நூடுல்ஸ் (16-06-2010)

ரொம்ப நாளாக பதிவு எழுதாவிடின் தொடர்பு விட்டு போய்விடும் என்பதால் ஒரு நூடுல்ஸ் போடுகிறேன்.

--------------------------------------------------------------------------------------------
கால்பந்து காய்ச்சல் வந்து பலரை வாட்டுகிறது, முக்கியமான போட்டிகள் நள்ளிரவில் நடை பெறுவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது (நேற்று நம்ம பிரேசில் விளையாடிய நேரம், போட்டியை பார்த்தால் அலுவலகத்தில் தூங்கி வழிய வேண்டி வரும். அடுத்த சுற்று போட்டிகள் தொடங்கிய பின்னர் எல்லா போட்டிகளையும் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என நினைக்கிறேன்.

--------------------------------------------------------------------------------------------
நேற்று கிரிக்கட் பார்க்கும் எண்ணம் இருக்க வில்லை காரணம் கால்பந்து, சும்மா பார்க்க தொடங்கினேன், செம திரிலாக இருந்தது. யப்பா அப்ரிடிக்கு எப்படி அந்தளவு பொறுமை வந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. வருவார் 2, 3 சிக்சர் அடித்துவிட்டு போய்விடுவார் என எதிர் பார்த்தால் மனுஷன் சூப்பரா விளையாண்டார், எப்போதுமே அப்ரிடியின் அதிரடியை ரசிப்பேன், நேற்று அந்த மனுஷனுக்கு தசைபிடிப்பு வந்திருக்காவிடின் போட்டியை எப்போதோ வென்றிருப்பார். பதிவர் பவனின் பஞ்ச் படி அப்ரிடி அடித்தது அடியல்ல, ஒவ்வொன்றும் இடி.

பாவம் முரளி, அடித்து நொறுக்கி விட்டார்கள், அடுத்த சிங்கத்துக்கும் வயதாகிறதோ? அப்படியாயின் சனத் மாதிரி தொங்கி கொண்டிருக்க வேண்டாம்.

மத்தியுஸ், மாலிங்க சிறப்பாக விளையாண்டு இலங்கையின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்கள்.
-----------------------------------------------------------------------------------------------
திங்கட்கிழமை காலை நுவரெலியாவிலிருந்து கண்டி வருகையில் வழமை போல வெற்றி எப் எம்மில் விடியல் கேட்டு கொண்டு வந்தேன், ஆபிரிக்கா பற்றி பல தெரியாத விடயங்களை அந்நிகழ்ச்சியினால் அறிந்து கொண்டேன், இந்த மாதிரி நிகழ்ச்சிகளை அதிகமாக லோஷனிடம் எதிர்பார்க்கிறோம்.

தங்கிலீஸ் பேசும் வானொலிகளில் இவ்வாறான நிகழ்ச்சிகளை எதிர் பார்க்க முடியாதே. அதனால்தான் வெற்றியிடம் எதிர்பார்க்கிறோம்.

வெற்றி வானொலியில் குறையே இல்லை என கேட்க வேண்டாம், நான் அதிகமாக வானொலி கேட்கும் காலை நேரங்களில் விடியல்தான் சிறந்தது என்பதில் சந்தேகமேயில்லை.
--------------------------------------------------------------------------------------------
கொஞ்ச நாளாக “உசுரே போகுது” என பலரது உள்ளங்களை கொள்ளை கொண்ட பாடலுக்காகவே முதல் நாள் ராவணன் பார்க்க யோசித்துள்ளேன், எப்போதுமே நான் ரசிக்கும் ரகுமான், மணிரத்னம், சீயான், ஐஸ் ஆகியோருக்காக கட்டாயம் படம் முதல் நாள் பார்க்க வேண்டும். சுறா அசல் போன்றவற்றையே தியேட்டர்ல பார்த்து பழகிட்டோம், இதை விட கொடுமையாக ராவணன் இருக்காது என நம்பலாம்.
--------------------------------------------------------------------------------------------

--------------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது

அய்யப்ப பணிக்கர் எனும் மலையாள கவிஞர் எழுதியதாக வைரமுத்து குமுதத்தில் குறிப்பிட்ட கவிதை. தந்தையின் மறைவுக்கு அமெரிக்காவிலிருந்து மகன் அனுப்பும் செய்தி

“விடுமுறை இல்லை,
வீடியோ அனுப்புங்கள்,
வாரக்கடைசியில் பார்த்து
வருத்தப்பட.
வீடியோ கலரில் இருப்பது
உத்தமம்,
ஏனெனில் -
மலையாள மரணம்
பார்த்ததில்லை
என் அமெரிக்க நண்பர்கள்
யாரும்”

--------------------------------------------------------------------------------------------
பார்த்ததில் பிடித்தது


ஜெஸ்ஸி ஜெஸ்ஸி ஜெஸ்ஸி .....
7 Responses
 1. ஹாஹா அவசரமாக எழுதப்பட்ட நூடூல்ஸ்சோ இல்லை நிறைய விடயங்கள் இருந்தாலும் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தான்.ஜெசியின் இன்னொரு படம் எப்படியும் அடுத்த சூப்பில் வரலாம்.


 2. Subankan Says:

  நூடுல்ஸ் - :)))


 3. Bavan Says:

  புட்பால் பார்ப்பதில்லை.. அது காலால் உதைத்து விளையாடப்படுவது என்ற அளவு அதைப்பற்றித்தெரியும்..ஹிஹி

  புலி பசித்தாலும் புல் தின்னாது, கிறிக்கற் போட்டி இல்லாட்டி பழைய கிறிக்கற் போட்டியைப்பார்ப்பேனே தவிர நோ புட்பால்..:P

  வெற்றி இயஸ்..

  உசிரே போகுதே.. பார்க்க கொழும்பு போகும் எண்ணம் உண்டு.. அதைப்பார்க்காவிட்டால் என் உசிரே போய்விடும்..;)

  கவிதை சிந்தனையா? சிரிப்பா?..ம்ம்ம்ம்...

  ஜெசி.. ஜெசி...


 4. Unknown Says:

  //சுறா அசல் போன்றவற்றையே தியேட்டர்ல பார்த்து பழகிட்டோம், இதை விட கொடுமையாக ராவணன் இருக்காது என நம்பலாம்.//

  கண்டிப்பாக...

  கவிதை சூடு...


 5. நூடில்ஸ் மீண்டும் வந்தது சந்தோசம் ஆனால் கொஞ்சம் சுவை குறைவாய் உள்ளது அடுத்தமுறை பார்த்துக்கொள்ளுங்கள்.


 6. ARV Loshan Says:

  நான் முக்கியமான போட்டியென்றால் நள்ளிரவு தாண்டியும் பார்த்துவிட்டே தூங்குகிறேன்.. என்ன செய்ய. கடமையுணர்வு.. ஹீ ஹீ.

  பூம் பூம் அப்ரிடி ஒரு பூகம்பம்.. ;)
  பவன் கலக்கல்..

  பாராட்டுக்கு நன்றி யோகா.. இப்படியான விமர்சனங்கள் மேலும் உற்சாகம் தருகின்றன..

  உசுரே போகுது பற்றி இன்று ஒரு உருக்கப் பதிவு போடுகிறேன்.. :)
  எனக்கும் ரொம்பவே பீலிங்.

  கவிதை டச்சிங். நிகழ்காலம் கலிகாலம்.

  உங்க ஜெசியை விட நம்ம மாமா இன்று ஒரு புது ஜெசி போட்டிருக்கார்.. அதைப் பாருங்க.. ;)

  LOSHAN
  http://arvloshan.com/


 7. “விடுமுறை இல்லை,
  வீடியோ அனுப்புங்கள்,
  வாரக்கடைசியில் பார்த்து
  வருத்தப்பட.
  வீடியோ கலரில் இருப்பது
  உத்தமம்,
  ஏனெனில் -
  மலையாள மரணம்
  பார்த்ததில்லை
  என் அமெரிக்க நண்பர்கள்
  யாரும்”//

  நெஞ்சை சம்பட்டியால அடிக்குதுங்க கவிதை.
  பகிர்வுக்கு நன்றிங்க.


Facebook Badge