்கத்தின் சாதனைகள் முறியடிக்கப்பட பல ஆண்டுகள் எடுக்கும்.

    உலகமே விளம்பர மயமாகிவிட்டது.


  6. Bavan Says:

    அந்த விடயம் தொடர்பாக கடைசியில் ஒரு முடிவுடன் அந்த பின்னூட்டக் கலந்துரையாடல் முடிவடைந்தது மகிழ்ச்சி.. அரசியல்வாதிகள் திருந்தப்போவதில்லை.
    ####
    உலகக்கிண்ணம் நான் ஜெர்மனிக்கு சப்போர்ட்டு..;)

    ####
    We miss u Murali....:((

    ####
    Why இந்த விளம்பரம்..:P


Facebook Badge