ரோஷன் - சுய அறிக்கை

உலக பிரபலங்களை கலாய்த்து போரடித்துவிட்டது, அதனால் இம்முறை உள்ளுர் பிரபலம் ஒருத்தரை கலாய்ப்போமா?
முழுப் பெயர் - ரோஷன் (முழுப்பெயர் எழுதினால் மூச்சு வாங்கும்)

செல்லப்பெயர் - இப்போதைக்கு விக்கிரமாதித்தன் (காரணம் அனைவருக்கும் தெரியும்

ரொம்ப சந்தோஷபட்டது - ஹெட்ரிக் எடுத்த போது(நல்ல வேளை ஸ்பொட் பிக்சிங் என யாரும் சொல்லல)

பிடித்த பாடல் (இன்று) - ஐலே ஐலே குத்துது கொடையுது... (யாருக்கு குத்துது? யாருக்கு கொடையுது?)


பிடித்த பாடல் (எப்போதும்) - நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்... (அதுவும் கிரிக்கட்டில் நடந்துவிட்டால், அவ்வளவுதான்)

பாசக்கார நண்பன் - மந்தி வயு (புனைவு கூட எழுதிட்டோமுல்ல)

நீண்ட நாள் சாதனை - கிரிக்கட் போட்டி எதிர்வுகூறல்கள் நேர் மாறாக பலித்தல் (யப்பா ஒரு மாதிரி இந்தியா வெல்லும் என கூறி நியுசிலாந்தை காப்பாத்திட்டம்)

தற்போதைய சாதனை - ”கிறிஸ் கேயில் லாராவின் சாதனையை உடைப்பாரா?” என கேட்டு மூஞ்சி புத்தகத்தி அப்டேட்டி லாராவை காப்பாற்றியது(லாரா போனில் வாழ்த்து தெரிவித்தது மறக்க முடியாத விடயம்)

கடுப்பு - சில சமயங்களில் எதிர்கூறல் பலித்துவிடுதல் (எப்பிடிதானோ தெரியல)

பொழுது போக்கு - பதிவெழுதுவது (சில சமயம் நடுராத்திரியிலும் பொழுது போக்குவமுல்ல)

பி.கு ரொம்ப நாளாக இலங்கை பதிவுகளில் கும்மி இல்லாமலிருப்பதால் இப்பதிவை எழுதி உங்களது கும்மிகளுக்கு சமர்ப்பிக்கிறேன். இப்பதிவு யாரையும் குறித்து எழுதப்பட்டதல்ல என தெரிவிக்க விருப்பம்தான், ஆனாலும் நம்பவா போறீங்க. 

இந்த பிரபலத்த கும்ம உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த நீங்கள் தயாரா?
டீலா நோடீலா?

14 Responses

 1. http://1.bp.blogspot.com/_VBBgOBOaj8g/TOKcAXk3ExI/AAAAAAAAAHk/qStOTHta6eQ/s1600/loshancar.jpg

  இதில் loshan car . jpg என்று பெயர் இருக்கிறது, ஆனால் உங்கள் பதிவில் இவரின் பெயர் ரோஷன் என்கிறீர்களே?
  ஏன்? ;-)


 2. @கன்கொன் ||

  அது அந்த கார் உரிமையாளரின் பெயர் கோபி


 3. ARV Loshan Says:

  அட.. யாருப்பா அது?
  சகிப்புத்தன்மைக்கான நாளில் மாட்டிக் கொண்ட அந்த சாது யாரோ?
  வாழ்க :)


  பிரபலம்னு சொல்றீங்களே மெய்யாலுமா? ;)


 4. .......//உலக பிரபலங்களை கலாய்த்து போரடித்துவிட்டது, அதனால் இம்முறை உள்ளுர் பிரபலம் ஒருத்தரை கலாய்ப்போமா?......//
  இது சூப்பர்....கலாய்ப்பு என்டா இதான்......

  ......//ரொம்ப சந்தோஷபட்டது - ஹெட்ரிக் எடுத்த போது(நல்ல வேளை ஸ்பொட் பிக்சிங் என யாரும் சொல்லல).....//
  சொல்லி இருப்பாங்க...பிறகு அவர் பாக்கிஸ்தான் team விளையாட வேண்டி வரும் எண்டு தான் சொல்லல....(இதுகாக 15000USD இவர் கொடுத்தாருல்ல)

  ....//நீண்ட நாள் சாதனை - கிரிக்கட் போட்டி எதிர்வுகூறல்கள் நேர் மாறாக பலித்தல் (யப்பா ஒரு மாதிரி இந்தியா வெல்லும் என கூறி நியுசிலாந்தை காப்பாத்திட்டம்)....//
  அது என்னமோ உண்மைதான்...அவர் “அடுத்த போட்டியில் சச்சின் சதம் அடிப்பார்” எண்டு சொன்னா சச்சின் 00,10,25 ஏன் 99 ல கூட out ஆகிடுவார்...

  .....//தற்போதைய சாதனை - ”கிறிஸ் கேயில் லாராவின் சாதனையை உடைப்பாரா?” என கேட்டு மூஞ்சி புத்தகத்தி அப்டேட்டி லாராவை காப்பாற்றியது(லாரா போனில் வாழ்த்து தெரிவித்தது மறக்க முடியாத விடயம்....///
  என்ன கொடும சார் இது...

  ....//கடுப்பு - சில சமயங்களில் எதிர்கூறல் பலித்துவிடுதல் (எப்பிடிதானோ தெரியல)...//
  எவ்வளவோ தாங்கிடோம் இத தாங்க மாட்டமா.....  .....//டீலா நோடீலா?..//
  டீலோ டீல்.......  loshan anna ..//சகிப்புத்தன்மைக்கான நாளில் மாட்டிக் கொண்ட அந்த சாது யாரோ?
  வாழ்க :)..//
  வாழ்க வாழ்க...


 5. இக்கி.. இக்கி.. இக்கி...


 6. விளையாட்டு வீரர்களை கலாய்த்த அளவிற்கு இவரைக் கலாய்க்காதமைக்கு கண்டனம். கவனம் ரோஷனின் ரசிகைகள் பொங்கி எழப்போகின்றார்கள். நுவரேலியாவில் கூட பலர் இருப்பதாக அறிந்தேன்.

  இவரை இவரது நண்பர்கள் செல்லமாக தலை என்கின்றார்கள். தலை அஜித்துக்கும் இவருக்கும் உள்ள ஒற்றுமை தொப்பை வேற்றுமை இவர் தமிழை அழகாகப் பேசுவார் அஜித்தோ அழகாகப் பேஸ்வார்.

  இன்றைக்கும் தன்னை யூத்தாக காட்டிக்கொள்ள எம்மைப்போன்ற பச்சிளம் பாலகர்களின் நட்பை விரும்புகின்றார்.


 7. Unknown Says:

  ///ரொம்ப சந்தோஷபட்டது - ஹெட்ரிக் எடுத்த போது(நல்ல வேளை ஸ்பொட் பிக்சிங் என யாரும் சொல்லல)///

  அய்யோ... நான் ஒருத்தன் கழுதையாக் கத்தியும் ஒருத்தனும் கண்டுகொள்ளவில்லை


 8. //கிருத்திகன் said...

  அய்யோ... நான் ஒருத்தன் கழுதையாக் கத்தியும் ஒருத்தனும் கண்டுகொள்ளவில்லை//

  அவரே காசு கொடுத்துதான் விளையாடினாராம் ஏனைய 10 வீரர்களுக்கும் அந்த அணியின் முகாமைத்துவம் காசு கொடுத்ததாம் இவர் தன்னைச் சேர்க்கச் சொல்லி காசு கொடுத்தாராம். எனக்கு அவுட்டாகிய அந்த 3 பேரிலும் சந்தேகம் காரணம் மேட்ச் முடிந்தபின்னர் அந்த மூவருக்கும் இவர் நளபாகத்தில் அப்பம் வாங்கிகொடுத்தாராம், 9. ////பி.கு ரொம்ப நாளாக இலங்கை பதிவுகளில் கும்மி இல்லாமலிருப்பதால் இப்பதிவை எழுதி உங்களது கும்மிகளுக்கு சமர்ப்பிக்கிறேன். இப்பதிவு யாரையும் குறித்து எழுதப்பட்டதல்ல என தெரிவிக்க விருப்பம்தான், ஆனாலும் நம்பவா போறீங்க. //////
  அப்புறம் என்ன ஒரு போடு போடுங்க.. நானும் ஒரு நாளும் இந்தக் கும்மியில சங்கமிக்கல இந்த ஜக ஜோதியில் முக்குளிப்போம் அந்த ”முத்துக்கள் பத்தை” முகர்ந்தெடுப்போம்....


 10. Bavan Says:

  //கடுப்பு - சில சமயங்களில் எதிர்கூறல் பலித்துவிடுதல் (எப்பிடிதானோ தெரியல)//

  இவர் கடுப்பாகி நான் பாத்ததே இல்லை...:P

  //நீண்ட நாள் சாதனை - கிரிக்கட் போட்டி எதிர்வுகூறல்கள் நேர் மாறாக பலித்தல் (யப்பா ஒரு மாதிரி இந்தியா வெல்லும் என கூறி நியுசிலாந்தை காப்பாத்திட்டம்)//

  ங்கொய்யால.. ஆஷசில் இங்கிலாந்தைக் காப்பாற்றாவிட்டால் கொலை விழும்..:P


 11. உங்களுக்கு பிடித்த பத்து கமல் படங்கள் என்ற தொடர்பதிவை எழுத உங்களை அழைக்க நினைக்கிறேன்... எழுதுகிறீர்களா...


 12. கட்டாயம் எழுதுகிறேன்.


Facebook Badge