நூடுல்ஸ் - 28-07-2010

நேற்று இயற்கையை காதல் கொள்ளும் விடயங்களை பற்றி விடியலில் பேசிய லோஷன், இன்று காலை விடியலில் குழந்தை பருவத்தில் யாராக வர விரும்பினீர்கள் நிகழ்ச்சி நடத்தினார். அதை பார்த்ததும் சிறிய வயதில் நான் கண்டவர்களிடமெல்லாம் “நான் டொக்டராக வருவேன்” என செல்லி திரிந்தது ஞாபகம் வந்தது. யாரோ என் மனதில் சிறிய வயதில் விளைத்தது தான் டொக்டர் ஆசை. அதே ஆசையில் எனது படிப்பை தொடர்ந்தேன். இரசாயனவியல் மற்றும் தாவரவியல் பரீட்சை தாள்கள் தயாரிக்கும் பேராசிரியர்களின் சதியினால் என்னால் டொக்டராக முடியவில்லை. (அப்புறம் நான் படித்த கேள்விகள் பரீட்சையில் வராதது யார் செய்த சதி?) நான் டொக்டராகாமல் விட்டது பல உயிர்களுக்கு இலாபம் என்பது வேறு விடயம்.

இம்மாதிரியான பல விடயங்களை தாங்கி வரும் விடியல் எங்களில் பலருக்கு நாளுக்கு நல்ல தொடக்கத்தை வழங்குகிறது, அதற்காக லோலஷனுக்கும் மற்றைய வெற்றி குழுவினர்களுக்கும் நன்றிகள். இப்போதெல்லாம் நான் கேட்கும் ஒரே வானொலி நிகழ்ச்சி விடியல் மட்டும்தான், காரணம் நேரமின்மை. எனது நண்பியொருத்தி வெற்றியில் “நண்பனிடம் கேளுங்கள்” நிகழ்ச்சி கேட்க சொன்னாள், நல்ல நிகழ்ச்சியாம். நேரமின்மையினால் கேட்க முடியவில்லை.
-------------------------------------------------------------

இலங்கை தமிழ் வானொலி வரலாற்றில் பல புரட்சிகள் செய்த சூரிய வானொலி பிறந்த நாளை கடந்த வாரம் கொண்டாடியது. ஒரு காலத்தில் எனது நாளில் அநேகமான நேரத்தை சூரியனுடன் கழித்திருக்கிறேன். “மணி அடித்தி்ட இசை ஒலித்திடும் இசைத்திடும் இன்ப ராகங்கள்”, “சூரியராகங்கள்”, “மெய் மறப்போம் பொய் கறப்போம்” போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டு வந்திருக்கிறேன். 


சூரிய வானொலிக்கும் சூரிய குடும்பத்திற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். தொடர்ந்து வானலையில் சூரியன் ஜொலிக்கட்டும்-------------------------------------------------------------


பல சாதனைகளை படைத்து கடந்த வாரம் ஓய்வு பெற்ற முரளிதரன், பிஷன் சிங் பேடி அவரை பற்றி பல வருட காலமாக கூறி வந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்திருக்கிறார். என்னை பொறுத்த வரையில் பிஷன் சிங் பேடி முரளியை விமர்சிப்பது பொறாமையினால் என்றே நினைக்கிறேன். முரளி எத்தனை சோதனைகளில் தன்னை நிரூபித்திருக்கிறார். இன்னும் ஏன்????-------------------------------------------------------------


இப்போது முரளியை பலரும் தமிழர் பிரச்சினையை பேசவில்லை என கூறி தமிழின் எதிரியாக விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள், ரகுமான் ஒஸ்கார் மேடையில் இப்பிரச்சினையை பேசாமல் தமிழினத்திற்கே துரோகம் செய்து விட்டார் என ராதாரவி தொடங்கிய பிரச்சினையின் வேறு வடிவம்தான் இது. இலங்கை தமிழரை வைத்து இன்னும் எப்படியெல்லாம் இலாபம் சம்பாதிக்க போகிறார்களோ தெரியாது. 

சீமானுக்கு அவரது படபிடிப்பை இலங்கையில் நடத்துகையில் இலங்கை நல்ல நாடாக தெரிந்தது. சகோர மொழி பேசும் நாயகியை தனது படத்தில் நடிக்க வைக்கலாம், ஆனால் இப்போது விவேக் ஓப்ராயோ அல்லது அசினோ இங்கு வந்தால் .................................................................. (வார்த்தை அசிங்கமாக வருகிறது, வேண்டாம்)-------------------------------------------------------------


இலங்கை தமிழர் பிரச்சினை பற்றிய பதிவுகளில் மூக்கை நான் நுளைக்காமலிருப்பதற்கு முக்கிய காரணம், நான் பதிவெழுத தொடங்க முன்னைய காலத்தில் தெரிந்த யுனிகோட் தமிழில் தட்டு தடுமாறி இலங்கை தமிழர் பற்றிய யாரோ ஒருவர் எழுதிய பதிவில் பின்னூட்டி நல்லா வாங்கி கட்டினேன். அதுதான் நான் எழுதிய பின்னூட்டம், அந்நேரம் எனக்கு பதிவுகள் பற்றிய பெரிய அறிவு கிடையாது. என்னை பலர் நீ மலையகத்தான் உனக்கு ஈழ தமிழரை பற்றி பேச உரிமையில்லை என கூறிவிட்டனர். உண்மையை கூறினால் என்னுள்ளே எள்ளளவும் பிரதேச வாதமில்லை, ஆனாலும் அன்று தொடக்கம் இன்று வரை நான் அரசியல் மற்றும் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றிய பதிவுகளில் அடக்கியே பின்னூட்டியிருக்கிறேன். 

ரொம்ப நாளாகவே சொல்ல விரும்பிய விடயம் இன்று சொல்லிவிட்டேன்.-------------------------------------------------------------இன்று செவாக் 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்து விட்டார், சென்ற முறை இலங்கை வந்திருந்த போது 199 ஓட்டங்களிலென்று நினைக்கிறேன், முரளியின் பந்தில் ரிவர்ஸ் சுவீப் செய்து 4 ஓட்டங்களை பெற்று இரட்டை சதம் பெற்றார். அரவிந்த, சனத் ஆகியோரும் இவ்வாறே 6 அல்லது 4 ஓட்டங்களின் மூலமே சதத்தை பெறுவர். அந்த தன்னம்பிக்கை உள்ளதன் காரணமாக எனக்கு சேவாக்கை ரொம்ப பிடிக்கும். என்னை பொருத்த வரையில் இந்திய அணியில் தன்னம்பிக்கை அதிகம் உள்ள வீரராக நான் கருதுவது சேவாக்கைதான். விவியன் ரிச்சர்ட்சும் இப்படி தன்னம்பிக்கையோடு விளையாடியதாக கூறுவார்கள்.

-------------------------------------------------------------


கிரிக் இன்போ இணைய தளத்தில் நான் ரசித்த கார்டூன்

14 Responses
 1. Unknown Says:

  யோகா!

  கேலிச்சித்திரம் அருமை. நூடுல்ஸில் இன்று அதிகமாக முரளியும், ஈழத்தமிழர்களும், நம்மவூர் வானொலிகளும்.


 2. Bavan Says:

  //ரசாயனவியல் மற்றும் தாவரவியல் பரீட்சை தாள்கள் தயாரிக்கும் பேராசிரியர்களின் சதியினால் என்னால் டொக்டராக முடியவில்லை.//

  ஹா..ஹா..

  //சூரிய குடும்பத்திற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்//

  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  //ன்னை பொறுத்த வரையில் பிஷன் சிங் பேடி முரளியை விமர்சிப்பது பொறாமையினால் என்றே நினைக்கிறேன். முரளி எத்தனை சோதனைகளில் தன்னை நிரூபித்திருக்கிறார். இன்னும் ஏன்????//

  ம்ம்.. படித்தேன் முரளி சாதித்து காட்டி விட்டார் அவர்களுக்கு பொறாமை. சூரியனை பார்த்து நாய் குரைத்தால் சூரியனுக்கு எந்த பிரைச்சனையும் இல்லையே..;)

  //இப்போது முரளியை பலரும் தமிழர் பிரச்சினையை பேசவில்லை என கூறி தமிழின் எதிரியாக விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள்//

  ம்ம்... ஒரு மைதானத்துக்கு முரளியின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாம், இதை விட பெரிய கெளரவம் என்ன இருக்க முடியும். இனியும் எவனாவது தமிழ் அது இது எண்டு வரட்டும் வரட்டும் மூஞ்சியிலேயே குத்துவன்

  //இன்று செவாக் 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்து விட்டார்,//

  ஆம் பார்த்தேன், வழக்கமாக 99 இல் யார் அவுட் ஆனாலும் கவலையாக இருக்கும் அனால் இம்முறை ரண்டிவின் பந்துக்கு அவுட் ஆனது மகிழ்ச்சி அளித்தது, மற்றது சேவாக் அடித்த அடிக்கு அவுட் ஆனது அப்பாட என்று இருந்தது..ஹீ..ஹீ..

  //கிரிக் இன்போ இணைய தளத்தில் நான் ரசித்த கார்டூன்//

  ஹீ....ஹீ...

  இம்முறை நூடுல்ஸ் காரமாக ஆரம்பித்து இனிப்பாக முடிந்தது..


 3. விடியல் - :)))
  எனக்கு எந்தத் திட்டமும் இருக்கவில்லை ஆகச்சிறிய வயதில். ;)

  // நான் டொக்டராகாமல் விட்டது பல உயிர்களுக்கு இலாபம் என்பது வேறு விடயம். //

  உங்கட நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு. :)


  சூரியன் - ஆமாம்.
  வாழ்த்துக்கள்... :)


  பிஷன் பேடி - பிஷன் பேடியே எதிர்பார்த்திருக்க மாட்டார் முரளி இப்படிப் பதில் சொல்லுவார் என்று.
  'நான் இதுபற்றிக் கருத்துச் சொல்ல விரும்பவில்லை' என்று பதிலளித்திருக்கிறாராம் பிஷன் பேடி.


  முரளி - அட விடுங்கய்யா...
  யார் இதையெல்லாம் கணக்கெடுத்தா?


  // நீ மலையகத்தான் உனக்கு ஈழ தமிழரை பற்றி பேச உரிமையில்லை //

  ஹிம்... :(
  பிரதேச வாதம்... :(
  எப்போது திருந்தப் போகிறோமோ? :(


  செவாக் - முரளியின் பந்துவீச்சில் தான் 200 ஆவது ஓட்டத்தைப் பெற்றார்.
  ஆனால் அது சாதாரணமான அடியொன்றால் தான் பெற்றார்.
  நீங்கள் reverse sweep என்று சொல்வது யுனிஸ்கானின் முச்சதத்தைப் பற்றி என்று நினைக்கிறேன்.
  அது கராச்சியில் நடந்த போட்டி...
  அதில்தான் யுனிஸ்கான் reverse sweep மூலம் முச்சதமடிப்பார்... :)


 4. கேலிச்சித்திரம் அருமை.... :)


 5. @ கன்கொன் || Kangon s
  80.1
  Muralitharan to Sehwag, no run, turns in from the off stump line and hits him on the pad. Going down leg and they don't appeal

  80.2
  Muralitharan to Sehwag, no run, leans forward to defend the off break down the track
  80.3
  Muralitharan to Sehwag, no run, goes back to cut a spinning off break to the off side and to cover point and he refuses the single! he doesn't want to expose Ishant . He could have taken the 200 , though. Team before self.
  80.4
  Muralitharan to Sehwag, no run, gets forward to drive to covers
  80.5
  Muralitharan to Sehwag, no run, Aha! The reverse sweep but straight to backward point. What a guy!
  80.6
  Muralitharan to Sehwag, 1 run, He gets his 200 with a dab past square leg. The team-mates in the dressing room are up on their feet. What a superb innings this has been

  மன்னிக்கவும் இரட்டை சதம் பெற முந்திய பந்தில் ரிவர்ஸ் சுவீப் முயற்சிப்பார், அதையே நான் கொஞ்சம் பிழையாக சொல்லிவிட்டேன்
  http://www.cricinfo.com/slvind/engine/match/343730.html?innings=1;page=2;view=commentary


 6. Subankan Says:

  நூடுல்ஸ் சுவை அருமை :)

  //செவாக் - முரளியின் பந்துவீச்சில் தான் 200 ஆவது ஓட்டத்தைப் பெற்றார்.
  ஆனால் அது சாதாரணமான அடியொன்றால் தான் பெற்றார்.
  நீங்கள் reverse sweep என்று சொல்வது யுனிஸ்கானின் முச்சதத்தைப் பற்றி என்று நினைக்கிறேன்.
  அது கராச்சியில் நடந்த போட்டி...
  அதில்தான் யுனிஸ்கான் reverse sweep மூலம் முச்சதமடிப்பார்... :)
  //

  ஓ, தகவலுக்கு நன்றி


 7. @யோகா அண்ணா: :)))

  இதில் யுனிஸ்கான் முரளியின் பந்துவீச்சிலேயே reverse sweep மூலம் முச்சதம் பெறுவார்...

  188.6 Muralitharan to Younis Khan, 3 runs, gets there fittingly with the reverse sweep, paddled wide of point, he gets back for the third and kisses the ground, everyone's up and there are handshakes all around. Thrust into this new role following Shoaib Malik's removal, he's led by example. Splendid effort!!

  http://www.cricinfo.com/pakvsl/engine/match/388993.html?batsman=10439;innings=2;view=commentary

  :))) 8. anuthinan Says:

  எல்லாம் அருமை யோ அண்ணே!!

  எனக்கும் உங்களை போல டாக்டர் திட்டம் இருந்தது. நானும் கைவிட்டு விட்டேன்.

  //இலங்கை தமிழ் வானொலி வரலாற்றில் பல புரட்சிகள் செய்த சூரிய வானொலி பிறந்த நாளை கடந்த வாரம் கொண்டாடியது//

  எனது வாழ்த்துக்களும்!!!!

  //முரளி//

  நான் யார் கருத்தையும் முரளி தொடர்பில் இனி கேட்பது இல்லை.

  //தமிழர் பிரச்னை//

  எனது பதிவில் சொல்லி விட்டேன் பதிலை...

  //சேவாக்//

  நானும் ஆதரிக்கிறேன்

  //படம்//

  உண்மையில் ரசித்தேன்


 9. Unknown Says:

  // நீ மலையகத்தான் உனக்கு ஈழ தமிழரை பற்றி பேச உரிமையில்லை என கூறிவிட்டனர். //

  வருத்தமா இருக்கு மாப்ள..

  உங்களுக்கேவா?


 10. ARV Loshan Says:

  விடியல் :)
  நன்றி :)
  நண்பனிடம் சொல்லுங்கள் ஒரு நாள் கேட்டுப் பாருங்கள்.. அண்மைக் காலத்தில் நேயர்களை நிறைய ஈர்த்திருக்கிறது.

  //அப்புறம் நான் படித்த கேள்விகள் பரீட்சையில் வராதது யார் செய்த சதி?// ஹா ஹா நல்ல கேள்வி.

  //லோலஷனுக்கும்//
  ல கூடப் போட்டது ஏன்??
  கண்டிக்காமல் விட்ட கண்டனங்கள் புகழ் கங்கோனுக்கும் கண்டனங்கள்.. :)

  சூரியன் - என் வாழ்வில் மறக்க முடியாத இடம்,பெயர்.சூரியன் குழுவினருக்கு வாழ்த்துக்கள் சொன்னேன்.
  மனமார வாழ்த்துகிறேன்

  முரளி பேடிக்கு கொடுத்திருப்பது மரண அடி.
  சாது மிரண்டால்?

  முரளி - வீணர்களின் பேச்சுக்களில் எங்கள் விலை மதிக்க முடியா வீரரை நாம் விட்டுக் கொடுக்க முடியமா?
  விட்டுத் தள்ளுங்கள்.

  யோ - நீங்கள் முன்பிருந்தே அரசியல், அதும் தமிழ் அரசியல் என்றவுடன் விலகி வருவதைப் பார்த்து நானும் நினைத்தேன் எதோ உங்கள் மனம் புண்படி நடந்துள்ளது என்று. :(
  எந்தக் கீழ்த்தரமானவன் அப்படி சொன்னது?
  தமிழனின் ஈனப் புத்தியே இது தானே.
  விட்டுத் தள்ளுங்கள்.வாருங்கள் பரந்த மனதோடு. பேசலாம் பதியலாம் பலதும்


 11. தங்கச் சூரியனே என்ற பாடலை அதிகாலை வேளையில் கேட்பதற்காகவே சூரியனை அதிகாலையிலிருந்து கேட்பது வழமைஅன்று. இன்று அநதப் பாட்டைக் கேட்டாலும் ஞாபகங்கள் வருகின்றன.

  சூரியனுக்கு வாழ்த்துக்கள்.


  கேள்வி கேட்கத் தயங்கி, விவாதங்களுக்குப் பின்நின்றால் விழிப்புணர்வுகளைப் பெறுவதெப்படி, வழங்குவதெப்படி?

  பின்நிற்காதேங்கோ..


 12. "நான் பதிவெழுத தொடங்க முன்னைய காலத்தில் தெரிந்த யுனிகோட் தமிழில் தட்டு தடுமாறி இலங்கை தமிழர் பற்றிய யாரோ ஒருவர் எழுதிய பதிவில் பின்னூட்டி நல்லா வாங்கி கட்டினேன்."
  it was happend to me also....


 13. Jana Says:

  நூடில்ஸ் நல்லா இருக்கு யோகா.


Facebook Badge