நூடுல்ஸ் - 20-10-2010

இன்றைய திகதியை பிரிகையை அகற்றிவிட்டு எழுதினால் 20102010 என வருகிறது, இது ஒரு 3ம் அடுக்கு இலக்கமொன்றை போல இருக்கிறது, தனிப்பட்ட ரீதியாக இலக்கங்களை காதலிக்கும் எனக்கு இது விசேட நாளாக படுகிறது, காரணம் இவ்வருட ஆரம்பத்தில் எங்களது பொது முகாமையாளர் இவ்வருடத்தை “விஸ்சய் தாய (இருபது பத்து)” வருடமென்றே எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அந்த இருபது பத்து இரண்டுமுறை வரும் தினம் இன்று என்பதால் இலக்கங்களை காதலிப்பதுடன், இன்றைய நாளையும் காதலிக்கிறேன்.

----------------------------------------------------
இந்திய அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சொதப்பிய கிளார்க் அழகான சதமொன்றை பெற்று அசத்திவிட்டார், கமரூன் வைட் அடித்து ஆடி மீண்டும் தன்னை நிரூபித்துடன், அடுத்த தலைமை பதவிக்கு துண்டு போட்டு உட்கார்ந்திருப்பதையும் காட்டி விட்டார், இவ் இளைய இந்திய அணி சற்று குறைந்த பலத்துடன் இறங்கினாலும் அவுஸ்திரேலியாவுக்கு பலத்த சவாலை கொடுக்கும் என நம்பலாம்.

என்னதான் தோற்றாலும் “அவுஸ்திரேலியாவா கொக்கா?” இத்தொடரில் தனது பலத்தை அவர்கள் நிரூபிப்பார்கள்.

பதிவு எழுதி முடிப்பதற்கிடையில் மீண்டும் அவுஸ்திரேலியா என்னை ஏமாற்றிவிட்டார்கள்.

 இலங்கை கிரிக்கட் அணி ஒரு காலத்தில் தன்னை நிரூபிக்க நியுசிலாந்தை அடித்து துவைத்தது பலருக்கு நினைவிருக்கும், ஹசான் திலகரட்ன, முரளி, வாஸ், தர்மசேன, நிரேஷன் பண்டாரதிலக்க என பலரும் தன்னை உலகுக்கு வெளிக்காட்டியது நியுசிலாந்துடன்தான் ஆகும். அதே போல் இப்போது பங்களாதேஷின் முறை தன்னை நியுசிலாந்துடன் நிரூபித்து விட்டது, இனி உலக கிண்ண போட்டியில் அசத்துவார்களா? என பொறுத்திருந்து பார்ப்போம்.


----------------------------------------------------
இப்போதெல்லாம் மூஞ்சி புத்தகத்தை பார்க்காமல் பொழுது போவதேயில்லை, உணர்வுகளை வெளிக்காட்ட டிவிட்டரை விட மூஞ்சி புத்தகம் சிறந்த ஆயுதமென நினைக்கிறேன். சென்ற வாரம் பார்த்த ஸ்டேஸ்களில் எனக்கு பிடித்தது. ரிஷாட் கூல் என்னும் நண்பர் போட்ட ஸ்டேஸ் இது

“காயப்படுத்தி, காணமல் போகும் காதலை விட, 
காறி துப்பினாலும் ட்ரீட் கேட்கும் நட்பே சிறந்தது, 
நண்பேன்டா”
----------------------------------------------------
இந்த வாரம் வந்து குறுஞ்செய்திகளில் எனக்கு பிடித்தது
“காதல் என்பது ஆயா சுட்ட வடை போன்றது, 
யார் வேண்டுமானாலும் தூக்கிட்டு போய்டலாம்,
ஆனால் நட்பு என்பது ஆயா மாதிரி
யாராலும் தூக்க முடியாது”
----------------------------------------------------
எனக்கு மின்னஞ்சலில் வந்த கதை யொன்று

மருத்துவ பீட முதலாமாண்டு மாணவர்களுக்கு பரிசோதனை கூடத்தில் விளக்கமளித்த பேராசிரியர், ஒரு செத்த நாயை கொண்டு வந்து அதை பற்றி படிப்பித்தார், அங்கு அவர் மருத்துவர்களுக்கு இருக்க வேண்டிய இரு முக்கிய குணங்களை பற்றி சொன்னார் அதில் முதலாவது முக்கிய குணம் “இறந்த உடலை பார்த்து முகம் சுளிக்க கூடாது” என்று நாயின் வாயினுல் விரலை வைத்து பின்னர் விரலை தனது வாயிற்குள் செலுத்தி காமித்த பேராசிரியர் தனது மாணவர்களையும் அவ்வாறே செய்ய சொன்னார்.

சிறிது நேரம் யோசித்த மாணவர்கள் பின்னர் நாயின் வாயிற்குள் விரலை வைத்து பின்னர் அவ்விரலை தனது வாயில் வைத்து காட்டினர், கடைசி மாணவனும் செய்து காட்டிய பின்னர் பேராசியர் இரண்டாவது முக்கிய குணத்தை பற்றி கூறினார், “இரண்டாவது முக்கிய குணம் கூர்ந்து அவதானித்தல், நான் எனது நடுவிரலை நாயின் வாயிற்குள் செலுத்தினேன், ஆனால் நான் எனது வாயில் வைத்தது ஆள்காட்டிவிரலையாகும்” என்றார்

நீதி - வாழ்க்கை கடினமானதுதான், ஆனால் நாம் எதையும் கூர்ந்து அவதானிக்காமல் செயல்படுதல் ,அதை அதிகம் கடினப்படுத்துகிறது.

----------------------------------------------------
இவ்வாரம் எனது இரு தோழிகள் பிறந்த நாளை கொண்டாடுகின்றனர், சனிக்கிழமை பிறந்த நாளை கொண்டாடும் லோஜிக்கும், ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாளை கொண்டாடும் மீராவுக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
----------------------------------------------------
ரகுமானின் தீவிர ரசிகனான நான் இளையராஜாவின் பாடல்களையும் விரும்பி கேட்பேன், நான் அடிக்கடி கேட்கும் இளையராஜா இசையமைத்த பாடல்களில் ஒன்று, இப்பாடலை கேட்கும் போது நமக்கும் சங்கீத ஞானம் வருவதை போன்ற உணர்வு ஏற்படுகிறது. எனக்கு பிடித்த அந்த பாடல் “சங்கீத ஞாதி முல்லை”

 

6 Responses
  1. கிரிக்கேட் பற்றிச் சரியான கருத்தரைத்துரைத்தீர்கள், கதை பாட்டு எல்லாம் அருமையாக உள்ளது மொத்தத்தில் நூடுல்ஸ் என் பக்கத்து வீட்டு லேடிஸ் ஆன மாதிரி இருக்கு...


  2. /* “காயப்படுத்தி, காணமல் போகும் காதலை விட,
    காறி துப்பினாலும் ட்ரீட் கேட்கும் நட்பே சிறந்தது,
    நண்பேன்டா” */

    அருமையான தத்துவம்... நானும் நாலு பேருக்கு பரப்பிவிட்டேன்...


  3. கிரிக்கெட் தகவல் சூப்பர்! மொத்தத்தில் தொகுப்பு அருமை!


  4. திகதி - :-)))

    கிறிக்கற் - அவ்வ்வ்வ்வ்.....

    பேஸ்புக் - :-))
    காதலி கோவிக்கப்போறா... கவனம். :-)

    கதை - அது சிறுநீர் அடங்கிய குவளைக்குள் விரலை விட்டு செய்வது என்று இருக்கிறது.
    அதன் மாற்றப்பட்ட வடிவம். :-)

    பிறந்தநாட்கள் - இருவருக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
    பார்ட்டி தரவும்.


    பாடல் - கேட்கிறேன். :-)


  5. Bavan Says:

    திகதி - மீ டு லவ் திஸ் திகதி..:D

    கிறிக்கற் - கோலி கலக்கிவிட்டார்..;)

    பேஸ்புக் - முதலாவது Airtel free smsசில் நானும் பலருக்கு அனுப்பினேன்..:D

    கதை - wow..:)

    பிறந்தநாட்கள் - இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..:D

    பாடல் - எனக்கும் ரொம்பப்பிடித்த பாடல்..:D


  6. Rajasurian Says:

    வெட்டோரி பாவம் :(

    மின்னஞ்சல் கதையை ரசித்தேன் :)


Facebook Badge