ரிக்கி பொண்டிங் - சுய அறிக்கை Ver 2.0


முழுப் பெயர் - ரிக்கி தோமஸ் பொன்டிங்

செல்லப்பெயர் - Punter (அத சொல்ல மாட்டேன்)

ரொம்ப சந்தோஷபட்டது - தலைவனாக 2 உலக கோப்பை பெற்றது(அது ஒரு கனா காலம்)

பிடித்த பாடல் (முன்பு) - ராஜாவுககு ராஜா நான்தான்... (ம்ம் எப்படியிருந்த நான்?இப்ப என்னடானா, ஒன்னா விளையாண்ட ஷேன் வோன் கூட கலாய்க்கிறான்)


பிடித்த பாடல் (தற்போது) - நானொரு ராசியில்லா ராஜா... (அவ்வ் அழுதிடுவேன்)

முணுமுணுப்பது - இளைய தளபதி ரேஞ்சுக்கு நம்மள கலாய்க்கிறாங்களே! (ர் ர் ர் ர் நற நற)

எதிரி (வெளிப்படையாக) - லட்சுமன், சச்சின் (வயசாக வயசாக திறமை கூடுதே)

எதிரி (மனதில்) -இப்போதைக்கு ஹுரிட்ஸ் (அவன் பாவம் என்னா செய்வான், பந்து சுழலாததற்கு)

நண்பன் - யாருமே இல்லை,  (எல்லாம் கட்டதொர மாதிரியே இல்ல பார்க்கிறானுங்க)

எரிச்சல் - தரப்படுத்தலில் கீழிறங்கியது (மழை கூட வர மாட்டேங்குது)

நீண்ட நாள் சாதனை - தொடர் வெற்றிகள் பெற்றது (அது.. அப்ப)

தற்போதைய சாதனை - பெங்களுர் போட்டியின் 2ம் இனிங்சில் அருமையான ஆட்டம் (ஒரு நாதாரியும் சப்போர்ட் பண்ணல, இல்லாட்டி வென்றிருக்கலாம்)

கடுப்பு - வோன், ஹேடன், மெக்ரா, கில்லி, மாடின் நான் தலைவனாயிருக்கப்ப விலகியது (வௌங்க மாட்டாங்க)

பொறாமை -  சச்சினின் சதங்கள் (கிட்ட வர வர தூர போயிடுறான்)

வேதனை - பதவி விலக சொல்லுவது (அழுதுடுவேன்)  ஒரு சீரியஸ் பதிவு போட்டதால மொக்கை பதிவுகளை மீணடும் போடுமாறு வேண்டி ஒபாமா, ஆர்னோல்ட் ஸ்வாஸ்நேர்,  பில் கிளிங்டன், பங்கி மூன் போன்றோர் கேட்டு கொண்டதால் நம்ம ரிக்கி பொண்டிங் பற்றிய மொக்கை பதிவு 

பி.கு- ரிக்கி பொன்டிங் இதை வாசித்து விட்டு இனி மேல் தேவையில்லை என நட்பை துண்டித்து கொண்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.


பி.பி.கு - இது சென்ற வருடம் ஏற்கனவே நான் எழுதிய பதிவு, இப்போதை எழுத எதுவும் வராதபடியால் மீண்டும் கொஞ்சம் மாற்றங்களுடன் பதிவிடுகிறேன்,


பி.பி.பி.கு- நான் ஒரு ரிக்கி பொண்டிங் ரசிகன், அவரது தற்போதைய நிலை கவலையளிக்கிறது.பி.கு- ரிக்கி பொன்டிங் இதை வாசித்து விட்டு இனி மேல் என் நட்பு தேவையில்லை என எனது நட்பை துண்டித்து கொண்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். 
6 Responses
 1. பொன்ரிங் நட்பைத் துண்டித்ததால் மிக்க கவலையோ?

  // பி.கு- ரிக்கி பொன்டிங் இதை வாசித்து விட்டு இனி மேல் என் நட்பு தேவையில்லை என எனது நட்பை துண்டித்து கொண்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். //

  இரண்டுமுறை சொல்லியிருக்கிறீர்கள்... ;-) 2. ARV Loshan Says:

  கலக்கல்..
  கவலையிலும் சிரித்தேன்..

  நானும் உங்களைப்போல பொன்டிங் ரசிகனே..
  அதனால் தான் பொன்டிங் சறுக்கையில் இன்னும்கோபம் வருகிறது.

  பல இடங்களில் வாய் விட்டு சிரித்தேன்.

  //பி.கு- ரிக்கி பொன்டிங் இதை வாசித்து விட்டு இனி மேல் தேவையில்லை என நட்பை துண்டித்து கொண்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
  //

  ம்ம்.. எனக்கும் கோல் பண்ணி கண்ட கண்ட கெட்ட வார்த்தையால் உங்களைத் திட்டினார். ;)
  நல்ல காலம் நீளம் என்ற காரணத்தால் என் பதிவு வாசிக்கலையாம் ;)

  //ஒரு சீரியஸ் பதிவு போட்டதால மொக்கை பதிவுகளை மீணடும் போடுமாறு வேண்டி ஒபாமா, ஆர்னோல்ட் ஸ்வாஸ்நேர், பில் கிளிங்டன், பங்கி மூன் போன்றோர் கேட்டு கொண்டதால்//

  என்ன யோ.. முக்கியமான VIP இருவர் உங்கள் ரசிகர்கள் இல்லையா?
  கலைஞர்,ராஜாதி ராஜா ?? ;)


 3. Bavan Says:

  ஆங்.. சச்சினின் ரன்னைத்துரத்திப்பிடிப்பார் என்று முந்தி அவர நம்பி சவால் எல்லாம் விட்டிருக்கேன்.. இனி அதெல்லாம் நடக்கிற காரியமா?..:(

  பதிவு கலக்கல்ஸ் ரசித்தேன், சிரித்தேன்...:D


 4. super ஆனால் பாண்டிங்கிடம் முன்ன இருந்த ஆக்ரோஷம் இப்ப இல்ல!!


 5. பாவமுங்க அந்த மனுசன் எப்படி இருந்தவர் இப்படியாகி விட்டாரே...


Facebook Badge