வடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது
உலகையே உன் பார்வையால் பார்த்தேன்
நீ காதலித்தவற்றை காதலித்தேன்
நீ வெறுத்தவற்றை வெறுத்தேன்
உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே நோக்கினேன்.
உன்னை பற்றி மணிகணக்காக பேசினேன்
கவிதை, காதல் தொடக்கம் 
காமம் வரை உன்னிடம் அறிந்தேன்
இன்றும் அதேயளவு உன்னை காதலிக்காவிடினும்
என் மனதில் ஒரு மூலையில் ஒரு நிரந்தர நாற்காலி
போட்டு அமர்ந்திருக்கிறாய்
ஆனால் உன்னை முன்னரை போல் வியக்கவியலவில்லை
காரணம் அது அறியா பருவம்
இன்று நீ பிடிக்கும் பல காக்காக்கள்
எமக்கிடையிலான தூரத்தை அதிகரிக்கின்றன.
ஆனாலும் என்னை 
அமானுஷ்ய உலகத்தில்
நடக்க வைத்தவனே
தமிழை காதலிக் வைத்தவனே
வடுகபட்டிகாரனே !

உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
இன்னும் பல காலம் வாழும்
வாழ போகும்
உன் தமிழ் போலவே 
நீயும் பல்லாண்டு வாழ
நீ நம்பாத நான் நம்பும் 
இறைவணை வேண்டுகிறேன்

Facebook Badge