என்னுயிர் தோழி்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தந்தையை போல் கண்டிக்கிறாய்
ஆனால் தந்தையல்ல
தாயை போல் பாசம் காட்டுகிறாய்
தாயுமல்ல
காதலி போல் கவனித்து கொள்கிறாய்
காதலியுமல்ல
குருவை போல வழி காட்டுகிறாய்
குருவுமல்ல
ரத்த சொந்தங்களை போல உரிமை கொள்கிறாய்
அதுவுமல்ல
இவை அத்தனையும் ஒருமுகமாக்கிய 
நீ என் தோழி

எனக்கு துக்கம் வந்தால் 
அதை நீ ஏந்தி
நீ அழுகிறாய்
சந்தோஷம் வந்தாலோ என்னை
அனுபவிக்க விட்டு - தூர நின்று
மகிழ்கிறாய் 
என் உணர்வுகளை குரலை 
கேட்டே கண்டறிகிறாய்
எனக்காக சிரிக்கவும்
அழுகவும் செய்கிறாய்
என்னை எனக்கு அறிய செய்த 
நீ என் நண்பிடி

நீ மட்டும் இல்லாமலிருந்தால்
நான் ஊதாரியாகவும்,
வாழ்வின் அர்த்தம் புரியாதவனாகவும் 
இருந்திருப்பேன்.
அப்படி பார்த்தால் உனக்கு பெரிய
கைமாறு ஏதும் செய்ததில்லை நான்

மிஸ்டு கோல் பண்ணியே செய்தி
சொல்லும் திறமை
உன்னிடம் நான் படித்தது
உன் மிஸ்டு கோலுக்கு
பதில் மிஸ்டு கோல் 
செய்யாததற்கு உன்னிடம் 
வாங்கிய திட்டுகள் ஏராளம்
நீ என் மீது கொண்ட பாசமே
அந்த வசைகள் என இப்போ புரிகிறது 

தோழி என்ற வார்த்தைக்குள்
உன்னை அடக்க முடியாது
நம் நட்பு அதையும் 
விட வீரியமிக்கது.
தினமும்
எனது நாளை தொடக்குவதும்
உனது நாள் முடிவதும்
நம் நட்போடுதான்

உன் பிறந்த நாள் நம் 
நட்புக்கு தீபாவளி பண்டிகை
நம் நட்பு தீபாவளிக்கு வாழ்த்துகள் 
சொல்லி
இன்னும் பல்லாண்டு காலம்
நீயும் நம் நட்பும்
நலமோடு வாழ்த்துகிறேன்

Happy Birth Day My Dear Sweet Friend

பி.கு.- ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாளை கொண்டாடவிருக்கும் என் தோழி்க்கு நான் கிறுக்கிய வாழ்த்து மடல்
12 Responses
 1. உங்கள் தோழிக்கு என் வாழ்த்துக்களும். உங்கள் நட்பிற்கும் என் வாழ்த்துக்கள்


 2. நல்லதொரு வாழ்த்து... நலம் காணட்டும் உங்கள் தோழி...


 3. Unknown Says:

  எங்களது வாழ்த்துக்களையும் சொல்லிவிடுங்கள் நண்பரே.. தொடருங்கள் நட்பு நலமாக வாழ வேண்டும். அற்புதமான நட்பை என்றும் நேசிப்பேன். என்னைப்போல் நீங்களும் நட்பின் கற்பு பாழாகாமல் இருக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.


 4. வாழ்த்துக்கள் சொல்லிவிடுங்கள்...

  நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்க வாழ்த்துக்கள்....


 5. Bavan Says:

  வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள்..:)


 6. நீங்கள் பெயர் குறிப்பிடாத அந்த தோழிக்கு என் சார்பாகவும் வாழ்த்துக்கள்...


 7. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி LK


 8. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராஜ ராஜ ராஜன்


 9. வருகைக்கும் வாழ்த்துக்கும் றமேஸ்-Ramesh

  உங்களது நட்பு பற்றிய பதிவுகளை அதிகம் ரசித்திருக்கிறேன்


 10. வருகைக்கும் வாழ்த்துக்கும் கன்கொன் || Kangon


 11. வருகைக்கும் வாழ்த்துக்கும் Bavan

  கட்டாயம் சொல்கிறேன் பவன்


 12. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி றமேஸ்-Ramesh, கன்கொன் || Kangon, பவன், philosophy prabhakaran


Facebook Badge