நூடில்ஸ் (01.09.2010)


01நான் ADSL இணைய இணைப்பை பாவித்துவந்த நான் கடந்த மார்ச் மாதத்திலிருந்து Mobitel Broadband இணைய இணைபுக்கு மாறிவிட்டேன், மார்ச் மாதம் வாங்கிய இணைப்புக்கு இதுவரை ஒரு கட்டண பட்டியலையும் மொபிடெல் நிறுவனம் எனக்கு அனுப்பவில்லை, ஏதோ போனால் போகட்டும் என ஒவ்வொரு மாதமும் இணைய பாவனைக்கு என ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை கட்டி வந்தேன், இடையில் மொபிடெல் நிறுவனத்திற்கு சென்று இரு முறையும், தொலைபேசியில் ஒரு முறையும் எனக்கு பில் வரவில்லை என முறையீடும் செய்திருக்கிறேன், ஒவ்வொருமுறையும் அவர்கள் பில்லை தபாலில் அனுப்பியிருக்கிறோம், வராதது ஏனென பார்க்கிறோம் என நம்பிக்கையளிக்கும் வகையில் பதிலளித்தனர்


திடீரென கடந்த வாரம் எனது இணைய இணைப்பு இயங்கவில்லை கஸ்டமர் கெயாரை தொடர்பு கொண்டால் நான் கட்டணம் செலுத்த தவறியதால் எனது இணைப்பை துண்டித்து விட்டார்களாம், எவ்வளவு கட்டணம் என அறியாமல் எப்படி செலுத்துவதாம்? நேற்று தொடர்பு கொண்ட போது நான் ஈ-பில்லிங் (e-Bill) சேவையை தெரிவு செய்திருப்பதால் எனக்கு பில் அனுப்பவில்லை என சொன்னார்கள், அது எப்பவொ நான் முயற்சி செய்து பார்த்து மறந்து போனது, எனது பிரச்சினை என்னவென்றால் ”அவ்வளவு பெரிய நிறுவனத்திற்கு எனக்கு பில் வராததன் காரணத்தை கண்டுபிடிக்க 3 மாதம் ஆனதா?“ என்பதாகும். இதற்கே இப்படி என்றால் வேறு பெரிய ஒரு பிரச்சினை ஏற்பட்டிருப்பின் என்ன செய்வார்கள்? இந்த பிரச்சினையால் நான் வேறு ஒரு நிறுவன இணைய இணைப்புக்கு மாற யோசித்துள்ளேன்

------------------------------------------------------------------------------------------------------
சம்பின்ஸ் லீகில் இலங்கை வயம்ப அணிக்கு அனுசரனை வழங்குவதற்கு பாலியல் ஊக்குவித்தல் தொடர்பான மருந்துகளை விநியோகிக்கும் நிறுவனம் முன்வந்திருப்பது பலரது அதிருப்தியை சம்பாதித்துள்ளது.  என்னை கேட்டால் நானும் இது வேண்டாமென்றெ சொல்லுவேன், காரணம் அதிக பணம் கொடுப்பதற்காக யாரையும் ஏற்று கொள்ளலாமென்றில்லை. இவ்வாறான அதிக பணம் மீதான மோகமே பாகிஸ்தான் வீரர்களை லஞ்சம் வாங்கி ஸபொட் பிக்சிங் (தமிழ் வார்த்தை யாதோ?) செய்ய வழிவகுத்துள்ளது. ஆகவே பணமே விளையாட்டு என்பதை ஊக்குவிக்காமலிருக்க வேண்டும், இலங்கை கிரிக்கட் சபை இதை செய்யுமா?
------------------------------------------------------------------------------------------------------
கடந்த ஆகஸ்ட் 29ம் திகதி திருமண பந்தத்தில் இணைந்த “அறிந்ததும் அனுபவமும்” பதிவரும், சக்தி வானொலி அறிவிப்பளருமான டயானா சதாசக்திநாதன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். 
------------------------------------------------------------------------------------------------------
உயர்தர பரீட்சையின் போது பரீட்சை திணைக்களம் விட்ட தவறுகளால் பரீட்சை எழுதவியலாமல் போன இரு மாணவர்களை நேற்றைய தொலைக்காட்சி செய்தியில் பார்க்க கிடைத்தது, இனி எவ்வளவுதான் மன்னிப்பு கேட்டாலும் இழந்து போன அம்மாணவர்களது பரீட்சை கனவு நனவாகாது என்பது கசப்பான உண்மை கடந்த காலங்களில் வினாதாள்களில் தவறுகளை விட்ட பரீட்சைகள் திணைக்களம், இவ்வாறு மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடுவது கண்டிக்கதக்கது, சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா?

உயர்தர பரீட்சை பற்றிய இன்னொரு செய்தி, ஒரு மாணவி பரீட்சைக்கு விடையளிக்க நேரம் போதாமையால் தற்கொலை செய்து கொண்டாள் என்பது, இவ்வாறு பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தற்கொலை செய்வது தற்போது அதிகமாகிவிட்டது வருந்தத்தக்கது.
------------------------------------------------------------------------------------------------------
நேற்று மூட் சரியில்லை என மூஞ்சிப்புத்தகத்தில் ஸ்டேஸ் போட்டு சில நேரத்திலேயே தொலைபேசியில் தொடர்பு கொண்டு கனிவாக பேசிய நண்பர் பதிவர் “சிதறல்கள்” ரமேசுக்கு  எனது நன்றிகள், மே மாதம் எனது இணைய கணக்குகள் ஹேக் செய்யப்பட்டவுடன் என்னுடன் தொடர்பு கொண்டு எனக்கு உதவிய பதிவுலக நண்பர்கள, நேற்று தொடர்பு கொண்ட பதிவர் என பல சிறந்த நண்பர்களை தந்ததற்கு பதிவுலகிற்கு நன்றி சொல்கிறேன்.

------------------------------------------------------------------------------------------------------
இனிமேல் கிரிக்கட்டில் நடுவர்கள் இப்படிதான் இருக்க வேண்டி வருமோ?


9 Responses
  1. மொபிரெல் - :-)
    மின்னஞ்சல் மூலமான பில் இற்கு சமர்ப்பித்ததை நீங்களும் மறந்தாச்சா.... ஹி ஹி... ;-)

    சம்பியன்ஸ் லீக் - எனக்கு இதில் கருத்து இல்லை.
    பெரிய பிழையென்று தெரியவில்லை.
    ஆனால் தவிர்த்திருக்கலாமோ என்று நினைக்கிறேன்.

    உயர்தரப் பரீட்சை - :(
    என்ன தவறு நடந்தது? நான் தொ.கா பார்ப்பதில்லை என்பதால் கவனிக்கவில்லை.

    தற்கொலை - முட்டாள்தனம். :(

    பேஸ்புக் - :-)

    கேலிச்சித்திரம் - இரசித்த ஒன்று.... :)))


  2. சகோதரா..... பதிவிற்கு நன்றி... முக்கிய விடயமொன்று நீங்க மற்ற வலையமைப்பென்று எயாரெலையா சொல்லுறிங்கள்... நான் டயலொக் பாவிக்கிறேன். எப்ப எயாரெல் வரும் என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன்.... யாரும் எயாரெல் பாவிக்கிறவங்க அதைப்பற்றி சொல்லுங்களேன்..... இல்லாவிடில் ஒரு தொடர் பதிவு போடுவமா..?


  3. Subankan Says:

    கடைசி கார்ட்டூன் - டாப்பு :)


  4. anuthinan Says:

    அண்ணா பதிவு பல விடயங்களை சொல்லி இருக்கிறது!!


    பதிவில் கார்ட்டூன் ரொம்பவும் அருமை


  5. Jana Says:

    நேரம்போதாமையினால் தற்கொலை மனதில் பல சிந்தனைகளை விதை;து கவலைகொள்ளச்செய்கின்றது. தற்போதைய நிலையில் மாணவர்களுக்கு கல்வித்திணிப்பு மட்டுமே இடம்பெற்றுவருவதனாலேயே இந்த நிலைகள் தோற்றம் பெற்றுள்ளதாக நினைக்கின்றேன். கல்வியை மட்டும் அன்றி, உலக அறிவு, அனுபவங்கள், உளச்சார்ப்பு விடயங்கள், மேன்மைத்தன்மைகள், விட்டுக்கொடுப்பு, சகிப்பு, என பல விடயங்களையும் குறிப்பாக புறபாட விதானங்கள் மூலம் ஒரு குழந்தையினை ஆளுமைமிக்க இளைஞனாக பல்கலைக்கழகத்திற்கோ, அல்லது வேறு கல்விக்கோ, தொழிலுக்கோ அனுப்புவதே பாடசாலைகளினதும், ஆசிரியிரினதும் பங்கு என்பது திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் போல இருக்கின்றது.


  6. Bavan Says:

    மொபிட்டல் - அவ்வ்வ்.. நல்லகாலம் சொன்னீர்கள், மொபிட்டெலுக்கு மாற இருந்தேன்.. SLT வாழ்க..;)

    அனுசரணை -

    //இலங்கை கிரிக்கட் சபை இதை செய்யுமா?//

    பணத்துக்குத்தான் முன்னுரிமை அவர்கள் மாற்றுவார்கள் என்று நம்பிக்கையில்லை..:(

    திருமணம் - நானும் எனது வாழ்த்துக்களைச் சொல்லிக்கொள்கிறேன்..:D

    கல்வித்திணைக்களம் -
    செய்தி எனக்கும் தெரியாது.. ஆனால் கல்வித்திணைக்களம் மட்டுமல்ல
    பல முன்னணிப்பாடசாலைகளில் வகுப்பில் ஒரு பாடத்துக்கு 20 மார்க்ஸ் கூடத்தாண்டாத மாணவன் கடைசியில் 3A கூட எடுப்பான்(பிட் அடித்தோ, முன்னரே பேப்பர் வெளியாகியோ).. ஆனா உள்வீட்டு விடயங்களை அவர்கள் கூறவே நான் கேட்டிருக்கிறேன், ஆனால் எங்களால் என்ன செய்துவிடமுடியும்?..

    தற்கொலை செய்யும் அளவுக்குப் போகும் மாணவர்களைப்பார்க்கும் போது அந்த முன்னணி பாடசாலை மாணவர்களை என்ன செய்யலாம்?

    //பல சிறந்த நண்பர்களை தந்ததற்கு பதிவுலகிற்கு நன்றி சொல்கிறேன்.//

    எனக்கும்தான் நண்பர்களை மட்டுமல்ல பல புதிய விடயங்கள், பல வித்தியாசமான மனிதர்கள் எனப்பலரை இனங்காட்டியிருக்கிறது இந்தப்பதிவுலகம்..:)

    //இனிமேல் கிரிக்கட்டில் நடுவர்கள் இப்படிதான் இருக்க வேண்டி வருமோ?//

    ஹாஹா.. இருக்கலாம்..:P


  7. ARV Loshan Says:

    மொபிடெல் - வழமையான அரச நிறுவனப் பாணி??
    I am more comfortable with SLT Broadband

    வயம்ப அணிக்கு அனுசரனை // உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.

    சகோதரி டயானாவுக்கு வாழ்த்துக்கள்.

    உயர்தரப் பரீட்சை-மாணவர்கள் - கல்வியாளர்களுக்கு 3 Idiots படம் காட்ட வேண்டுமோ?

    நண்பர்கள் என்றால் அப்படித்தான்.. இதற்கு நன்றிகள் தேவையா?

    கார்ட்டூன்- நேற்றே பார்த்தேன்.. :)


    LOSHAN
    www.arvloshan.com


  8. Unknown Says:

    அன்பிற்கினிய நண்பரே...,
    / /...நான் ADSL இணைய இணைப்பை பாவித்துவந்த நான்..../ /

    வீட்டிற்கு வீடு வாசற்படி.

    / /..அதிக பணம் மீதான மோகமே பாகிஸ்தான் வீரர்களை லஞ்சம் வாங்கி ஸபொட் பிக்சிங் (தமிழ் வார்த்தை யாதோ? - எனக்கும் தெரியவில்லை.) செய்ய வழிவகுத்துள்ளது.../ /

    உண்மைதான்...

    / /பாலியல் ஊக்குவித்தல் தொடர்பான மருந்துகளை விநியோகிக்கும் நிறுவனம் முன்வந்திருப்பது பலரது அதிருப்தியை சம்பாதித்துள்ளது./ /

    என்னை கேட்டால் நான் இது வேண்டுமென்றே சொல்லுவேன், காரணம்
    இலங்கை கிரிக்கட் சபையில் இருப்புத்தொகையை பெருக்க வேண்டாமா? அப்போதுதானே வீரர்களை தவறான பக்கம் போகாமல் தக்கவைக்கமுடியும்.

    புதுமண தம்பதிகளிடம் என்னுடைய வாழ்த்துக்களையும் சேர்த்துவிடுங்கள்.

    நன்றி...,
    மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
    அன்புடன்.ச.ரமேஷ்.


  9. Ramesh Says:

    நானும் ADSL தான் பயன்படுத்துவதால் சிக்கல் குறைவு. மற்றப்படி நமக்குத் தெரியாது யோகா..

    தம்பதிகளுக்கு வாழ்த்துசொல்லுவோம்.

    பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட வேண்டிய விடயங்களை தெளிவுபடுத்தாமல் நாமும் தவறுகிறோம். தற்கொலை தீர்வாகாது ....:(

    அதுக்குள்ள இடுக்கையையிட்டு இப்படி நட்புக்கு நன்றி சொல்லி போமல்டிகளை மேற்கொள்வது நல்லதல்ல.. பப்ளிக்கில நொந்து நூடில்ஸ் ஆகிட்டோமோ....ஹாஹாஹா... கோவிக்காதீங்க
    //
    நட்பு நமக்கு
    கற்பு
    மறவாதீர்கள்
    அது நம்
    மனதை வளர்க்கும்
    அன்பின்
    உலோக வார்ப்புக்கள்

    நட்புத் 'தீ' வளருங்கள்
    நட்புக்குத்
    தீ வைக்காதீர்கள்///


Facebook Badge