கமல் படங்களில் பிடித்த 10 படங்கள்

நண்பர் பிலோசபி பிரபாகரன் எனக்கு பிடித்த சிறந்த 10 கமல் படங்களை பற்றிய தொடர்பதிவொன்றுக்கு அழைத்துள்ளார். கமல் படங்களில் எனக்கு பிடித்த படங்களை 10 என்னும் குறுகிய வட்டத்துக்குள் வைக்கவியலாது என்பது கண்கூடு. எனினும் சிறிய வயது முதல் நான் பார்த்ததில் எனக்கு பிடித்த கமல் படங்களில் பத்து படங்களை இங்கு பட்டியலிடுகிறேன்.

சிறிய வயதில் கமலின் ஜனரஞ்சக படங்ளை மாத்திரமே ரசித்துவந்த நான், ரஜனி படங்களையே அதிகமாக ரசித்திருக்கிறேன், ஆனாலும் ஓரளவுக்கு விவரம் தெரிந்த பின்னர் கமல் என்னும் கலைஞனை பார்த்து வியந்திருக்கிறேன். பொது வாழ்வில் கமல் என்னும் மனிதன் தன்னை எப்போதும் திறந்த புத்தகமாகவே வெளிக்காட்டியிருப்பது எனக்கு எப்போதும் ஆச்சிரியம் தரும் விடயமே. அதிலும் பலர் தன்னை உத்தமர் என காட்ட விரும்புகையில் கமல் தனது விடயங்களை (கமலின் பல கருத்துக்களோடு முரண்பாடு இருந்தாலும்) மறைக்க விரும்பாதது ஆச்சரியமான விடயமே.

இனி எனக்கு பிடித்த கமலின் படங்களில் சிறந்த 10 படங்கள்.

10. மைக்கல் மதன காமராஜன்
தமிழில் வழமையாக இரட்டை வேடம் என்றால் மச்சம் வைத்திருப்பவர் ஒரு வேடமும், மச்சம் இல்லாமல் இருப்பவர் ஒரு வேடமும் என கருதப்பட்ட காலத்தில் நான்கு வேடங்களை கமல் அநாயாசமாக நடித்திருப்பார். 4 கமலினதும் உடல்மொழிகள்(Body Language) வெவ்வேறானதாக இருக்கும்.
  இதில் என்ன விசேடம் என்றால் 4 பேர்களையும் சுற்றியே கதை பின்னப்பட்டிருப்பதும், அதில் யாரும் முக்கியமில்லாமல் இல்லை என்பதுமாகும், மேலும் தன்னை ஒரு சிறந்த நகைச்சுவை நாயகனாகவும், கதை வசனகர்த்தாவாகவும் வெளிக்காட்டிய படம்.

09.புன்னகை மன்னன்
நாயகன் நாயகி இருவரும் தற்கொலை செய்ய முயலும் போது கமல் மரத்தில் தொங்கிவிட ரேகா அவர் கண்முன்னாடியே கீழே விழுவதை பார்த்து கமல் அழும் காட்சி இன்னும் பலருக்கு மறக்க முடியாது. இன்னும் கமலை மிமிக்ரி செய்பவர்கள் இதைதான் நடித்து காட்டுகிறார்கள். இப்படத்தில் கமல் தனது நவரச நடிப்பை காட்டியிருப்பார். அதிலும் கமல் கோபப்படும் காட்சிகளை பார்க்கும் போது எமக்கும் பயம் வரும், சிறப்பாக நடனமும் ஆடியிருப்பார். சாப்ளின் சின்னப்பாவாக வரும் கமலின் நடிப்பு என்றுமே மறக்க முடியாதது. இப்படத்தை பார்க்கும் போது எனக்கு வயது 14, அதற்கு பின்னர் இப்படத்தை என்றுமே பார்த்ததில்லை, ஆனாலும் இப்படம் என்றும் நினைவில் இருக்கிறது.

08. குருதிப்புனல்
நாயகன் வெல்லவேண்டும், வில்லன் திருந்த வேண்டும் அல்லது சாக வேண்டும் என்னும் தரித்திரம் பிடித்த தமிழ் சினிமா விதிக்கு மாறாக எடுக்கப்பட்ட படம், பாடல்கள் அற்ற இப்படம் ஆங்கில படங்களுக்கு இணையாக எடுக்கப்பட்ட படம். இதில் கமலின் நடிப்பு அதி சிறப்பாக இருக்கும். இவ்வாறான ஒரு பாத்திரத்தை தேர்ந்தெடுத்ததற்காக கமலை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்

07. தசாவதாரம்
பத்து கமல்கள் ஒருத்தரினதும் உடல் மொழி, வார்த்தை பிரயோகம் மற்றவரை போன்று இருக்காது. பத்து நடிகர்களின் வித்தியாசமான நடிப்பை தனி ஒருவரே நடித்திருப்பார், மேலும் கதாசிரியராக தமிழ் சினிமாவை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்றிருக்கிறார் கமல். இதில் சில முக ஒப்பனைகள் வெளி தெரிந்தாலும், கமல் என்னும் கலைஞனின் பல முகங்களை வெளிக்காட்டிய இப்படம் எனக்கு மிக பிடித்த படங்களில் ஒன்று.

06. விக்ரம்
வாத்தியாரின் கதையில் கமல் நடித்த துப்பறியும் பாணியிலான படம், இன்றைய கால கட்டத்தில் இப்படம் எடுக்கப்பட்டிருந்தால், இப்போதிருக்கும் தொழிநுட்பத்திற்கும், கமலின் அனுபவத்திற்கும் தமிழ் சினிமாவின் சிகரம் தொட்ட படமாகியிருக்கும். ஆனாலும் சிறிய வயதில் நான் ரசித்து கை தட்டி பார்த்த படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தின் பாடல்களான “விக்ரம், விக்ரம்”, “என் ஜோடி மஞ்சக்குருவி”, “வனிதாமணி”, “மீண்டும் மீண்டும் வா” என்பன இன்னும் ரசிக்க கூடியவை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

05. நாயகன்
மணிரத்தினம் என்னும் இயக்குனரின் ரசிகனான எனக்கு கமலின் நடிப்பை நம்ம டைரக்டர் மிக சிறப்பாக வெளிக்கொணர்ந்தது மகிழ்ச்சி. வேலு நாயக்கரை தமிழ் சினிமா என்றுமே மறக்காது. கமல் என்னும் நடிகனுக்கு தேசிய விருது வாங்கி கொடுத்த படம். “நாலு பேருக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பில்லை” என்னும் வசனம் இன்றும் பலரால் பேசப்படுகிறது. இப்படத்திற்கு இசைஞானி வழங்கியிருக்கும் இசை காலத்தால் அழியாதது. “கோட் பாதர்” பாதர் என்னும் ஆங்கில படத்தின் தழுவல் என பலரும் இதைக்குறிப்பிடுவர், சரி அப்படியே இருந்துட்டு போகட்டும். எந்த குப்பனும் சுப்பனும் கோட்பாதரை ரசிக்க போகிறான், அவங்களுக்கு புரியும் மொழியில் ஒரு படம் வெளிவருவது நன்றே, அது தழுவல் படமாயிருந்தாலும் பரவாயில்லை. நானும் இன்னும் கோட்பாதர் படம் பார்க்கவில்லை. ஆகவே நாலு பேருக்கு (எனக்கும்தான்) நல்லது நடந்தா எதுவும் தப்பில்லை.


04. மகாநதி
எனது பள்ளிகாலத்தில் எனது வீட்டின் அருகே உள்ள ஒரு சிங்கள அன்பரினால் எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட படம். அவரால் எனக்கு பல உலக திரைப்படங்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன, அதில் ஒரு உலக தரமான திரைப்படம் மகாநதி. கமலை சிறந்த நடிகர் என சொல்ல விரும்பாதோர் இப்படத்தை பார்த்தால் தனது கருத்தை மாற்றிக் கொள்வர். கமல், சந்தானபாரதி கூட்டணியில் தமிழுக்கு கிடைத்த சிறந்த படம் இதுவேயாகும்.


03. விருமாண்டி
விருமாண்டி, கொத்தாளதேவர், நல்லம நாயக்கர், பேய்காமன், அன்னலட்சுமி போன்ற பாத்திரங்களை மறக்கத்தான் முடியுமா? கமலின் இன்னொரு முகமான இயக்குனர் கமலை தமிழுலக்கு எடுத்து காட்டிய படம். திரைக்கதை அமைப்பில் தமிழுக்கு புதுமைகளை புகுத்திய இப்படத்தில் இளையராஜா இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார். அப்பத்தா செத்த பின்னர் விருமாண்டியின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் படத்தின் ஆரம்ப காட்சிகளில் கமலின் அட்டகாசமான நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்றிருக்கும். காதல், வன்முறை, ஏக்கம், வன்முறை, பாசம் என சகலவற்றையும் மிக சிறப்பாக வெளிக்காட்டிய இயக்குனர் கமலை இப்படத்தில் மிகவும் ரசித்தேன். இந்த படத்திற்கு பேர் வைக்க கமல் பட்ட கஷ்டங்கள் தமிழர்கள் எவ்வளவு கீழ்போக்காக யோசிக்கிறார்கள் என்பதற்கு உதாரணம்.


2. மூன்றாம் பிறை
இப்படத்தை பார்த்து அடுத்த இரண்டு நாட்கள் தூக்கம் வராமல் தவித்திருக்கிறேன், தூங்க கண்ணை மூடினால் கண்ணுக்குள் கமல் ரயில் நிலையத்தில் விஜிக்காக குரங்கு போல நடிக்கும் காட்சி வந்து என்னை ஏதோ செய்திருக்கிறது. படம் முழுக்க சிறப்பாக சிறுமி குணம் கொண்ட பெண்ணாக நடித்த ஸ்ரீதேவியின் நடிப்பை கடைசி 10 நிமிட நடிப்பால் கமல் வென்று விடுவார். சீனு பாத்திரத்தில் கமலின் மிக சிறந்த நடிப்பை காணலாம். இந்த படம் இன்னும் என்னுள் மறக்காமல் இருப்பதற்கு காரணம் கடைசி சில நிமிடங்களில் கமல் என்னும் கலைஞன் திரையின் முழு ஆளுமையையும் கைப்பற்றியது ஆகும். கிட்டத்தட்ட இதன் இரண்டாம் பகுதி போல் வெளிவந்த படம் “தீபாவளி”. ஏனேனில் மனநிலை சரியாக வந்த பின்னர் தன்னை மறந்த காதலிக்கு தன்னை அறிமுகம் செய்ய துடிக்கும் நாயகன், என்னும் கதை சுருக்கத்தில் வெளி வந்த இப்படம் ரசிகர்களின் மனநிலையை பெரிதாக மூன்றாம் பிறையை போல் ஆக்கிரமிக்காமைக்கு காரணம், தமிழ் சினிமாவின் எவர்கிறீன் ஜோடி கமல், ஸ்ரீதேவியின் நடிப்பாகும்.


1. அன்பே சிவம்

யார் யார் சிவம், நீ நான் சிவம், ஆத்திகம் பேசும் அடியோர்க்கெல்லாம் சிவமே அன்பாகும், நாத்திகம் பேசும் நல்லவர்க்கெல்லாம் அன்பே சிவமாகும்” என்னும் கருத்தை கூறிய படம். எவ்வதையிலும் ஒத்து போகா இரு முரண்பட்ட கருத்துக்களையுடைய இரு கதாபாத்திரங்களுடன் பயணிக்கும் படமானது, கதை, திரைக்கதை, வசனம், இசை, ஒளிப்பதிவு, படதொகுப்பு, இயக்கம் என எல்லாவகையிலும் மிக சிறந்த படமென்பதில் மாற்றுக்கருத்து இருக்காது என நம்புகிறேன். கமல், மாதவன் என்னும் இரு துருவங்களோடு பயணிக்கும் படத்தோடு நாமும் பயணிக்கிறோம். கமலுக்கு மாத்திரமல்ல மாதவன், சுந்தர்.சீ ஆகியோருக்கும் இப்படம் ஒரு மைல்கல் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. என்னுடைய All Time Favorite படம் அன்பே சிவமாகும்.
பி.கு - இங்கு நான் சொல்லியிருப்பது சில படங்களை மாத்திரமேயாகும். இன்னும் சலங்கை ஒலி, வசூல் ராஜா, உன்னைப் போல் ஒருவன், வேட்டையாடு விளையாடு, மும்பை எக்ஸ்பிரஸ், ஆளவந்தான், பஞ்சதந்திரம், அவ்வை சண்முகி, இந்தியன், கலைஞன், தெனாலி, நம்மவர், அபுர்வ சகோதரர்கள், சூரசம்ஹாரம், ஒரு கைதியின் டைரி, கல்யாணராமன், வாழ்வே மாயம், குரு ஆகிய படங்கள் இவ்வரிசையில் இடம் பெறாமல் போனதற்கு காரணம் என்னை இங்கு எழுத சொன்னது 10 படங்களை மாத்திமே என்பதினாலாகும்.


இத்தொடர்பதிவை எழுத நான் அழைப்பது
1. லோசன் (தீவிர கமல் ரசிகரான இவருக்கு பிடித்த 10 கமல் படங்களை ரசிக்கலாம்)
2. கன்கொன் கோபி (இவர் அதிகம் படம் பார்க்கா விட்டாலும், இவரை எழுத அழைக்க காரணம் நீண்ட காலம் பதிவெழுதாமலிருப்பரை பதிவவுலகிற்கு அழைத்து வர முயற்சிப்பதாலாகும்.
3. வந்தி மாமா (கமல் பற்றி இவர் எழுதினால் ரசிக்கலாம், எழுத நேரமிருக்குமோ தெரியாது?)
2. ம.தி. சுதா (சுடு சோறு சாப்பிடுபவரின் ரசனையை ரசிக்கலாம்
27 Responses
  1. ஆகா அருமையான பார்வை அருமையான தேடலுடன் எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோதரம்....


  2. அடடா நம்மளுக்குத் தான் சுடு சோறா... மழைக்குளிருக்கு அருமையாக இருக்கிறது....

    கட்டாயம் ஏற்றுக் கொள்கிறேன் ஏற்கனவே ராஜ கோபால் அண்ணனும் என்னை அழைத்திருந்தார்.. அதனால் இரண்டும் ஒன்றொடு ஒன்று செர்ந்ததே....


  3. ஆகா அழைப்புக்கு நன்றி.

    கமல் பற்றி எழுதுவது எனக்கு பிடித்தது தான்.
    நிச்சயம் எழுதுகிறேன். :-)

    உங்கள் தெரிவுகளையும் இரசித்தேன்.
    அனேகப் படங்கள் எனக்கும் மிகப் பிடித்தவை தான்.


  4. Subankan Says:

    ஆகா, கமல் படங்கள் தொடர் பதிவா? உங்கள் தெரிவிற்குள் எனக்குப் பிடித்தவையும் இருக்கின்றன, யதார்த்தம்தானே? தொடர்வதற்கு அருமையான தெரிவுகள். கலக்கல் :))


  5. Jana Says:

    ஒரு கமலின் இரசிகனாக இருந்துகொண்டு இந்தப்படங்களில் இதுதான் எனக்கு மிகவும் பிடித்தபடம் என்று என்னால் சொல்லமுடியவில்லை. என்றாலும் நீங்கள் தெரிவு செய்துள்ள படங்கள் ஒவ்வொன்றையும் குறைந்தது மூன்று தடவைகளுக்கு மேலே பார்த்திருக்கின்றேன். தங்கள் விருப்புக்களும் விரும்பத்தக்கதே. எழுதியவிதமும் அருமை யோ.


  6. Bavan Says:

    உங்கள் தெரிவுகள் எல்லாமே எனக்கும் பிடித்த படங்கள்..:)

    And இப்போ வெயிட்டிங் for மன்மதன்====>>
    :)


  7. anuthinan Says:

    எனக்கும் நீங்கள் சொல்லிய படங்களில கமலை நன்கு பிடிக்கும்!!!


  8. anuthinan Says:

    எனக்கும் நீங்கள் சொல்லிய படங்களில கமலை நன்கு பிடிக்கும்!!!


  9. ARV Loshan Says:

    அருமையான தொடருக்கு அழைத்தமைக்கு நன்றிகள்..
    நிச்சயம் எழுதுகிறேன்.

    யோ, எல்லாப் படங்களையும் நீங்களே சொல்லிவிட்டால் எப்படி?
    கமலின் முத்துக்களில் பத்தை எங்கே தேடுவது?
    பத்துக்கு மேலே இருக்கே..

    உங்கள் தெரிவுகளில் அநேகம் எனக்கும் மிகப்பிடித்தவை.

    ஆனால் காரணங்களை மட்டும் கொஞ்சம் மாற்றலாம் ;)

    LOSHAN
    www.arvloshan.com


  10. @ யோ வொய்ஸ் (யோகா)
    தொடர்பதிவு எழுதியமைக்கு மிக்க நன்றி நண்பரே...

    உங்கள் தேர்வுகளில் விக்ரம், மூன்றாம் பிறை படங்களை நான் பார்த்ததில்லை... அது தவிர மற்ற படங்கள் அனைத்தும் எனக்கும் பிடிக்கும்...

    இணைத்துள்ள படங்கள் அருமை...

    லோஷன், கன்கொன் என்று பிரபல பதிவர்களை எழுத அழைத்திருக்கிறீர்கள்... இதனால் இந்த தொடர்பதிவு நன்கு பரவும் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி...


  11. Anonymous Says:

    :))) Gud Collection!


  12. கரும்புதின்ன கசக்குமா?
    ஏற்கனவே உலகநாயகன் பற்றிப் பல தடவை எழுதியிருந்தாலும் யோவின் அன்புக்காக சில நாட்களில் எழுதுகின்றேன்.


  13. ஆஹா, கமல் படங்கள் பத்து;
    அததனையும் முத்து.
    விரிவாய் விளக்கங்களுடன் எழுதியிருந்தீர்கள்.

    கமல் பாடிய பாடல்:

    http://kalaiyanban.blogspot.com/2010/11/raasaathi.html


  14. /// ம.தி.சுதா said...
    ஆகா அருமையான பார்வை அருமையான தேடலுடன் எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோதரம்....////
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரம்


  15. ////ம.தி.சுதா said...
    அடடா நம்மளுக்குத் தான் சுடு சோறா... மழைக்குளிருக்கு அருமையாக இருக்கிறது....

    கட்டாயம் ஏற்றுக் கொள்கிறேன் ஏற்கனவே ராஜ கோபால் அண்ணனும் என்னை அழைத்திருந்தார்.. அதனால் இரண்டும் ஒன்றொடு ஒன்று செர்ந்ததே.//////

    இப்போதெல்லாம் சுடு சோறு உங்களுக்கு என்பது எழுதப்படாத விதி. எழுதுங்கள் வாசிக்க காத்திருக்கிறேன்


  16. /////கன்கொன் || Kangon said...
    ஆகா அழைப்புக்கு நன்றி.

    கமல் பற்றி எழுதுவது எனக்கு பிடித்தது தான்.
    நிச்சயம் எழுதுகிறேன். :-)

    உங்கள் தெரிவுகளையும் இரசித்தேன்.
    அனேகப் படங்கள் எனக்கும் மிகப் பிடித்தவை தான்./////

    என்னாது எழுத போறீங்களா? டண்டனக்கா டணக்குணக்கா

    பராக்! பராக்! கன்கொன் பதிவெழுத போறார் பராக்! பராக்!


  17. ///Subankan said...
    ஆகா, கமல் படங்கள் தொடர் பதிவா? உங்கள் தெரிவிற்குள் எனக்குப் பிடித்தவையும் இருக்கின்றன, யதார்த்தம்தானே? தொடர்வதற்கு அருமையான தெரிவுகள். கலக்கல் :))////
    இத்தொடர் சுத்தி சுத்தி உங்களிடமும் வரவேண்டும். உங்களது ரசனையையும் அறிய ஆசை


  18. ////Jana said...
    ஒரு கமலின் இரசிகனாக இருந்துகொண்டு இந்தப்படங்களில் இதுதான் எனக்கு மிகவும் பிடித்தபடம் என்று என்னால் சொல்லமுடியவில்லை. என்றாலும் நீங்கள் தெரிவு செய்துள்ள படங்கள் ஒவ்வொன்றையும் குறைந்தது மூன்று தடவைகளுக்கு மேலே பார்த்திருக்கின்றேன். தங்கள் விருப்புக்களும் விரும்பத்தக்கதே. எழுதியவிதமும் அருமை யோ////

    கமல் ரசிகர்களுக்கு எது சிறந்த கமல் படம் என்பதை தெரிவதில் சிக்கலுண்டு என்பதை நானறிவேன்


  19. //// Bavan said...
    உங்கள் தெரிவுகள் எல்லாமே எனக்கும் பிடித்த படங்கள்..:)

    And இப்போ வெயிட்டிங் for மன்மதன்====>>
    :)////

    நானும் அதுக்குதான் வெயிட்டிங்ணா


  20. /////Anuthinan S said...
    எனக்கும் நீங்கள் சொல்லிய படங்களில கமலை நன்கு பிடிக்கும்!!!/////
    அநேகமாக அனைவருக்கும் பிடிக்கும் அனு..


  21. ///// LOSHAN said...
    அருமையான தொடருக்கு அழைத்தமைக்கு நன்றிகள்..
    நிச்சயம் எழுதுகிறேன்.

    யோ, எல்லாப் படங்களையும் நீங்களே சொல்லிவிட்டால் எப்படி?
    கமலின் முத்துக்களில் பத்தை எங்கே தேடுவது?
    பத்துக்கு மேலே இருக்கே..

    உங்கள் தெரிவுகளில் அநேகம் எனக்கும் மிகப்பிடித்தவை.

    ஆனால் காரணங்களை மட்டும் கொஞ்சம் மாற்றலாம் ;)/////

    தொடரை எழுத ஒத்து கொண்டமைக்கு நன்றிகள்,

    கஷ்டப்பட்டு 10 முத்துக்களை தேடி எடுங்கள்

    காரணம் மாறினாலும் உங்களது காரணம் அறிய ஆவலுடனிருக்கிறேன்


  22. ////// philosophy prabhakaran said...
    @ யோ வொய்ஸ் (யோகா)
    தொடர்பதிவு எழுதியமைக்கு மிக்க நன்றி நண்பரே...

    உங்கள் தேர்வுகளில் விக்ரம், மூன்றாம் பிறை படங்களை நான் பார்த்ததில்லை... அது தவிர மற்ற படங்கள் அனைத்தும் எனக்கும் பிடிக்கும்...

    இணைத்துள்ள படங்கள் அருமை...

    லோஷன், கன்கொன் என்று பிரபல பதிவர்களை எழுத அழைத்திருக்கிறீர்கள்... இதனால் இந்த தொடர்பதிவு நன்கு பரவும் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி/////

    நீண்ட நாட்களாக எழுதாமலிருந்த என்னை எழுத வைத்தமைக்கு நன்றிகள், மூன்றாம் பிறை பாருங்கள், கட்டாயம் பிடிக்கும்


  23. ////// philosophy prabhakaran said...
    @ யோ வொய்ஸ் (யோகா)
    தொடர்பதிவு எழுதியமைக்கு மிக்க நன்றி நண்பரே...

    உங்கள் தேர்வுகளில் விக்ரம், மூன்றாம் பிறை படங்களை நான் பார்த்ததில்லை... அது தவிர மற்ற படங்கள் அனைத்தும் எனக்கும் பிடிக்கும்...

    இணைத்துள்ள படங்கள் அருமை...

    லோஷன், கன்கொன் என்று பிரபல பதிவர்களை எழுத அழைத்திருக்கிறீர்கள்... இதனால் இந்த தொடர்பதிவு நன்கு பரவும் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி/////

    நீண்ட நாட்களாக எழுதாமலிருந்த என்னை எழுத வைத்தமைக்கு நன்றிகள், மூன்றாம் பிறை பாருங்கள், கட்டாயம் பிடிக்கும்


  24. //// silarojakkal said...
    :))) Gud Collection////

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்


  25. //// வந்தியத்தேவன் said...
    கரும்புதின்ன கசக்குமா?
    ஏற்கனவே உலகநாயகன் பற்றிப் பல தடவை எழுதியிருந்தாலும் யோவின் அன்புக்காக சில நாட்களில் எழுதுகின்றேன்////


    வந்தியாவது இத்தொடரை எழுதாமல் விடுவதாவது, உங்களை பதிவுலகுக்கு இழுத்து வரவே இத்தலைப்பில் உங்களை எழுத அழைத்தேன், ஏற்று கொண்டமைக்கு நன்றிகள் பல கோடி


  26. /////கலையன்பன் said...
    ஆஹா, கமல் படங்கள் பத்து;
    அததனையும் முத்து.
    விரிவாய் விளக்கங்களுடன் எழுதியிருந்தீர்கள்.

    கமல் பாடிய பாடல்:

    http://kalaiyanban.blogspot.com/2010/11/raasaathi.html////

    நன்றி தலீவா, வந்துட்டோமுல்ல


  27. /////கலையன்பன் said...
    ஆஹா, கமல் படங்கள் பத்து;
    அததனையும் முத்து.
    விரிவாய் விளக்கங்களுடன் எழுதியிருந்தீர்கள்.

    கமல் பாடிய பாடல்:

    http://kalaiyanban.blogspot.com/2010/11/raasaathi.html////

    நன்றி தலீவா, வந்துட்டோமுல்ல


Facebook Badge