கிரிக்கட் - பிழையான தீர்ப்புகளினால் இந்தியா தோற்க வேண்டும்
இலங்கை இந்திய அணிகள் தனது முதலாவது டெஸ்ட் போட்டியை இன்று விளையாடுகின்றன. எனது எதிர்பார்ப்பெல்லாம் இத்தொடரில் இந்தியா நடுவர்களின் பிழையான தீர்ப்பினால் படு தோல்வி தோற்கவேண்டும் என்பதேயாகும், ஆனாலும் இலங்கையுடனான போட்டியில் ஐசீசீ நடுவர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்படுவார்களா என்பது கேள்விகுறியே?
நான் இவ்வளவும் கூறுவதற்கு காரணம் இந்திய அணியினர் இத்தொடரில் நடுவர்களின் தீர்ப்புப்பை 3வது நடுவருக்கு பரிசோதிக்க வழங்கும் UDRS எனப்படும் நடுவர்களின் தீர்ப்பை மாற்றும் முறையை பாவிக்க எதிர்ப்பு தெரிவித்திருப்பதனாலாகும். தொழிநுட்ப வசதிகள் மிகுந்துள்ள இக்காலப்பகுதியில் இவ்வாறான வசதிகளை பாவிக்க வேண்டும், அதை தவிர்த்து இவ்வாறு இந்திய கிரிக்கட் சபை இம்முறைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது சாதாரணமாகாது.
உதாரணமாக இந்தியா இலங்கையை வென்று டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாமிடத்திற்கு வந்த தொடரில் கடைசி டெஸ்டில் செவாக்குக்கு ஆட்டமிழப்புக்கு ஆட்டமிழப்பு வழங்காமலும், மிக சிறந்த போமிலிருந்த டில்சானுக்கு எதிராக வழங்கப்பட்ட பிழையான ஆட்டமிழப்புகளும் போட்டியின் முடிவை தீர்மானித்தது என்பது பலரும் அறிந்ததாகும். இவ்வாறு தவறுகள் நடைபெறாத சிறந்த போட்டிகளையே நாங்கள் பார்க்க விரும்புகிறோம். கடந்த முறை இந்தியாவுக்கு எதிரான இலங்கையில் நடைபெற்ற தொடரில் இம் UDRS முறை மூலம் இலங்கை 11 பிழையான தீர்ப்புகளை மாற்றியமை குறிப்பிடதக்கதாகும், இந்திய அணி 1 பிழையான தீர்ப்பையே மாற்றியது, இதற்கு காரணம் அணியாக இல்லாமல் தனிப்பட்ட வீரர்களுக்காகவே இம் UDRS முறையை பயன்படுத்தியது. கும்ப்ளே ஏராளமான சரியான முடிவுளை தனக்கு தேவையான முறையில் மாற்ற முயற்சித்தமையே இந்திய அணிக்கு பிழையான ஆரம்பத்தை UDRS முறையில் ஏற்பட்டது எனலாம்.
ஐசீசீயின் சமச்சீரற்ற தன்மையினாலேயே இவ்வாறான விடயங்கள் ஏற்படுகின்றன. இயன் சேப்பல் கிரிக்இன்போவில் எழுதியபடி UDRS நடை முறைபடுத்தப்படுவது ஒன்று சகல அணிகளுக்கும் கட்டாயமாக்கப்படல் வேண்டும், அல்லது இம்முறை இல்லாமலாக்கப்படல் வேண்டும். இல்லாமல் ஒரு தொடருக்கு UDRS முறை இருப்பதும், இன்னொரு தொடருக்கு UDRS இல்லாமலிருப்பதும் பிழையான விடயமாகும். பணபலமிக்க இந்திய கிரிக்கட் சபைக்கு ஐசீசீயில் இருக்கும் முக்கியத்துவத்தினால் இது சாத்தியப்படுமா என்பது சந்தேகமே? ஏனெனில் வீரர்களுக்கு ஊக்க மருந்து பாவிப்பதற்கு எதிரான WADA ஒப்பந்தத்தில் இந்திய அணி வீரர்கள் கையெழுத்திடாததினால் இன்னும் இவ்வொப்பந்தம் கிடப்பில் காணப்படுவது குறிப்பிடதக்கதாகும்.
இப்பதிவை பார்த்து இந்திய ரசிகர்கள் என்மேல் பாயக்கூடும் அவர்களுக்காகதான் ஆரம்பத்திலேயே “பிழையான தீர்ப்புகளினால் இந்தியா தோற்க வேண்டும்” என எழுதினேன், அப்போது அவர்களின் UDRS மீதான பார்வை மாறும்.
நானும் அதையே நினைத்துக் கொண்டேன்.
இன்றே அது கிட்டத்தட்ட நடந்தது, ஆனால் அந்தத் தீர்ப்பு அவர்களை பெருமளவிற்கு பாதிக்கவில்லை.
டில்ஷானுக்கெதிரான ஆட்டமிழப்புக் கோரிக்கையொன்று மங்குனி நடுவரான டெரல் ஹார்ப்பரால் நிராகரிக்கப்பட்டது.
உண்மையில் நடுவரின் நிலையில் அவரின் முடிவு சரியானதே.
இரண்டு சத்தங்கள் கேட்டன, ஆகவே துடுப்பில் பட்டு கால்தடுப்பில் பட்டதென்று நினைத்திருக்கலாம்.
உயரம் பிரச்சினையாக வருமென்று நினைத்திருக்கலாம், லெக் ஸ்ரம்ப்பை விலகிச் செல்லும் என்று நினைத்திருக்கலாம்.
எனவே சந்தேகத்தின் பலன் டில்ஷானுக்கு சார்பாக வழங்கப்பட்டது.
எனினும் மீள்காட்சிகளில் அது ஆட்டமிழப்பு என்று தெரிந்தது.
ஆகவே இந்தியா இன்று வாங்கும் என்று நினைத்தேன், ஆனால் டில்ஷான் சிறிது நேரத்திலேயே ஆட்டமிழந்து விட்டார்.
இயன் சப்பலின் ஆக்கத்தை வாசித்தேன், அருமை.
(மற்றொரு விடயம்: WADA ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டாயிற்று என்று நினைக்கிறேன்.
சில நாட்களுக்கு முன்னர் தான் இந்திய கிறிக்கற் சபை ஒத்துக்கொண்டது என்று நம்புகிறேன். )
அண்ணா எனது ஆசையும் அதே!!!
கோபி அன்னவைப்போல இன்றைய போட்டியை நானும் பார்த்தேன்!!! தில்ஷான் மூலமாகவே சரியான பதிலடி வழங்கப்படும் என்று நினைத்தேன். நிலைமை மாறிவிட்டது!!!
கிரிக்கெட் சபைகளுக்கு இடையில் சமத்துவம் வேண்டும்
சேம் பிளட்..;)
அதே.. தொழிநுட்பம் இருக்கும் போது அதை வேண்டாம் என்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்று தெரியவில்லை.
///கிரிக்கட் - பிழையான தீர்ப்புகளினால் இந்தியா தோற்க வேண்டும்///
அதே கட்டாயம் நடக்கவேண்டும்.;)
கொலை வெறி பதிவு...நடத்துங்கோ நடத்துங்கோ
க்ரிக்கெட் மட்ச் ஏதும் நடக்குதோ...???
சகோதரா சச்சின் உலகில் தலைசிறந்த வீரர்தான் அதற்காக அவருக்கு LBW வராதா. நடுவர் கை தூக்க பயப்படுகிறாரே. உங்கள் கட்டுரையை இந்திய வீரர் பார்த்தால் ஓட்டை சிரட்டையில் விழுந்து சாவார்கள்.