காதலித்து பார் (Remix Version)

காதலித்து பார்,
உன்னை சுற்றி பேண்டேஜுகள் போடப்படும்,
மதுபானம் அர்த்தப்படும்
வானத்தின் நீலம் விளங்கும்,
உனக்கும் உதை விழும்,
எழுத கையில்லாமல் போகும்,
பொலிஸ்காரன் தெய்வம் ஆவான்,
கீழே விழுந்து மூக்கு கண்ணாடி உடையும்
கண்ணிரண்டும் ஒலி குருடாகும்
காதலித்து பார்...


படுக்கையை நனைப்பாய்
மூன்று முறை மருந்து குடிப்பாய்
காத்திருந்தால் 
வருஷங்கள் நிமிஷங்கள் என்பாய்
வந்துவிட்டால் நிமிஷங்கள் வருஷம் என்பாய்
தெருநாய் கூட உன்னை கவனிக்காது
ஆனால் உன் வீட்டு நாயே உன்னை கடிப்பதாய் உணாவாய்

உருட்டு கட்டையால் உதை வாங்கி நடு ரோட்டில் உருள்வாய்
இந்த ஆயுதங்கள், அண்ணன் காரன், அவனது நண்பர்கள் எல்லாம்
அவள் செய்த ஏற்பாடுகள் என்பாய்
காதலித்து பார்...இருதயம் அடிக்கடி நின்று போகும்
பெரும் சப்தத்தில் உனது குரல் மட்டும் ஊமையாகும்
உன் நகம் கீறியே உனக்கு காயம் வரும்
பிறந்த நாளுக்கு கிடைத்த சட்டையை காதல் கிழிக்கும்
ஆர்மோன்கள் காய்ந்து போய்விடும்
உதடுகள் மட்டும் பீட்ரூட் ஆகும்
தாகங்கள் பீர்களாகும்
பிறகு மதுபான சாலையில் தாகங்கள் அடங்கும்
காதலித்து பார்...அடிவாங்கியே உடைந்து போக உன்னால் முடியுமா
இம்சையை அனுபவித்து அகிம்சை அடைந்ததுண்டா?
அடிவாங்கும் சுகம் அறிந்ததுண்டா?
சாகமுன்னரே உன்னை புதைக்க வேண்டுமா?
பாதையில் தனிமையாகவும்
சபையில் கூட்டமாகவும்
ஏளனபட வேண்டுமா?ஹாஸ்பிட்டலை அடைய வேண்டுமா?
ஐந்து அங்குலமாவது உன்னை தைக்க வேண்டுமா?
பட்டினியே பரவாயில்லை என எண்ணியதுண்டா?
காதலித்து பார்...கடன் வாங்கி பரிசு கொடுத்து சிலிர்க்க முடியுமே அதற்க்காகவேணும்
ஆண் என்ற சொல்லுக்கு ஏமாளி எனவும்

பெண் என்ற சொல்லுக்கு அறிவாளி எனவும்
அகராதியில் ஏறாத அர்த்தங்கள் விளங்குமே அதற்க்காகவேணும்
வாழ்விலே கஷ்டபடவும்
சாவிலே சந்தோஷபடவும் முடியுமே , அதற்க்காகவேணும்
காதலித்து பார்...
அண்ணன் காரன் சட்டை கிழித்தாலும்
உறவுகள் உயிர் எடுத்தாலும்
விழித்து பார்க்கையில் உன் “பர்ஸ்” களவு போய் இருந்தாலும்
ஒரே ஆணியில் உன்னை மட்டும் சிலுவையில் அறைந்தாலும்
நீ நேசிக்கும் அவனோ அவளோ உன்னை நேசிக்க மறந்தாலும்
காதலித்து பார்...

பார், ஹாஸ்பிட்டல் இரண்டில் ஒன்று இங்கேயே நிச்சயம்
காதலித்து பார்.........
8 Responses
 1. இன்று வரப் போகும் பின்னூட்டங்கள் அனைத்தினதும் சாராம்சத்தை நானே சொல்லிவிட்டுப் போகிறேன்,

  அண்ணே அனுபவமா? :D


 2. ஹாஹா மீண்டும் காதலா?
  கோபியின் அனுபவம் விரைவில் பதிவாக வரப்போகின்றதாம்.


 3. Subankan Says:

  அண்ணே அனுபவமா?


 4. Bavan Says:

  அண்ணே அனுபவமா? :P

  ரீமிக்ஸ் வேர்சனைப்பார்த்தா காதலிக்கக்கூடாது போல இருக்கு..ஹிஹி


 5. //காதலித்து பார்...
  படுக்கையை நனைப்பாய்//

  என்ன திடிரென போர்னோ இலக்கியமெல்லாம்


 6. anuthinan Says:

  அண்ணே உங்கள பார்த்தா ரொம்பவே பயமா இருக்குது !!!!

  காதலித்து பார் எண்டு போடுறிங்க!! பிறகு படுக்கை நனைப்பாய் எண்டு சொல்லுரிங்க கடைசியில சிலுவையில் அறைவாங்க எண்டும் சொல்லுரிங்க!!!


  நீங்க ரொம்ப பயங்கரமான காதல்வாதி போல


 7. Jana Says:

  காதலித்துப்பார்த்தால் இப்படி எல்லாம் நடக்குமா என்ன? அனுபவிச்சு எழுதியிருக்கிறிங்களா யோ????


 8. Unknown Says:

  :)))))

  என்ன மாப்ள தங்கச்சி வெரட்டிடுச்சா?


Facebook Badge