இசைப்புயலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நாளை பிறந்த நாளை கொண்டாடவிருக்கும் எங்களது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உலக தமிழர்களை தலை நிமிர வைத்த ஒஸ்கார் தமிழனது பிறந்த நாளுக்கு வாழ்த்துவதில் நான் சந்தோஷமடைகிறேன்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கப்பலில் நடந்த மன்மதன் அம்பு பட இசை வெளியீட்டு முன்னோட்டத்தில் மன்மதன் அம்பு பட இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தை வாழ்த்தும் போது கமல் தெரிவித்த ஒரு கருத்து என்னை போன்ற ரகுமான் ரசிகர்களுக்கு மனவருத்தத்தை தந்தென்பதை மறுக்கவியலாது. “எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா என்னும் இருவருக்கு பிறகு தமிழ் திரையிசையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல கூடிய தகுதி தேவி ஸ்ரீ பிரசாத்திடமே உள்ளது என கமல் கூறினார். கமலுக்கு ரகுமான் என்னும் இசையமைப்பாளரின் சாதனைகள் மறந்துவிட்டதா இல்லை வேண்டுமென்றே ஒரு சாதனை தமிழனை புறக்கணிக்கிறாரோ தெரியவில்லை.

உலக அரங்கில் தன்னை நிரூபித்த இசைப்புயலை எம்மவர்கள் சிலர் புறக்கணிப்பது வருத்தத்திற்குறியதே. எம்.எஸ்.வி., இளையராஜா பாடல்கள் எவ்வாறு காலத்தால் அழியாததோ அதே போன்று ரகுமானின் இசையும் காலத்தால் அழியாததே. 

சரளமாக ஆங்கிலம் பேச முடிந்தும், ஏராளமான ஆங்கில பார்வையாளர்களுக்கு முன்னர் “எல்லா புகழும் இறைவனுக்கே” என தன செந்தமிழில் பேசிய ஆஸ்கார் நாயகன் நாளை ஜனவரி 6ம் திகதி தனது 45ம் அகவையில் காலடி எடுத்து வைக்கிறார். இவ்வருடத்தை ஓய்வு வருடமாக அறிவித்துள்ள இசைப்புயல். ஓய்வின் பின்னர் பழைய போர்முக்கு திரும்பி எம்மை இசை மழையில் நனைய வைப்பார் என நம்பலாம்.

இசைப்புயல் இம்முறையும் ஆஸ்கார் விருது பெற்று எம்மை இன்னும் மகிழ்வடைய செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன்

இசைப்புயலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இசைப்புயலின் மனதை வருடும் இரு இசைக்கோலங்கள் கீழே



15 Responses
  1. எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    இலங்கையில் திணறும் காவலன் விநியோகமும் யாழ்ப்பாணத்து எதிர்ப்பும்


  2. தங்கள் ஆதங்கம் என்னிடமும் உண்டு அண்ணரே... அவரது அந்த ஆங்கிலேயரின் முன் பேசிய தமிழ் பல தமிழருக்கு செருப்படியானது.. அது மனதை நெகிழ வைத்த தருணமாகும்... அந்தக் கலைஞனுக்கு எனது இனிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்....


  3. வாழ்த்துக்கள்.


  4. நல்லதொரு அலசல்.
    ஏன் உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் தீம் பாடலிலுமிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
    தமிழன் திருந்தவே மாட்டான்
    காவலன் படத்துக்கு மீண்டும் ஆப்பு


  5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


  6. ஆங்கில சபையில் தமிழ் முழங்கிய மறத்தமிழன் இசைப்புயலுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்..

    அதே ஆதங்கம்..எனக்கும்...


  7. இசைப்புயலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


  8. இசை சூறாவளிக்கு எங்கள் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...


  9. Subankan Says:

    இசைப்புயலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)


  10. Jana Says:

    "எல்லாப்புகழும் இறைவனுக்கே"


  11. sinmajan Says:

    அவரது ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான பண்பு பிடித்திருக்கிறது.இசைப்புயலிற்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.



  12. பகிர்விற்கு நன்றி இசைப்புயலுக்கு வாழ்த்துக்கள்


  13. உலக அரங்கில் தமிழனின் பெருமையை தலைதுக்கவைத்த ரஹ்மானுக்கு என் வாழ்த்துக்களும்


  14. அண்ணே கமலும் எங்களப்போல ஒரு சராசரி மனிசன் என்பதை நிருபித்திட்டார். ரகுமானை சொல்லம விட்டதென்பது வேறு விசயம் ஆன போயும்போய் DSPஐ சொன்னாரே அதான் மகா காமடி!


Facebook Badge