நூடுல்ஸ் (25-06-2010) பீபா உலக கிண்ண ஸ்பெஷல்


ஹாய் மக்கள்ஸ் உலக கிண்ணம் பார்க்கிறீர்களா?

---------------------------------------------------------------

கால்பந்து காய்ச்சல் உலக மக்களிடையே அதிகரித்து காணப்படும் காலப்பகுதியில் ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகளை ஏன் வைத்தார்களோ தெரியவில்லை, ஆசிய கிண்ண போட்டிகள் நடந்ததும் தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை, இவ்வளவுக்கும் ஆசிய கிண்ண போட்டிகள் நடந்த மைதானம் கண்டியிலிருக்கும் எங்களுக்கு மிகவும் அருகிலுள்ள தம்புள்ளை மைதானத்திலாகும், வேறு காலத்தில் என்றால் போட்டிகளை பார்க்க சென்றிருக்கலாம். கால்பந்து உலக கிண்ண போட்டிகளை பார்க்க வேண்டியிருப்பதால் போக முடியவில்லை.

இன்றைய தினம் முதலாம் சுற்றின் மிக சிறந்த போட்டி நடந்து கொண்டிருக்கிறது. பிரேசில் மற்றும் போர்த்துக்கல் அணிகள் போட்டியிடுகின்றன. முதல் 40 நிமிடத்தில் இரு அணியும் கோல் கணக்கை தொடங்கவில்லை, இரு அணிகளும் சரிக்கு சமனாக விளையாடுகின்றன. கடந்த போட்டியில் சிகப்பு அட்டை வழங்கப்பட்டதால் காகா விளையாடாவிடினும் பிரேசில் அணியினர் சிறப்பாகவே விளையாடுகின்றனர்.

எதிர்பார்ப்பு மிகுந்த அணிகளாக தென்னாபிரிக்கா வந்திறங்கிய உலக சம்பியன் இத்தாலி மற்றும் பிரான்ஸ் அணிகள் இம்முறை முதலாம் சுற்றோடு வெளியேறிவிட்டன. அதிகம் எதிர்பார்க்கப்படாத அமெரிக்கா, ஜப்பான் போன்ற அணிகள் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ள நிலையில் உலக கிண்ணம் யாருக்கு கிடைக்கும் என எதிர்வுகூற இயலாத நிலையிலுள்ளது.

வடகொரிய அணியை துவைத்து எடுத்த போர்த்துக்கல் அரையிறுதி வரை வரலாம், கிறிஸ்டியானோ ரொனால்டோ சிறப்பான போர்மில் இருப்பது போர்த்துக்கல் அணிக்கு பலம். பிரேசில் சிறப்பான அணியாக இருந்தாலும் இறுதி போட்டி வரை வர இன்னும் கொஞ்சம் அதிகமாக திறமை காட்ட வேண்டும்.

இதுவரை விளையாண்ட அணிகளிளே அதிகம் திறமை காட்டிய அணியாக நான் நினைப்பது ஆர்ஜன்டினா அணியையே ஆகும், லயனல் மெஸ்ஸி என்னும் அற்புதமான வீரரை கொண்ட இவர்களது அணிக்கு மேலும் பலம், கடந்த போட்டியில் ஹெட்ரிக் அடித்த கொன்சாலோ ஹிக்குயன் இருப்பது அணிக்கு பலம் சேர்ப்பதாகவே இருக்கிறது.

இங்கிலாந்து அரையிறுதி வரை வரவேண்டுமாயின் வேன் ரூனி இன்னும் சிறப்பாக விளையாடவேண்டும். ஜேர்மன், நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் அணிகளும் சிறப்பாக விளையாண்டால் அரையிறுதி வரை வரலாம்.

இப்போதைக்கு இரண்டாம் சுற்றுக்கு தெரிவான அணிகளிலே அதிகம் பலம் வாய்ந்த அணியாக நான் கருதுவது ஆர்ஜன்டீனா அணியைதான்.

---------------------------------------------------------------


இப்பதிவை எழுதி கொண்டிருக்கும் நேரத்தில் பிரேசில், போர்த்துக்கல் அணிகளுக்கிடையிலான போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல்களை பெறாவிடினும் இரண்டு அணிகளும் இணைந்து 7 மஞ்சள் அட்டையை பெற்றிருப்பது குறிப்பிடதக்கதாகும்.

---------------------------------------------------------------

இலங்கையில் உலக கிண்ணத்தை ஒளிபரப்ப உரிமை பெற்றிருக்கும் ஐ தொலைக்காட்சியில் பல போட்டிகளை நேரடியாக காட்டாததற்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்
---------------------------------------------------------------
பல இளைஞர்களுக்கு இப்போதைய தேசிய கீதமாக காணப்படும் உலக கிண்ண தீம் பாடலின் வரிகள் கீழே..

Ooooooh Wooooooh

Give me freedom, give me fire, give me reason, take me higher
See the champions, take the field now, you define us, make us feel proud
In the streets are, exaliftin , as we lose our inhabition,
Celebration its around us, every nation, all around us


Singin forever young, singin songs underneath that sun

Lets rejoice in the beautiful game.
And together at the end of the day.


WE ALL SAY


When I get older I will be stronger
They'll call me freedom Just like a wavin' flag

And then it goes back
And then it goes back

And then it goes back

When I get older I will be stronger
They'll call me freedom
Just like a wavin' flag
And then it goes back
And then it goes back

And then it goes


Oooooooooooooh woooooooooohh hohoho


Give you freedom, give you fire, give you reason, take you higher
See the champions, take the field now, you define us, make us feel proud
In the streets are, exaliftin, every loser in ambition,
Celebration, its around us, every nations, all around us


Singin forever young, singin songs underneath that sun

Lets rejoice in the beautiful game.
And together at the end of the day.

WE ALL SAY

When I get older, I will be stronger
They'll call me freedom
Just like a wavin' flag
And then it goes back
And then it goes back
And then it goes back

When I get older I will be stronger
They'll call me freedom
Just like a wavin' flag
And then it goes back
And then it goes back
And then it goes

Wooooooooo Ohohohoooooooo ! OOOoooooh Wooooooooo

WE ALL SAY !


When I get older I will be stronger
They'll call me freedom
Just like a wavin' flag

And then it goes back
And then it goes back

And then it goes back


When I get older I will be stronger
They'll call me freedom
Just like a wavin' flag

And then it goes back
And then it goes back
And then it goes

Wooo hooooo hohohohoooooo
And everybody will be singinit

Wooooooooo ohohohoooooo
And we are all singinit

இதன் வீடியோ லிங்க்

---------------------------------------------------------------
உலக கிண்ணத்திற்காக “வக்கா வக்கா” பாடலை பாடிய ஷாகிரா



15 Responses
  1. ஒரு வாரம் கழித்து பதிவுலகம் வருகின்றேன். வந்து முதல் பார்க்கும் இடும் பின்னூட்டம் இது....அண்ணே கடைசி படம் சூப்பர் அண்ணே. காய்ச்சலில் இருந்த பையனுக்கு இப்பிடி படத்தை முதலே போட்டிருந்தால் முதலே எழும்பி இருப்பேன்


  2. anuthinan Says:

    அண்ணே வருகையை உறுதி செய்து இருக்கிறேன்! கால்பந்து அறிவு குறைவு அண்ணா!

    ஆனாலும், ஆசிய கின்ன போட்டிகள் நடந்தவரை ட்விட்டரை கிரிக்கெட்தான் ஆழ்ந்து கொண்டு இருந்தது!!!

    படம் நல்லா இருக்கு! அழகாக புகைப்படம் எடுக்கபட்டு இருக்கிறது!!!


  3. Bavan Says:

    ஆசியக்கிண்ணம்
    என்ன நடந்தாலும் நான் கிறிக்கற்தான் பார்த்தேன், உதைபந்து தெரியாது, மற்றது நாய்க்கேன் போர்த்தேங்காய் என்று விட்டுவிட்டேன்..:p

    இறுதிப்போட்டி நடக்கும் போது சொல்லவும்.. பார்க்கலாம்..:P

    //இலங்கையில் உலக கிண்ணத்தை ஒளிபரப்ப உரிமை பெற்றிருக்கும் ஐ தொலைக்காட்சியில் பல போட்டிகளை நேரடியாக காட்டாததற்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்//

    ஹாஹா.. சிரச டிவியில் ஒழுங்காக ஏசியாக்கப் போட்டிகள் காட்டினார்கள்..;)(தொப்பி தொப்பி..:P)

    உலகக்கிண்ண தீம் பாடல் கேட்டேன் நல்லா இருக்கு..:)

    //உலக கிண்ணத்திற்காக “வக்கா வக்கா” பாடலை பாடிய ஷாகிரா//

    பாவம் வீட்ட என்ன கஷ்டமோ கிழிஞ்ச உடுப்பு போட்டிருக்கிறார்..:P

    ஜனநாயகக்கடமைகளையும் முடிச்சாச்சு..

    இம்முறை நூடுல்ஸ் waka waka..

    அந்தப்பாட்டு வரிகளுக்கு நன்றிங்ணா பாடமாக்கப்போறன்..:P

    வர்ட்டா..


  4. என்க்கென்னவோ ஆர்ஜெண்டீனா தான் வெல்லும் போல் தெரிகின்றது. இன்றைய போர்த்துக்கல், பிரேசில் போட்டியில் இரு அணிகளும் நன்றாக விளையாடி இருந்தாலும் இருவருக்கும் கிண்ணம் வெல்லும் வாய்ப்பு குறைவு.

    வக்கா வக்கா பாடலின் யூடூயூப்பையும் இணைத்திருந்தால் சதீஸ் காய்ச்சலில் இருந்து அடுத்த நிமிடமே குணமடைந்திருப்பார்.


  5. ///SShathiesh-சதீஷ். said...
    ஒரு வாரம் கழித்து பதிவுலகம் வருகின்றேன். வந்து முதல் பார்க்கும் இடும் பின்னூட்டம் இது....அண்ணே கடைசி படம் சூப்பர் அண்ணே. காய்ச்சலில் இருந்த பையனுக்கு இப்பிடி படத்தை முதலே போட்டிருந்தால் முதலே எழும்பி இருப்பேன்///

    சதீஷ் அந்த படத்தை பார்த்தால் காய்ச்சல் குணமாகிடும் என்று தெரிந்திருந்தால் வந்தியின் பல சூப்புகளை உங்களுக்கு லிங்க் கொடுத்திருப்பேனே. அதிலில்லாத படங்களா?


  6. //// Anuthinan said...
    அண்ணே வருகையை உறுதி செய்து இருக்கிறேன்! கால்பந்து அறிவு குறைவு அண்ணா!

    ஆனாலும், ஆசிய கின்ன போட்டிகள் நடந்தவரை ட்விட்டரை கிரிக்கெட்தான் ஆழ்ந்து கொண்டு இருந்தது!!!

    படம் நல்லா இருக்கு! அழகாக புகைப்படம் எடுக்கபட்டு இருக்கிறது!!!////

    நீங்கள் கால்பந்து ரசித்து பார்த்து டிவிட்டும் ரகசியம் அறிவோம்.

    கிரிக்கட்டா அப்படினா என்ன?


  7. ///Bavan said...
    ஆசியக்கிண்ணம்
    என்ன நடந்தாலும் நான் கிறிக்கற்தான் பார்த்தேன், உதைபந்து தெரியாது, மற்றது நாய்க்கேன் போர்த்தேங்காய் என்று விட்டுவிட்டேன்..:p/////

    கிரிக்கட்டா அப்படினா அந்த குச்சியில பந்த தட்டுவாங்களே அந்த விளையாட்டா?

    ////ஹாஹா.. சிரச டிவியில் ஒழுங்காக ஏசியாக்கப் போட்டிகள் காட்டினார்கள்..;)(தொப்பி தொப்பி..:P)////

    ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... ங்ங்ங்ங்ங்ங்


    ////உலகக்கிண்ண தீம் பாடல் கேட்டேன் நல்லா இருக்கு..:)


    ஜனநாயகக்கடமைகளையும் முடிச்சாச்சு..

    இம்முறை நூடுல்ஸ் waka waka..

    அந்தப்பாட்டு வரிகளுக்கு நன்றிங்ணா பாடமாக்கப்போறன்..:P/////

    அடுத்த பதிவில் வக்கா வக்கா வரிகளையும் வீடியொவையும் போடுறேன்


  8. ///// வந்தியத்தேவன் said...
    என்க்கென்னவோ ஆர்ஜெண்டீனா தான் வெல்லும் போல் தெரிகின்றது. இன்றைய போர்த்துக்கல், பிரேசில் போட்டியில் இரு அணிகளும் நன்றாக விளையாடி இருந்தாலும் இருவருக்கும் கிண்ணம் வெல்லும் வாய்ப்பு குறைவு. ////

    எனக்கும் ஆர்ஜன்டீனா இம்முறை வெல்வார்கள் என்றுதான் படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்

    /////வக்கா வக்கா பாடலின் யூடூயூப்பையும் இணைத்திருந்தால் சதீஸ் காய்ச்சலில் இருந்து அடுத்த நிமிடமே குணமடைந்திருப்பார்.////

    போட நினைத்தேன், பதிவு இன்னும் நீண்டுடும் என்பதால் போடவில்லை


  9. ARV Loshan Says:

    நல்ல ஒரு தொகுப்பு.
    எனக்கு ஆர்ஜெண்டீன மிகப் பலமான அணியாகவே தெரிகிறது.
    பிரேசில் போர்த்துக்கல் இன்று ஆடியது செம போர்.

    nil all draw.

    இப்படிப் போனால் அரையிறுதி வரை மட்டுமே செல்ல முடியும்.
    யோ, ஸ்பெயினை மறந்துட்டீங்களா?
    இப்போ தான் போர்முக்கு வருகிறார்கள்.
    நெதர்லாந்தும் கலக்கல் அணி.
    ஏனைய அணிகளுக்கு வாய்ப்பில்லை.

    நாளை முதல் சுற்றுப் பற்றிய என் தொகுப்பில் முழு விஷயமும் சொல்கிறேன். :)

    ஓ இவங்க தான் அந்த வக்கிராவா? சாரி ஷக்கிராவா? ;)

    //காய்ச்சலில் இருந்த பையனுக்கு இப்பிடி படத்தை முதலே போட்டிருந்தால் முதலே எழும்பி இருப்பேன்
    //

    சந்திரமுகியில் ரஜினி வடிவேலுவைப் பார்த்து சொல்வது தான் ஞாபகம் வருது ;)



    //வந்தியின் பல சூப்புகளை உங்களுக்கு லிங்க் கொடுத்திருப்பேனே. அதிலில்லாத படங்களா?

    //
    ஆமாமா.. அதானே நவீன கா.சூ.. ;)

    LOSHAN
    http://arvloshan.com/


  10. ARV Loshan Says:

    நல்ல ஒரு தொகுப்பு.
    எனக்கு ஆர்ஜெண்டீன மிகப் பலமான அணியாகவே தெரிகிறது.
    பிரேசில் போர்த்துக்கல் இன்று ஆடியது செம போர்.

    nil all draw.

    இப்படிப் போனால் அரையிறுதி வரை மட்டுமே செல்ல முடியும்.
    யோ, ஸ்பெயினை மறந்துட்டீங்களா?
    இப்போ தான் போர்முக்கு வருகிறார்கள்.
    நெதர்லாந்தும் கலக்கல் அணி.
    ஏனைய அணிகளுக்கு வாய்ப்பில்லை.

    நாளை முதல் சுற்றுப் பற்றிய என் தொகுப்பில் முழு விஷயமும் சொல்கிறேன். :)

    ஓ இவங்க தான் அந்த வக்கிராவா? சாரி ஷக்கிராவா? ;)

    //காய்ச்சலில் இருந்த பையனுக்கு இப்பிடி படத்தை முதலே போட்டிருந்தால் முதலே எழும்பி இருப்பேன்
    //

    சந்திரமுகியில் ரஜினி வடிவேலுவைப் பார்த்து சொல்வது தான் ஞாபகம் வருது ;)



    //வந்தியின் பல சூப்புகளை உங்களுக்கு லிங்க் கொடுத்திருப்பேனே. அதிலில்லாத படங்களா?

    //
    ஆமாமா.. அதானே நவீன கா.சூ.. ;)

    LOSHAN
    http://arvloshan.com/



  11. யோகா, எனக்கு பிரேசிலின் மீதே ஆர்வம் அதிகம். ஆனாலும், உண்மையைச் சொன்னால் பலருக்கு இருக்கும் கால்பந்து காய்ச்சல் எனக்கு இம்முறை இல்லை.

    ////Give me freedom, give me fire, give me reason, take me higher
    See the champions, take the field now, you define us, make us feel proud.../////

    இந்த தீம் பாடலை என்னுடைய நெருங்கிய நண்பரொருவர் மிகவும் அற்புதமாகப் பாடுவார்.


  12. ////காய்ச்சலில் இருந்த பையனுக்கு இப்பிடி படத்தை முதலே போட்டிருந்தால் முதலே எழும்பி இருப்பேன்
    //

    சந்திரமுகியில் ரஜினி வடிவேலுவைப் பார்த்து சொல்வது தான் ஞாபகம் வருது ;)
    //

    லோஷன் அண்ணா உங்களுக்கு பொறாமை...ஹீ ஹீ


  13. ippothu thaan vaasiththeen.mmm nallathoru thakuppu..



Facebook Badge