கிரிக்கட் பதிவர்கள் ஆடிய கிரிக்கட்

இலங்கை தமிழ் பதிவர்கள் ஆடிய கிரிக்கட் போட்டி இனிதே கடந்த வார இறுதியில் நடந்து முடிந்தது, அது பற்றிய முழு விபரங்களை லோஷனின் பதிவில் வாசித்திருப்பீர்கள், வாசிக்காதவர்கள் இந்த சுட்டியில் வாசிக்கலாம்


*நிரூஜா எனப்படும் மாலவன் எங்களது அணிக்கு தலைவராகவும், அனுதினன் மற்றைய அணிக்கு தலைவராகவும் அறிவிக்கப்பட்டனர். நாணய சுழற்சியில் நாங்கள் தோற்று களத்தடுப்பை தேர்வு செய்தோம் (வென்றிருந்தால் துடுப்பாட்டத்தை தேர்வு செய்திருப்போம் என்பது வேறு விடயம்.)

* எமது ஆரம்ப பந்து வீச்சாளர்களான மருதமூரான் மற்றும் சி.பொ. கோபிநாத்தின் சிறப்பான பந்து வீச்சில் ஆரம்பத்தில் மெதுவாக ஒட்டங்களை பெற்ற அனுதினன் அணியினர், 11 வருடங்களுக்கு பின்னர் துடுப்பெடுத்தாட மைதானத்திற்குள் நுழைந்த ஜனாவின் அதிரடியோடு வேகமாக ஒட்டங்களை பெற்றனர், லோஷன் 4 விக்கட்டுகளை வீழ்த்தி அவ்வணியினரின் ஓட்டங்களை 93ஆக கட்டு படுத்த உதவினார். தொடர்ந்து ஆடிய எமது அணியினர் ஆரம்பத்தில் சிறப்பான அடித்தளத்தை இட்டாலும் தொடர்ந்து விக்கட்டுகள் சரிய நானும், சி.பொ. கோபிநாத்தும் சிறந்த ஒரு இணைப்பாட்டத்தை வழங்கினோம், எனினும் நான் தேவையற்ற விதமாக தலைக்கு மேல் சென்ற பந்தை பைன்லெக் பக்கமாக திருப்ப முயற்சிக்க அது Top Edge ஆக மாறி வரோவினால் பிடியெடுக்கப்பட்டதும், கோபிநாத் முக்கியமான தருணத்தில் ரன்அவுட் ஆனதாலும் போட்டியை நாம் 6 ஓட்டங்களால் தோற்க நேரிட்டது. தலைவர் அனுதினன் 4 விக்கட்டுகளை எடுத்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார். திருமலைக்குஞ்சு பவனும் சிறப்பாக பந்து வீசினார்.

*முதலாம் போட்டியில் தோற்றதால் எப்படியும் வென்றுவிட வேண்டும் என்னும் உத்வேகத்தோடு நாம் இரண்டாவது ஆட்டத்தில் மைதானத்தில் இறங்கினோம். முன்னைய போட்டியோடு ஒப்பிடுகையில் இம்முறை சிறப்பாக பந்து வீசினோம், ஆனால் களத்தடுப்பில் பல பிடிகளை விட்டு எமது உலக தரத்தை வெளிக்காட்டினோம். கடந்த போட்டியில் 4 விக்கட்டுகளை எடுத்த லோஷன் இம்முறை 5விக்கட்டுகளை எடுத்தார். இதன் காரணமாக அனுதினன் அணியினர் 79 ஒட்டங்களுக்கு கட்டுபடுத்தினோம். (அவ்வணியின் முக்கிய ஆட்டக்காரர் ஜனாவின் பிடியை பல கிலோமீற்றர் ஒடி சென்று பிடித்த யோகாவின் அதி சிறந்த பிடியும் ஓட்ட எண்ணிக்கையை மட்டுபடுத்த ஒரு முக்கிய காரணம் என கிரிக்இன்போவில் ரிச்சி பேனோ சொல்லியிருக்கிறார்), மேலும் பால்குடி மற்றும் வதீஸ் ஆகியோரின் 2 சிறப்பான பிடிகளும் எங்களுக்கு விக்கட்டுகளை பெற்று தந்தன. இம்முறை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தரமுயர்த்தப்பட்ட கோபிநாத் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டம் ஆடி எமது அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். ஆட்டமிழக்காமல் அரைச்சதம் பெற்ற கோபிநாத்தோடு லோஷனும் போட்டியின் முடிவுவரை களத்தில் இருந்தனர். 

டிஸ்கி
* போட்டோ போட்டு எல்லாரையும் கலாய்க்கும் பவன் மைதானத்தில் அமைதியின் சிகரமாய் இருந்தார்.

* தரங்கம் புகழ் சுபாங்கன் அடித்த பந்து சிக்சருக்கு சென்றுவிட்டது என மகிழ்ந்திருந்தால் அப்பந்தை மது பிடியெடுத்து சிக்சரை விக்கட்டாக மாற்றினார். 

* அனலிஸ்ட் கோபி அனுதினனின் ஷார்ட் பிட்ச் பந்துக்கு ரொக்கட் விட்டார்.

* பிரபல வேக பந்து வீச்சாளர் யோகா (நான்தான்) வீசிய அதிகமான பந்துக்கள் புல்பிட்சாகவே சென்றது.

* கூல் போய் பந்து தடுக்கும் இடங்களுக்கு பந்து செல்லவேயில்லை, காரணம் ஏதேனும் ஸ்பொட் பிக்சிங்கா?

* மருதமூரானின் பந்து வீச்சு பாணி மிக அழகாக இருந்தது, போட்டியை பார்க்க வந்திருந்த ரசிகைகள் அனைவரும் அவரையே வைத்த கண் பார்க்காமல்  பார்த்து ரசித்தனர். (வந்திருந்தால்)

* போட்டிக்காக இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து பல பதிவர்கள் வந்திருந்தது போட்டியின் ஏற்பாட்டாளர்களுக்கு அதிக உந்து சக்தியை வழங்கியது என்றால் அது மிகையாகாது. எதிர்காலத்தில் இவ்வாறான ஏற்பாடுகளை முன்னெடுக்க இவர்கள் முயல்வார்கள் என நினைக்கிறேன்

* கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததை போல், நானும் அனலிஸ்ட் கன்கொன்னின் உதவியுடன் மைதானத்தை கண்டறிந்தேன். அதற்கு முதல் நாள் இரவு பெய்த மழையால் விளையாட முடியாமல் போய்விடுமோ என கவலைப்பட்டே கன்கொன் விடிய விடிய தூங்கமலிருந்ததாக பதிவுலீக்ஸ் தகவல்கள் தெரிவித்திருந்தன.

* நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராக வந்த “மதுயிசம்” புகழ் மதுவுக்கு மின்சார இணைப்பை மைதானத்திற்கு கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகியிருக்கும். ஆனாலும் தடைகற்களை எல்லாம் படிக்கல்லாக மாற்றிய மது போட்டியை செவ்வனே நேரடியாக ஒளிபரப்பினார். (இப்போட்டி நேரடியாக ஒளிபரப்பானதால் ஸ்டார் கிரிக்கட் சமகாலத்தில் ஒளிபரப்பிய ஆஷஸ் போட்டியை பலர் பார்க்காமல் விட்டு அவ் அலைவரிசைக்கு பாரிய நட்டம் ஏற்பட்டது வேறு விடயம்). இங்கிலாந்திலிருந்து எமது ஆட்டத்தை ரசித்த பதிவர் வந்தி அடிக்கடி எம்மோடு அரட்டையிலும் ஈடுபட்டார்.


நான் துடுப்பெடுத்தாடும் ஒரு காட்சி.

இரண்டாவது போட்டியில் வென்ற எமது அணியினர் மகிழ்ச்சியுடன்

முதலாவது போட்டியில் வெற்றி பெற்ற அணியினருடன் சேது ஐயா அவர்கள் உரையாடுகிறார். எமது அணியை சேர்ந்த லோஷனும் உரையாடலில் பங்கெடுக்கிறார்

27 Responses
  1. பொறுங்க வாறன்...


  2. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.


  3. நான் short pitch பந்திற்கு அட்டமிழந்ததாகச் சொல்லி ஏதோ எனக்கு bouncer weakness இருப்பது போலுள்ளது.
    நான் ஆட்டமிழந்தது long hop இற்கு long hop இற்கு long hop இற்கு.... :D

    மகிழ்வாக நாள் கழிந்தது...


  4. Bavan Says:

    மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. பதிவர் சந்திப்பில் நீங்கள் கலந்துகொள்ளாதது வருத்தமளிக்கிறது


  5. தங்கள் பார்வையும் அருமை சகோதரம்.. முக்கியம் நடுநிலமையான பதிவு என்னை இன்னும் கவர்ந்திருக்கிறது...

    ஆனால் ஒரு விசயத்தை கடுமையாகக் கண்டிக்கிறேன்... வந்திமாமாவுடன் நானும் கலந்துரையாடலில் இருந்தது தங்களுக்குத் தெரியாதா..?? ஹ..ஹ..ஹ..


  6. சந்திப்ர்க்கு வராமல் இந்தபதிவுதான் எழுத சென்றீங்களோ???


  7. Subankan Says:

    மகிழ்வான தருணங்களை அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள் :)


  8. நல்ல பதிவு.......
    அனலிஸ்ட் தங்களை தேடுறாராம்...நீங்க முந்தியதால......


    கூல் போய் விடயம்:- மஜீத் ஒரு மூலையில இருந்து மட்ஜ் பார்த்தாரே...கவனிக்கலயா நீங்க....


  9. Vijayakanth Says:

    mudal pottiyil loshan annawum kangonum overa analuse panna poi thaan neenga thoththu poneenga :P


  10. மகிழ்வான தருணங்களை அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள் :)


  11. எங்க ஊர் பதிவர் சந்திப்பிலும் இதை செயல்படுத்த வேண்டுமென்று ஆர்வம் ஏற்படும் வகையில் எழுதியிருக்கிறீர்கள்...


  12. anuthinan Says:

    மகிழ்வான தருணங்களை அழகாக மீட்டு பதிவாக தந்த யோ அண்ணாவுக்கு நன்றிகள்


  13. Jana Says:

    தங்கள் துடுப்பாட்டம், களத்தடுப்பு போல பதிவும் அருமை யோ. நம்மை ரீ பிரஸ் செய்துகொள்ள இந்தப்போட்டி பெரிதும் உதவியது. 13 வருடங்களின் பின்னால் எனக்கு கிடைத்த இனியதொரு அனுபவம். தங்களை சந்தித்ததும் அதைவிட இனிமையே. சந்திப்பில் தாங்கள் வரமுடியாது போனமை சிறு வருத்தமே யோ.. நேரம் கிடைத்தால் யாழ்ப்பாணம் வந்துபோங்கள். மாலைபோட்டு வரவேற்க மதி.சுதா ரெடி.


  14. @ ம.தி.சுதா

    சுடு சோறு புகழ் மதி.சுதா பதிவுக்கு வருகை தந்ததற்கு நன்றிகளையும் போட்டிக்கு வராமைக்கு கண்டனங்களையும் தெரிவித்து கொள்கிறேன்


  15. //// கன்கொன் || Kangon said...
    நான் short pitch பந்திற்கு அட்டமிழந்ததாகச் சொல்லி ஏதோ எனக்கு bouncer weakness இருப்பது போலுள்ளது.
    நான் ஆட்டமிழந்தது long hop இற்கு long hop இற்கு long hop இற்கு.... :D/////
    சரி ஏதோ ஒன்று, ஆனால் நீங்கள் ரொக்கட் விட்டது எல்லாருக்கும் தெரியும்

    மகிழ்வாக நாள் கழிந்தது.

    ஆமாம் சகோ



  16. /// Bavan said...
    மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. பதிவர் சந்திப்பில் நீங்கள் கலந்துகொள்ளாதது வருத்தமளிக்கிறது////
    ஆமாம் எனக்கும் அது மறக்கவியலாத நாள், இன்னொரு முறை சந்திப்போம்


  17. @ ம.தி.சுதா

    தாங்கள் அரட்டையிலிருந்ததை நான் கவனிக்க மறந்துவிட்டேன், மன்னிக்கவும்


  18. /// கார்த்தி said...
    சந்திப்ர்க்கு வராமல் இந்தபதிவுதான் எழுத சென்றீங்களோ??////

    இல்லை இல்லை, வேறு ஒரு கடிதம் எழுதினேன்


  19. ///Subankan said...
    மகிழ்வான தருணங்களை அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள்///

    நன்றி சுபாங்கன், உங்களை எல்லாம் சந்தித்தது மகிழ்ச்சி


  20. ///ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...
    நல்ல பதிவு.......
    அனலிஸ்ட் தங்களை தேடுறாராம்...நீங்க முந்தியதால......////
    அப்படியா, சொல்லவேயில்ல

    /////கூல் போய் விடயம்:- மஜீத் ஒரு மூலையில இருந்து மட்ஜ் பார்த்தாரே...கவனிக்கலயா நீங்க..../////
    நான் கவனிக்கலையே, இதுதானா சங்கதி????


  21. ///// Vijayakanth said...
    mudal pottiyil loshan annawum kangonum overa analuse panna poi thaan neenga thoththu poneenga :P////

    இல்லை இல்லை விட்டு கொடுத்தோம்


  22. ////மருதமூரான். said...
    மகிழ்வான தருணங்களை அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள் :)////

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மருதமூரான், உங்களையெல்லாம் சந்தித்தது அதைவிம அதிக மகிழ்ச்சி


  23. //// philosophy prabhakaran said...
    எங்க ஊர் பதிவர் சந்திப்பிலும் இதை செயல்படுத்த வேண்டுமென்று ஆர்வம் ஏற்படும் வகையில் எழுதியிருக்கிறீர்கள்.////

    நன்றி பிலாசபி பிரபாகரன், செய்து பாருங்கள் உங்களுக்கிடையிலான அன்னியோனியம் அதிகரிக்கும்


  24. //// Anuthinan S said...
    மகிழ்வான தருணங்களை அழகாக மீட்டு பதிவாக தந்த யோ அண்ணாவுக்கு நன்றிகள்////

    வருகைக்கு நன்றி அனு, உங்களையெல்லாம் சந்தித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தந்தது


  25. ///// Jana said...
    தங்கள் துடுப்பாட்டம், களத்தடுப்பு போல பதிவும் அருமை யோ. நம்மை ரீ பிரஸ் செய்துகொள்ள இந்தப்போட்டி பெரிதும் உதவியது.////
    உண்மைதான் ஜனா

    //// 13 வருடங்களின் பின்னால் எனக்கு கிடைத்த இனியதொரு அனுபவம். தங்களை சந்தித்ததும் அதைவிட இனிமையே.////

    எனக்கும் அவ்வாறே

    //// சந்திப்பில் தாங்கள் வரமுடியாது போனமை சிறு வருத்தமே யோ..
    /////
    எனக்கு அது பெரும் வருத்தம்

    ////நேரம் கிடைத்தால் யாழ்ப்பாணம் வந்துபோங்கள். மாலைபோட்டு வரவேற்க மதி.சுதா ரெடி////
    அவ்வ்வ்


  26. வாழ்த்துக்கள் நான் தவற விட்டுவிட்டேன் என நினைக்கையில் கவலை தான்


Facebook Badge