Showing posts with label இசைஞானி. Show all posts
Showing posts with label இசைஞானி. Show all posts

எனக்கு பிடித்து 80களின் பாடல்கள் (இளையராஜா ஸ்பெஷல்)

இன்று இளையராஜா ஸ்பெஷல் விடியல் கேட்ட பின்னர் எனக்கு பிடித்த சில இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்களை இணையத்தில் தேடி ரசித்தேன். அப்பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி
1. இளையநிலா பொழிகிறது.

இசைஞானி இளையராஜாவின் இசையில், கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில், பாடும் நிலா S.P.B. யின் மனதை மயக்கும் இனிய குரலில் அமைந்துள்ள இப்பாடலை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இசை பற்றிய ஞானம் இல்லாத சிறிய வயதில் (இப்ப மட்டும் இருக்கா என்ன?) இப்பாடலை ரசித்திருக்கிறேன். கிட்டாரை ரசிப்பவர்கள் இப்பாடலை தவறவிட மாட்டார்கள். மனதில் ஏதாவது கவலைகள் இருக்கும் பட்சத்தில் இப்பாடலை கேட்டு கேட்டு என்னை புத்துணர்ச்சியாக்கிக் கொள்வேன்.


2. என் இனிய பொன் நிலாவே
     இதுவும் மனதை மயக்கும் கிட்டார் இசையை கொண்டுள்ள பாடலாகும். கங்கை அமரனின் அற்புத வரிகளுக்கு இசை வடிவம் கொடுத்திருப்பது இசைஞானி, பாடலுக்கு தன் வசீகர குரலால் உயிர் கொடுத்திருப்பவர் K.J. ஜேசுதாஸ்.


3.பொன் மாலை பொழுது
கவிப்ரேரசை இசைஞானி தமிழ் திரையிசைக்கு அறிமுகம் செய்து வைத்த பாடல், பாடலுக்கு S.P.B. தன் குரலால் உயிர் கொடுத்திருப்பார்.  வைரமுத்து தன் கவி வரிகளை இசைஞானியின் அற்புத இசையோடு சங்கமிக்க வைத்திருப்பார்.


4. மடை திறந்து தாவும் நதியலைதான்
இந்த பாடல் கொடுக்கும் உற்சாகம் சிறப்பானது, இளையராஜாவின் இசையில் எம்மை உற்சாகபப்படுத்த சிறந்த பாடல். பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் கவி மார்க்கண்டேயர் வாலி. பாடியவர் பாடும் நிலா S.P.B. இப்பாடல் சற்று காலத்திற்கு முன்னால் ரீமிக்சாகவும் அடுத்த தலைமுறையினரிடமும் வெளியாகி சக்கை போடு போட்டது.



5. காதலின் தீபம் ஒன்று
S.P.B.யின் குரலில் சூப்பர் ஸ்டாருக்காவே வடிவமைத்த மென்மையான இசையினை வழங்கியிருப்பார் இசைஞானி. வரிகளுக்கு சொந்தக்காரர் பஞ்சு அருணாசலம்.
6. மன்றம் வந்த தென்றலுக்கு
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்களில் ஒன்று. மீண்டும் இசைஞானி, பாடும் நிலாவின், கவி மார்க்கண்டேயரின் முக்கூட்டணி எம்மை ஆக்கிரமித்த பாடல்.


7. சங்கீத ஜாதி முல்லை
  கர்நாடக இசையறிவு அற்ற எனக்கே இப்பாடல் பிடிக்குமென்றால், கொஞ்சமாவது இசையை கற்றறிந்தவர்களுக்கு இப்பாடல் ஒரு அமுத சுரபியாக இருக்குமென நினைக்கிறேன். மீண்டும் இசைஞானி, வைரமுத்து, S.P.B.  போட்டி போட்டு பங்களித்திருப்பார்கள்.
8. சங்கீதம் கேளு
  இன்றுவரை இப்பாடலுக்கு இசையமைத்தவர் இசைஞானி என்றே எண்ணியிருந்தேன். இன்று கூகுகிலாண்டவரிடம் தேடி பார்த்த போதுதான் இது இசைஞானியின் தமையனாரான கங்கை அமரனின் இசையில் வெளிவந்த பாடல் என அறிந்தேன். எனினும் இப்பாடல் கேட்க மிகவும் இனிமையாக இருக்கும். பாடலை பாடியவர் அமரர் மலேசியா வாசுதேவன் அவர்கள்.




9.பனி விழும் மலர் வனம்
இசைஞானி, வைரமுத்து, S.P.B. கூட்டணியின் மற்றுமொரு மகுடம். இரவு வேளைகளில் இப்பாடலை கண்ணை மூடிக் கொண்டு கேட்டு பாருங்கள், சொர்க்கம் தெரியும்
10. அஞ்சலி அஞ்சலி அஞ்சலி 
நான் சிறுவனாக இருக்கும் போது வெளிவந்த இப்பாடல் இன்றும் எனக்கு பிடித்தமான பாடலாக இருப்பது இசைஞானியின் வெற்றி எனலாம். பாடலுக்கு குரல் கொடுத்தவர் சிறிய வயது பவதாரிணி. பாடல் வரிகள் கவி மார்க்கண்டேயர் வாலி என நினைக்கிறேன்.


பி.கு.- இன்னும் ஏராளமான பாடல்களை எழுதி கொண்டே போகலாம். ஆனாலும் 10 பாடல்களுடன் முடித்து கொள்கிறேன். இளமையெனும் புங்காற்று, நிலாவே வா, இதயம், புன்னகை மன்னன், இதயக்கோவில் என பட பாடல்கள் எழுத நினைத்தேன், நேரப்பற்றாக்குறை காரணமாக எழுதுவில்லை யாராவது விரும்பினால் தொடரலாம்

Facebook Badge