நூடுல்ஸ் - 08 -12 - 2010
ரொம்ப நாளாக தொய்வுநிலையில் இருந்த இலங்கை தமிழ் பதிவுலகம் கடந்த ஒரு வாரமாக மீளவும் உற்சாகமாகி பழைய நிலைக்கு வந்திருப்பது மகிழ்ச்சியான விடயம், அதுவும் பதிவர்களை கலாய்க்கும் பதிவுகள் அதிகரிப்பது, பதிவர்களுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. எதிர்வரும் 19ம் திகதி நடக்கவிருக்கும் பதிவர் சந்திப்பின் பின்னர் இன்னும் அதிக பதிவுகள் வெளிவரும் என்தில் எவ்வித ஐயமுமில்லை, காரணம் கடந்த இரண்டு பதிவர் சந்திப்புகளின் பின்னரும், சர்ச்சைக்குரிய “இருக்கிறம்” சந்திப்பிற்கு பின்னரும் எம்மவர்களின் பதிவுகள் அதிகரித்ததை யாமறிவோம்.
------------------------------------------------
ஆஷஷில் இங்கிலாந்திற்கு சவாலாக இருக்கவேண்டிய அவுஸ்திரேலிய அணியினர் இப்படி பல் புடுங்கிய பாம்பாக இருப்பது கொஞ்சம் கவலையளிக்கிறது, அதிலும் Punter சொதப்புவது அவரது தீவிர ரசிகர்களுக்கு (எனக்குதான்) ஏமாற்றமளிக்கிறது.கடந்த 10 வருடங்களில் முதல் முறையாக தர வரிசையில் முதல் 20 துடுப்பாட்ட வீரர்களுக்குள் அவர் இடம் பெறாமையானது அவரது சொந்த போர்ம் சிறப்பாக இல்லாமையை காட்டுகிறது. உலக கிண்ணத்திற்கு முன்னர்அவர் பழைய நிலைக்கு வர வேண்டும், அப்போதுதான் விறுவிறுப்பான உலக கிண்ண போட்டிகளை பார்க்கலாம்.
------------------------------------------------
இந்திய அனுபவமிக்க டெஸ்ட் அணி நியுசிலாந்தோடு தடுமாறி தொடரை வெல்ல, அனுபமற்ற இந்திய ஒரு தின அணி நியுசிலாந்தோடு கலக்கலாய் ஆடி தொடரை வென்றதும் இந்திய அணியின் Bench Strength ஐ காட்டுகிறது.
------------------------------------------------
எங்களது கண்டியில் புது மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடக்கிறது, போய் பார்ப்போமென்றால் வருண பகவான் எங்களுக்கெல்லாம் எதிரியாய் வந்து எங்களது திட்டங்களை தவிடு பொடியாக்கிவிட்டார். உள்ளக கிரிக்கட் போட்டி தொடர்தான் தற்போது இலங்கையில் விளையாடலாம் என நினைக்கிறேன்.
------------------------------------------------
“மன்மதன் அம்பு” பாடல்கள் கேட்டேன், அதிலும் கமலின் கவிதை வரிகள் கேட்டு நிரம்ப ரசித்தேன், இந்த மனுஷனுக்குள் எத்தினை திறமைகள்? “காபி வித் அனு” நிகழ்ச்சியில் கமல் சுட சுட எழுதிய வெண்பா ரசிக்கும் படியாக இருந்தது. வழமையாகவே கமலின் பேட்டிகளை மிகவும் ரசிக்கலாம், காரணம் அதிகமாக கமல் யாருக்கும் “வாளி” வைப்பதில்லை.
------------------------------------------------
வெற்றியின் விடியல் கேட்டு நாளை ஆரம்பிக்கும் நான் தற்போது வானொலியே கேட்பதில்லை ஏனெனில் முன்னர் FM 105.1 இல் ஒலிபரப்பாகிய வெற்றி FM இப்போதெல்லாம் அவ்வலைரிசையில் ஒலிபரப்பாவதில்லை என நினைக்கிறேன். லோஷன்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
------------------------------------------------
உயர்தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் அதிக புள்ளிகளை பெற்ற மாணவர்களில் இருவர் கொழும்பை சேர்ந்தவர்கள், மற்றைய இருவரும் ரம்புக்கன மற்றும் குளியாபிட்டியை சேர்ந்தவர்கள் என்பது மகிழ்வான விடயம், வெளி மாவட்ட மாணவர்கள் இவ்வாறு சிறந்த பெறுபேறுகளை பெறுவது ஆரோக்கியமான விடயம். இதில் இன்னொரு விடயம் கலை மற்றும் வர்த்தக பிரிவுகளில் அதியுயர் புள்ளிகளை இரு மாணவிகள் பெற்று கொள்ள கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகளில் அதியுயர் புள்ளிகளை இரு மாணவர்கள் பெற்றுள்ளனர்.
------------------------------------------------
முதலாவது பதிவர் சந்திப்பின் பின்னர் போடப்பட்ட முதல் பட பதிவு என்னுடையதுதான் என நினைக்கிறேன். அதில் எனக்கு தமிழிசில் பலவாக்குகளை அள்ளி குவித்த லோஷன் + நயன்தாரா படம் கீழே.
//அதுவும் பதிவர்களை கலாய்க்கும் பதிவுகள் அதிகரிப்பது, பதிவர்களுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.//
நிச்சயமாக.......!
//கலை மற்றும் வர்த்தக பிரிவுகளில் அதியுயர் புள்ளிகளை இரு மாணவிகள் பெற்று கொள்ள கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகளில் அதியுயர் புள்ளிகளை இரு மாணவர்கள்//
வாழ்த்துக்கள்
//படம்//
சொல்லவே இல்லை. இந்த தடவை தமன்னாவை அழைத்து வரலாம் என்று நினைக்கிறோம்!!!:P
நூடுல்ஸ் நன்னா இருந்திச்சு; ஒரு வருசத்துக்கு முன்னர் நான் எப்பிடி இருந்தேன் என்று பார்க்க எனக்கே வியப்பாக இருக்கிறது. அசோக்பரனில் இருந்து மூன்றாவதாய் அந்த பெண்ணுக்கு அருகில்ல் இருப்பது சாட்சாத் நானே தான்.
எப்புடி இருந்த நான் இப்புடி ஆகீட்டேன் :(
பதிவர் சந்திப்பு: :-)))
மகிழ்வுடன் சந்திப்போம்.
அவுஸ்ரேலியா: ஆமாம். :-( எனக்கும் பெருங்கவலை.
இந்தியா: ;-)
அல்லது நியூசிலாந்தின் மோசமான bench strength ஐக் காட்டுகிறது என்றும் சொல்லலாம்.
மோசமாக விளையாடுகிறார்கள்.
கண்டி: ஏன்? தொடர் நடக்கிறது தானே?
மன்மதன் அம்பு: ஆமாம். கமலை நான் அந்த வகையில் மிகவும் இரசிப்பேன்.
வெற்றி: எனக்கு vettri.lk தான் பழக்கம். :P
உ.தரம்: :-)))
வாழ்த்துக்கள்.
படம்: ஆமா ஆமா.... :D
அனைத்தும் அருமை...ரசனை.....
கண்டில மட்டுமா......அம்பாந்தோட்டைல இண்டைக்கு மழையாம்............
அனைத்தும் அருமை...ரசனை.....
கண்டில மட்டுமா......அம்பாந்தோட்டைல இண்டைக்கு மழையாம்............
19 ம் தேதி பதிவர் சந்திப்பா... எந்த ஊரிலே...
மனுஷனுக்குள் எத்தினை திறமைகள்? “காபி வித் அனு” நிகழ்ச்சியில் கமல் சுட சுட எழுதிய வெண்பா ரசிக்கும் படியாக இருந்தது.//
நானும் கண்டு ரசித்த பகுதி ...
பதிவிற்கு நன்றி
சந்திப்பு - சந்திப்போம்..:D
ஆஷஸ் - எனக்கு பெருமகிழ்ச்சி..:D #இங்கிலாந்து_ரசிகன்..:)
இந்திய தொடர் - நியூசிலாந்து பாவம் பலத்த அடி..:(
மன்மதன்===>> - எல்லாப்பாடல்களும் எனக்குப் பிடித்திருந்தது..:D
சந்திப்பு - சந்திக்கிறோம் அதுக்கு முதல் கலந்து கலாய்த்து சிந்திக்கிறோம்
ஆஸ்திரேலியா - :( வேண்டாமே.. :(
கிரிக்கெட்டே வெறுக்கிறது..
இந்தியா கலக்கல்.. கோஹ்லி&யூசுப் பதான் ரசிக்கிறேன்
இலங்கை கிரிக்கெட் - one bump உம் விளையாடலாம் ;)
மன்மதன் அம்பு - கமல் மீது மேலும் ஒரு பெரிய வியப்பு கூடுகிறது.. கமல் கமல் தான் ;)
வெற்றி - ஒரு பெரிய,நல்ல மாற்றத்துக்கு நாம் உள்ளாகிக் கொண்டி ருப்பதால் சில சிக்கல்களை நீங்கள் பொறுத்துக் கொள்ளவேண்டும். விரைவில் மீண்டும் தெளிவாக வருவோம்
ஆனால் அது 'ஒலிபரப்பு' & 101 .5
படம் - அடப் பாவி மீண்டும் நான் தான் உங்க வாய் பீடாவா? படத்தை உடனே அகற்றவும். பிரபுதேவா காண்டாகி மெச்செஜ் அனுப்புறார்
விரைவில் சந்திப்போம்...இம்முறை நூடில்ஸ்..ரொம்ப இனிக்குது.
எனக்கு கிரிக்கட் அறிவு அவ்வளவு இல்லையெனினும்,
இந்தியா தட்டுத்தடுமாறியா தொடரை வென்றது ???
உந்தப் பதிவர் சந்திப்பில என்னைப் பார்த்தா எனக்கே அடையாளம் தெரியாது.. :)
கண்டி அழகான நகரம். 2003-ல் வந்திருக்கிறேன். பின்னவளா யானைகள் காப்பகமும் அருமை.
இந்த உணவு எப்படி லேட்டா வந்தாலும் சுவை குன்றாமல் வரவதன் ரகசியம் என்னவோ...
நடுராத்திரியில் தங்கள் நூடுல்சை சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். இன்று முதல் தங்களை பின்தொடரும் 32 ஆவது ஆசாமி நான்! நான் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கும் இடங்கள் madrasbhavan.blogspot.com & nanbendaa.blogspot.com. நேரம் இருந்தால் எட்டிப்பாருங்கள்..யோகா.
சந்திப்பில் சந்திப்போம்.
ஒரே பதிவில் பல விடயங்களை படக்குப்படக்கெண்டு தந்துள்ளீர்கள். நீங்கள் கூறிய அந்த Coffee with Anu programஐ நானும் பார்த்தேன். வியந்தேன்.
அனைத்தும் அருமை.
தங்கள் தொடர்பதிவு அழைப்பை ஏற்றுத் தொடர்கிறேன் சகோதரா..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
எனைக் கவர்ந்த கமல் படம் 10