என்னுயிர் தோழி்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தந்தையை போல் கண்டிக்கிறாய்
ஆனால் தந்தையல்ல
தாயை போல் பாசம் காட்டுகிறாய்
தாயுமல்ல
காதலி போல் கவனித்து கொள்கிறாய்
காதலியுமல்ல
குருவை போல வழி காட்டுகிறாய்
குருவுமல்ல
ரத்த சொந்தங்களை போல உரிமை கொள்கிறாய்
அதுவுமல்ல
இவை அத்தனையும் ஒருமுகமாக்கிய 
நீ என் தோழி

எனக்கு துக்கம் வந்தால் 
அதை நீ ஏந்தி
நீ அழுகிறாய்
சந்தோஷம் வந்தாலோ என்னை
அனுபவிக்க விட்டு - தூர நின்று
மகிழ்கிறாய் 
என் உணர்வுகளை குரலை 
கேட்டே கண்டறிகிறாய்
எனக்காக சிரிக்கவும்
அழுகவும் செய்கிறாய்
என்னை எனக்கு அறிய செய்த 
நீ என் நண்பிடி

நீ மட்டும் இல்லாமலிருந்தால்
நான் ஊதாரியாகவும்,
வாழ்வின் அர்த்தம் புரியாதவனாகவும் 
இருந்திருப்பேன்.
அப்படி பார்த்தால் உனக்கு பெரிய
கைமாறு ஏதும் செய்ததில்லை நான்

மிஸ்டு கோல் பண்ணியே செய்தி
சொல்லும் திறமை
உன்னிடம் நான் படித்தது
உன் மிஸ்டு கோலுக்கு
பதில் மிஸ்டு கோல் 
செய்யாததற்கு உன்னிடம் 
வாங்கிய திட்டுகள் ஏராளம்
நீ என் மீது கொண்ட பாசமே
அந்த வசைகள் என இப்போ புரிகிறது 

தோழி என்ற வார்த்தைக்குள்
உன்னை அடக்க முடியாது
நம் நட்பு அதையும் 
விட வீரியமிக்கது.
தினமும்
எனது நாளை தொடக்குவதும்
உனது நாள் முடிவதும்
நம் நட்போடுதான்

உன் பிறந்த நாள் நம் 
நட்புக்கு தீபாவளி பண்டிகை
நம் நட்பு தீபாவளிக்கு வாழ்த்துகள் 
சொல்லி
இன்னும் பல்லாண்டு காலம்
நீயும் நம் நட்பும்
நலமோடு வாழ்த்துகிறேன்

Happy Birth Day My Dear Sweet Friend

பி.கு.- ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாளை கொண்டாடவிருக்கும் என் தோழி்க்கு நான் கிறுக்கிய வாழ்த்து மடல்

நூடுல்ஸ் - 20-10-2010

இன்றைய திகதியை பிரிகையை அகற்றிவிட்டு எழுதினால் 20102010 என வருகிறது, இது ஒரு 3ம் அடுக்கு இலக்கமொன்றை போல இருக்கிறது, தனிப்பட்ட ரீதியாக இலக்கங்களை காதலிக்கும் எனக்கு இது விசேட நாளாக படுகிறது, காரணம் இவ்வருட ஆரம்பத்தில் எங்களது பொது முகாமையாளர் இவ்வருடத்தை “விஸ்சய் தாய (இருபது பத்து)” வருடமென்றே எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அந்த இருபது பத்து இரண்டுமுறை வரும் தினம் இன்று என்பதால் இலக்கங்களை காதலிப்பதுடன், இன்றைய நாளையும் காதலிக்கிறேன்.

----------------------------------------------------
இந்திய அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சொதப்பிய கிளார்க் அழகான சதமொன்றை பெற்று அசத்திவிட்டார், கமரூன் வைட் அடித்து ஆடி மீண்டும் தன்னை நிரூபித்துடன், அடுத்த தலைமை பதவிக்கு துண்டு போட்டு உட்கார்ந்திருப்பதையும் காட்டி விட்டார், இவ் இளைய இந்திய அணி சற்று குறைந்த பலத்துடன் இறங்கினாலும் அவுஸ்திரேலியாவுக்கு பலத்த சவாலை கொடுக்கும் என நம்பலாம்.

என்னதான் தோற்றாலும் “அவுஸ்திரேலியாவா கொக்கா?” இத்தொடரில் தனது பலத்தை அவர்கள் நிரூபிப்பார்கள்.

பதிவு எழுதி முடிப்பதற்கிடையில் மீண்டும் அவுஸ்திரேலியா என்னை ஏமாற்றிவிட்டார்கள்.

 இலங்கை கிரிக்கட் அணி ஒரு காலத்தில் தன்னை நிரூபிக்க நியுசிலாந்தை அடித்து துவைத்தது பலருக்கு நினைவிருக்கும், ஹசான் திலகரட்ன, முரளி, வாஸ், தர்மசேன, நிரேஷன் பண்டாரதிலக்க என பலரும் தன்னை உலகுக்கு வெளிக்காட்டியது நியுசிலாந்துடன்தான் ஆகும். அதே போல் இப்போது பங்களாதேஷின் முறை தன்னை நியுசிலாந்துடன் நிரூபித்து விட்டது, இனி உலக கிண்ண போட்டியில் அசத்துவார்களா? என பொறுத்திருந்து பார்ப்போம்.


----------------------------------------------------
இப்போதெல்லாம் மூஞ்சி புத்தகத்தை பார்க்காமல் பொழுது போவதேயில்லை, உணர்வுகளை வெளிக்காட்ட டிவிட்டரை விட மூஞ்சி புத்தகம் சிறந்த ஆயுதமென நினைக்கிறேன். சென்ற வாரம் பார்த்த ஸ்டேஸ்களில் எனக்கு பிடித்தது. ரிஷாட் கூல் என்னும் நண்பர் போட்ட ஸ்டேஸ் இது

“காயப்படுத்தி, காணமல் போகும் காதலை விட, 
காறி துப்பினாலும் ட்ரீட் கேட்கும் நட்பே சிறந்தது, 
நண்பேன்டா”
----------------------------------------------------
இந்த வாரம் வந்து குறுஞ்செய்திகளில் எனக்கு பிடித்தது
“காதல் என்பது ஆயா சுட்ட வடை போன்றது, 
யார் வேண்டுமானாலும் தூக்கிட்டு போய்டலாம்,
ஆனால் நட்பு என்பது ஆயா மாதிரி
யாராலும் தூக்க முடியாது”
----------------------------------------------------
எனக்கு மின்னஞ்சலில் வந்த கதை யொன்று

மருத்துவ பீட முதலாமாண்டு மாணவர்களுக்கு பரிசோதனை கூடத்தில் விளக்கமளித்த பேராசிரியர், ஒரு செத்த நாயை கொண்டு வந்து அதை பற்றி படிப்பித்தார், அங்கு அவர் மருத்துவர்களுக்கு இருக்க வேண்டிய இரு முக்கிய குணங்களை பற்றி சொன்னார் அதில் முதலாவது முக்கிய குணம் “இறந்த உடலை பார்த்து முகம் சுளிக்க கூடாது” என்று நாயின் வாயினுல் விரலை வைத்து பின்னர் விரலை தனது வாயிற்குள் செலுத்தி காமித்த பேராசிரியர் தனது மாணவர்களையும் அவ்வாறே செய்ய சொன்னார்.

சிறிது நேரம் யோசித்த மாணவர்கள் பின்னர் நாயின் வாயிற்குள் விரலை வைத்து பின்னர் அவ்விரலை தனது வாயில் வைத்து காட்டினர், கடைசி மாணவனும் செய்து காட்டிய பின்னர் பேராசியர் இரண்டாவது முக்கிய குணத்தை பற்றி கூறினார், “இரண்டாவது முக்கிய குணம் கூர்ந்து அவதானித்தல், நான் எனது நடுவிரலை நாயின் வாயிற்குள் செலுத்தினேன், ஆனால் நான் எனது வாயில் வைத்தது ஆள்காட்டிவிரலையாகும்” என்றார்

நீதி - வாழ்க்கை கடினமானதுதான், ஆனால் நாம் எதையும் கூர்ந்து அவதானிக்காமல் செயல்படுதல் ,அதை அதிகம் கடினப்படுத்துகிறது.

----------------------------------------------------
இவ்வாரம் எனது இரு தோழிகள் பிறந்த நாளை கொண்டாடுகின்றனர், சனிக்கிழமை பிறந்த நாளை கொண்டாடும் லோஜிக்கும், ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாளை கொண்டாடும் மீராவுக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
----------------------------------------------------
ரகுமானின் தீவிர ரசிகனான நான் இளையராஜாவின் பாடல்களையும் விரும்பி கேட்பேன், நான் அடிக்கடி கேட்கும் இளையராஜா இசையமைத்த பாடல்களில் ஒன்று, இப்பாடலை கேட்கும் போது நமக்கும் சங்கீத ஞானம் வருவதை போன்ற உணர்வு ஏற்படுகிறது. எனக்கு பிடித்த அந்த பாடல் “சங்கீத ஞாதி முல்லை”

 

வெள்ளை பிரம்பு தின சிறப்பு நிகழ்வுஇது பற்றிய மேலதிக செய்தியை நேற்றைய வீரகேசரியின் 8ம் பக்கத்தை பார்க்க. அதற்காக சுட்டி. படத்தை பெரிதாக்க அதனை கிளிக்கவும்

ரிக்கி பொண்டிங் - சுய அறிக்கை Ver 2.0


முழுப் பெயர் - ரிக்கி தோமஸ் பொன்டிங்

செல்லப்பெயர் - Punter (அத சொல்ல மாட்டேன்)

ரொம்ப சந்தோஷபட்டது - தலைவனாக 2 உலக கோப்பை பெற்றது(அது ஒரு கனா காலம்)

பிடித்த பாடல் (முன்பு) - ராஜாவுககு ராஜா நான்தான்... (ம்ம் எப்படியிருந்த நான்?இப்ப என்னடானா, ஒன்னா விளையாண்ட ஷேன் வோன் கூட கலாய்க்கிறான்)


பிடித்த பாடல் (தற்போது) - நானொரு ராசியில்லா ராஜா... (அவ்வ் அழுதிடுவேன்)

முணுமுணுப்பது - இளைய தளபதி ரேஞ்சுக்கு நம்மள கலாய்க்கிறாங்களே! (ர் ர் ர் ர் நற நற)

எதிரி (வெளிப்படையாக) - லட்சுமன், சச்சின் (வயசாக வயசாக திறமை கூடுதே)

எதிரி (மனதில்) -இப்போதைக்கு ஹுரிட்ஸ் (அவன் பாவம் என்னா செய்வான், பந்து சுழலாததற்கு)

நண்பன் - யாருமே இல்லை,  (எல்லாம் கட்டதொர மாதிரியே இல்ல பார்க்கிறானுங்க)

எரிச்சல் - தரப்படுத்தலில் கீழிறங்கியது (மழை கூட வர மாட்டேங்குது)

நீண்ட நாள் சாதனை - தொடர் வெற்றிகள் பெற்றது (அது.. அப்ப)

தற்போதைய சாதனை - பெங்களுர் போட்டியின் 2ம் இனிங்சில் அருமையான ஆட்டம் (ஒரு நாதாரியும் சப்போர்ட் பண்ணல, இல்லாட்டி வென்றிருக்கலாம்)

கடுப்பு - வோன், ஹேடன், மெக்ரா, கில்லி, மாடின் நான் தலைவனாயிருக்கப்ப விலகியது (வௌங்க மாட்டாங்க)

பொறாமை -  சச்சினின் சதங்கள் (கிட்ட வர வர தூர போயிடுறான்)

வேதனை - பதவி விலக சொல்லுவது (அழுதுடுவேன்)  ஒரு சீரியஸ் பதிவு போட்டதால மொக்கை பதிவுகளை மீணடும் போடுமாறு வேண்டி ஒபாமா, ஆர்னோல்ட் ஸ்வாஸ்நேர்,  பில் கிளிங்டன், பங்கி மூன் போன்றோர் கேட்டு கொண்டதால் நம்ம ரிக்கி பொண்டிங் பற்றிய மொக்கை பதிவு 

பி.கு- ரிக்கி பொன்டிங் இதை வாசித்து விட்டு இனி மேல் தேவையில்லை என நட்பை துண்டித்து கொண்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.


பி.பி.கு - இது சென்ற வருடம் ஏற்கனவே நான் எழுதிய பதிவு, இப்போதை எழுத எதுவும் வராதபடியால் மீண்டும் கொஞ்சம் மாற்றங்களுடன் பதிவிடுகிறேன்,


பி.பி.பி.கு- நான் ஒரு ரிக்கி பொண்டிங் ரசிகன், அவரது தற்போதைய நிலை கவலையளிக்கிறது.பி.கு- ரிக்கி பொன்டிங் இதை வாசித்து விட்டு இனி மேல் என் நட்பு தேவையில்லை என எனது நட்பை துண்டித்து கொண்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். 

வெள்ளை பிரம்பு தினம் - வாழ்வுக்கு ஒளி கொடுப்போம்
வெள்ளை பிரம்பு தின வரலாறு.


1921ம் ஆண்டு ஒரு விபத்தில் பார்வையிழந்த, ஜேம்ஸ் பிக்ஸ் என்னும் புகைப்பட கலைஞர் தனது வீட்டை சுற்றி அதிக போக்குவரத்து இருப்பதால் தனது கைதடியை பாவித்து வெளியே செல்ல கஷ்டப்பட்டார், மற்றையவர்களுக்கு தனது கைதடி மிக தெளிவாக தெரிவதற்கு தனது கைதடியை வெள்ளை நிறத்திற்கு பெயின்ட் செய்து பாவித்தார். இதுவே வரலாற்றில் முதல் முறையாக வெள்ளை பிரம்பு பார்வையற்றவர்களினால் பாவிக்கபட்ட சம்பவமாக தெரிகிறது.


1930ம் ஆண்டு லயன்ஸ் கழக தலைவர்களில் ஒருவரான ஜோர்ஜ் பொன்ஹாம் என்பவரின் யோசனைபடி பார்வையற்றவர்களுக்கு வெள்ளை நிற பிரம்புகள் தயாரித்து விநியோகிக்கப்பட்டன, 


பின்னர் 1964ம் ஆண்டு அமெரிக்க அரசால் ஒக்டோபர் 15ம் திகதி சர்வதேச வெள்ளை பிரம்பு பாதுகாப்பு தினமாக” (White Cane Safety Day) அறிவிக்கப்பட்டது. 
விழி புலனற்றோருக்கும் குறை விழிபுலனுடையவர்களுக்கும் உதவுவதற்கு உங்களால் முடிந்த ஏதாவது வழிகளில் உதவி செய்யுங்கள், வங்கிகளில் இவ்வகையானவர்களுக்கு பண உதவி செய்யலாம், அல்லது அவர்களுடன் ஆதரவாக பேசலாம், அல்லது இவ்வகையானோர்களுக்கு கல்வி கற்க உதவலாம், இவை எதுவும் செய்யமுடியாவிடினும் பரவாயில்லை தயவு செய்து விழிப்புலனற்றோர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கிவிடாதீர்கள். 


அவர்களும் எம்மை போல் வாழப்பிறந்தவர்களே, அவர்களுக்கு உலகை பார்க்க நாம் உதவி செய்வோம்.
நாளை (15.10.2010) சர்வதேச வெள்ளை பிரம்பு தினம், எங்களை போல் பார்வையால் உலகை பார்க்கவியலாதவர்களுக்குறிய தினம். எங்களால் முடிந்தளவு அவர்களுக்கு உதவி செய்து அவர்களது வாழ்வுக்கு ஒளி கொடுப்போம்.
பி.கு- எனது பார்வையற்ற தோழியொருவருக்கு சில தகவல்ளை பெற இணையத்தில் அலைந்த போது கிடைத்த தகவல்களே இவை.

Facebook Badge