சாதனை வீரர் முரளி - ஒரு படமும் படம் சார்ந்த பதிவும்

ஒரு வேக பந்து வீச்சாளரை போன்ற முக பாவம், கண்களாலே துடுப்பாட்டவீரரை கலவரப்படுத்துவதால்தான் இவரை சிரிக்கும் வில்லன் என்று அழைக்கிறார்களோ?
கிட்டதட்ட 20 வருடமாக விளையாண்டாலும் இன்னமும் சின்ன பிள்ளை போல் துள்ளி குதிக்கும் சிறுவனாய் முரமாயக்காரன் முரளியின் அப்பீல்இந்த அடியை யாராலும் கொப்பி பண்ண முடியாது, முரளி துடுப்பெடுத்தாடுவதை பார்க்க என்னை போல் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.எல்லாரையும் கிளீன் போல்டாக்கிய முரளியை கிளீன் போல்டாக்கிய மதிமலர் “வளரும் பயிர் முளையிலே தெரியும்”, சிறந்த பாடசாலை கிரிக்கட் வீரராக பரிசு பெறும் முரளி
இலங்கையில் சீனியர் முதல் ஜுனியர் வரை அனைத்து தரப்பினரையும் நண்பராக கொண்ட முரளிமுரளியின் இறுதி டெஸ்டன்று காலி கோட்டையை அலங்கரிக்கும் முரளியின் பதாகையை காவல் காக்கும் படை வீரர்


தனது பந்தில் தானே பிடியெடுக்கும் முரளிகிரிக்கட்டில் எதிரணி வீரர்களுடன் நட்பாயிருப்பதில் உலகில் முதலிடம் முரளிக்குத்தான்
எத்தனை எத்தனை சோதனைகள், அத்தனையையும் சாதனைகளாக மாற்றிய முரளி தன்னை எறிபவர் அல்ல என நிரூபிக்கும் போது
முரளியின் வாழ்வில் முக்கிய இடம் வகிக்கும் அர்ஜுன முரளிக்காக வாதாடுகிறார்
சாதனை வீரனை சகாக்கள் வரவேற்கிறார்கள்முரளியின் வாழ்வில் மறக்க முடியாத பொக்சிங் டே டெஸ்ட் போட்டி, பொறாமைக்கார டெரல் ஹெயாரினால் தண்டிக்கப்படும் போது.


உலகின் மிக சிறந்த ஆப்ஸ்பின் பந்து வீச்சாளர் உலகின் மிக சிறந்த லெக்ஸ்பின் பந்து வீச்சாளருடன்பந்து சிக்சருக்கு போய் விட்டது, துடுப்பெடுத்தாடிய முரளியோ கீழே90களின் நடுப்பகுதயில் நம்மவர் முரளி


ஓய்வை அறிவிக்கும் கவலையில் முரளி


இனிமேல் இனிய இல்லற வாழ்வுக்கு முதலிடம் கொடுக்கவிருக்கும் முரளி தம்பதியினர் மகிழ்ச்சியாய்

எரிந்து சாம்பலாகினாலும் எழுந்து வரும் ஃபீனிக்ஸ் பறவை போல் சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றிய முரளியின் வாழ்க்கை சிறப்புற வாழ்த்துகிறேன்
10 Responses
 1. //இந்த அடியை யாராலும் கொப்பி பண்ண முடியாது, முரளி துடுப்பெடுத்தாடுவதை பார்க்க என்னை போல் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது//

  நானும் நானும்

  முரளிக்கு வாழ்த்துக்கள்

  நல்ல ஊர் பதிவு அண்ணா


 2. Subankan Says:

  பகிர்வுக்கு நன்றி. இதில் சில படங்களை நான் எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றிருக்கிறேன் :) 3. Bavan Says:

  yup.. im also a big fan of murali's batting..:-)

  we miss u mr.spin.. we miss u...:-(


 4. Unknown Says:

  ////எரிந்து சாம்பலாகினாலும் எழுந்து வரும் ஃபீனிக்ஸ் பறவை போல் சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றிய முரளியின் வாழ்க்கை சிறப்புற வாழ்த்துகிறேன்////

  என்னுடைய வாழ்த்துக்களும் முரளி என்கிற சாதனைக்காரனுக்கு.


 5. படங்களும் கொமெண்டும் கலக்கல்.


 6. anuthinan Says:

  படங்கள் தெரிவு சிறப்பு!!!

  //இந்த அடியை யாராலும் கொப்பி பண்ண முடியாது, முரளி துடுப்பெடுத்தாடுவதை பார்க்க என்னை போல் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது...//

  எப்போதுமே இருக்கும்!!!!


 7. அருமையான படத் தெரிவுகள்
  நன்றி


 8. Jana Says:

  Simple and Sweet Post.


 9. Anonymous Says:

  ஆயிரம் கவலைகளுக்கு மத்தியிலும் இன்று என் பெரிய கவலை உங்கள் ஓய்வு அறிவிப்பு. இனி வரும் காலம் கிரிக்கட் பார்க்கும் மன நிலை ஏற்படுமா? முரளியில்லாமல்....!

  யாழ்


Facebook Badge