நூடுல்ஸ் - 18-08-2010

சுராஜ் ரன்தீவ் போட்ட நோபோலுக்கு யப்பா எத்தனை விமர்சனங்கள், இனி மனுஷன் தூங்குறப்பவும் கிரீசுக்கு பின்னாடி இருக்கேனா என பார்த்து தூங்குவாராயிருக்கும். 

எனக்கு அவர் செய்தது பிழை என்பதில் எந்த வேறு கருத்தும் கிடையாது, எனினும் உணர்ச்சி வேகத்தில் அவ்வாறான விடயங்கள் நடப்பது சகஜமே, நான் ஓரு முறை விளையாடும்போது நடுவரின் மீது ஏற்பட்ட கோபத்தில் நானும் இவ்வாறு வேண்டுமென்றே 2 அடி முன்னாடி சென்று நோபோல் வீசியிருக்கிறேன். 

அது டீம் மீட்டிங்கில் திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல, அந்த நேரத்தில் உணர்ச்சி வசப்பட்டு ரன்தீவ் செய்தது, அவரது தவறுக்கு அவர் மன்னிப்பு கேட்டு விட்டார், தவறு செய்வது மனித குணம், அதற்கு மன்னிப்பு கேட்பது தெய்வ குணம், இந்த இடத்தில் சுராஜ் மன்னிப்பு கேட்டு விட்டார்.

ஆனால் இதை “சிங்களவனின் சதி” என்று இந்திய பதிவர்கள் சிலர் எழுதுவது கண்டிக்கதக்கது, விளையாட்டிலும் இனவாதத்தை விளைக்க முயல்வது கண்டிக்க தக்கது, அதிலும் முக்கியமாக அவர்களுக்கு தெரியாத விடயம், சுராஜ் ரன்தீவ் சிங்களவரல்ல என்பதும் அவர் ஒரு சிறுபான்மை இன வீரர் என்பதுமாகும். 

இந்த பிரச்சினையை பெரிதாக்குவது இந்திய ஊடகங்களாகும்

--------------------------------------------------------------------------

இந்திய ஊடகங்களை பற்றி கதைக்கையில் சொல்ல வேண்டிய ஒரு முக்கிய விடயம், அவற்றின் நம்பகதன்மை. இந்த  லிங்கிற்கு சென்று பாருங்கள், எஸ்.வி.சேகர் என்னும் கட்சி விட்டு கட்சி தாண்டும் பச்சோந்தி நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதா மேல் பிழையில்லை என்று வாதாடுகிறதை ஒரு சினிமா செய்தி வெளியிடும் ஊடகம் வெளியிட்டிருப்பது கண்டிக்கதக்கது.

மக்களிற்கு உண்மையை எடுத்து செல்ல வேண்டிய ஊடகங்களே இவ்வாறான செய்தியை வெளியிடுவது நல்லதல்ல, தனக்கு இலாபமாக அதிக பணம் கிடைக்க வேண்டுமென்பதற்காக ஊடக விபச்சாரம் செய்யும் இவ்வாறான ஊடகங்களை தண்டிக்க வேண்டும், காரணம் ஊடகங்களில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மை என்பதை நம்பும் ஏராளமானவர்களை எனக்கு தெரியும், எனது நண்பனொருவனின் தந்தை பத்திரிகையில் செய்தி வெளிவந்தால் அதை மிகவும் சரியென்பதாக நம்புவார், நாம் பிழை என்றால் எங்களோடு எதிர்த்து வாதிப்பார்.

--------------------------------------------------------------------------

எந்திரன் பாடல்களை கேட்டு கொண்டிருக்கும் போது எதேச்சையாக வானொலியொன்றில் “காதல் சொல்ல வந்தேன்” படத்திலிருந்து “அன்புள்ள சந்தியா” என்னும் பாடலை கேட்க நேர்ந்தது, செம கலக்கல் பாடல், கார்த்திக் உணர்ந்து பாடியிருக்கிறார். கார்த்திக் வாழ்க்கையில் சந்தியா என்று யாரையாவது காதலித்திருப்பாரோ?  என்று என்னுமளவிற்கு இப்பாடலை பாடியிருக்கிறார்.

இப்போதைக்கு எனது பிளே லிஸ்ட்டில் எந்திரன் பாடல்களுக்கு அடுத்ததாக இருப்பது இப்பாடலேயாகும். கேட்டு பாருங்கள் ரசிப்பீர்கள்.

--------------------------------------------------------------------------

காலையில் வெற்றி வானொலியின் பேப்பர் தம்பியின் குறும்பான அரசியல் விமர்சனங்களை ரசிப்பதுண்டு, அந்த குரலுக்கு சொந்தக்காரர் யாரப்பா? திடீரென்று அவர் சொல்லும் அரசியல் பஞ்ச் வசனங்கள் கலக்கல்.

இன்று விடியலில் லோஷன் “நண்பர்களோடு ஒத்து போகும் விடயங்கள்” பற்றி கதைத்தார். நானும் ஒரு குறுஞ்செய்தி அனுப்ப நினைத்து பின்னர் எனது பதில் பெரிதாக இருப்பதால் அனுப்பவில்லை, 

எனக்கு அதிகமாக நண்பர்கள் இருப்பதற்கு காரணம் ஒவ்வொரு நண்பரோடு ஒவ்வொரு விடயம் கதைப்பேன், சிலருக்கு கிரிக்கட் பிடிக்கும் அவர்களை சந்திக்கும் போது கிரிக்கட் கதைப்பேன், சிலருக்கு கிரிக்கட் பிடிக்காது கால்பந்து மட்டுமே பிடிக்கும், அவர்களை கண்டால் கால்பந்து பற்றி கதைப்பேன். இன்னும் சில நண்பர்கள் என்னை கண்டால் ஏ.ஆர். ரகுமானை பற்றி கதைப்பார்கள், அவர்களோடு இசைப்புயல் பற்றி கதைப்பேன், என்னைப்போல் இசைப்புயலின் தீவிர ரசிகர் ஒருவர் எனக்கு நண்பராகவுள்ளார், அவர் எனக்கு நண்பனாக ஆனதே இசைப்புயலின் பாடல்களினால் தானாகும். அவர் கடைசியாக என்னோடு கதைத்தது எந்திரன் பாடல் வெளியிட்ட நாளன்று அதற்கு முன்னர் அவர் கதைத்தது விண்ணை தாண்டி வருவாயா பாடல் வெளியீட்டன்று, எங்களிரண்டு பேருக்கு ரகுமானை தவிர்த்து வேறு எந்த விடயமும் கதைப்பதற்கு இல்லை.

--------------------------------------------------------------------------


எனது நண்பியொருத்திக்கு இரு கண்களிலும் பார்வையில்லை, ஆனாலும் தன்னம்பிக்கை என்னவென்பதை நான் அறிந்து கொண்டது அவளிடம்தான். அவளொரு பட்டதாரியும் கூட. அவளையும் ஒருத்தன் காதலித்தான். அந்த மனிதனை நான் கடவுளை விட பெரியவராக கருதினேன், ஆனால் இன்று அவளை விட்டு வேறு ஒருத்தியை கல்யாணம் கட்ட போகிறான், அவன் எனது தோழியை கை விட்டதற்கு காரணம் என்ன வென்று தெரியாது, ஆனால் இன்று அவன் எனது மனதில் ரொம்ப கேவலமானவனாகி விட்டான். இப்படிபட்டவளை கைவிட அவனுக்கு எப்படி மனம் வந்ததோ தெரியாது, இவனெல்லாம் ஒரு மனிதனா?


 இவர்களும் மனிதர்களே.. இவர்களை படைத்த கடவுளின் தவறுக்கு இவர்களை பழிவாங்காதீர்கள். இவர்களை கண்டால் தயவு செய்து அவர்களுக்கு உதவுங்கள்





21 Responses
  1. // மனுஷன் தூங்குறப்பவும் கிரீசுக்கு பின்னாடி இருக்கேனா என பார்த்து தூங்குவாராயிருக்கும். //

    ஹா ஹா....
    கலக்கல்....

    இனங்களை நோக்கிய குற்றச்சாட்டுகள் வெறுமனே உணர்ச்சிப் பிளம்புகளாலும், இலங்கைக் கிறிக்கற் எதிர்பாலும் வருபவை....
    விட்டுத்தள்ளுங்கள்.

    இந்திய ஊடகங்கள் -
    ஆமாம்.
    உணர்வுபூர்வமான விடயங்களை தங்கள் வளர்சிக்கு பயன்படுத்துவதில் விண்ணர்கள்.
    (பொதுவாகச் சொல்ல முடியாது/கூடாது. நல்ல ஊடகவியலாளர்களும் இருப்பார்கள். ஆனால் பலமுறை இவர்களின் கேவலத்தைப் பார்த்து அலுத்துவிட்டது)

    அன்புள்ள சந்தியா பாடல் அருமை.
    கேட்டேன்.


    விடியல் - :)))

    நண்பி - :((
    என்ன சொல்வது...
    உணர்வுகளற்ற ஜடமாகிறோம் இப்போதெல்லாம். :(

    நூடில்ஸ் அருமை.... :-)


  2. ARV Loshan Says:

    ரண்டீவ் பற்றி விரிவாகவே நான் பேசிவிட்டேன்.. :)

    //
    நண்பனொருவனின் தந்தை பத்திரிகையில் செய்தி வெளிவந்தால் அதை மிகவும் சரியென்பதாக நம்புவார், நாம் பிழை என்றால் எங்களோடு எதிர்த்து வாதிப்பார்.
    //
    கடவுள் (இருந்தால்) அவரைக் காப்பாற்றட்டும்..

    //
    “அன்புள்ள சந்தியா”//
    அருமையான பாடல்..
    நான் மகான் அல்ல பாடல்களையும் கேட்டுப் பாருங்கள்.. நல்லாவே இருக்கு..

    //
    பேப்பர் தம்பியின் குறும்பான அரசியல் விமர்சனங்களை ரசிப்பதுண்டு, அந்த குரலுக்கு சொந்தக்காரர் யாரப்பா?//
    பேப்பர் தம்பியே தான்.. ;)

    மற்றுமொரு நல்ல விடியல் ரசிகர் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி :)

    பார்வையிழந்த உங்கள் நண்பிக்கு சொல்லுங்கள், அவனை விட மேலான மனிதன் ஒருவன் வருவான் என்று


    LOSHAN
    www.arvloshan.com


  3. பதிவிற்கு சம்பந்தமில்லாத கேள்வி:


    // மற்றுமொரு நல்ல விடியல் ரசிகர் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி :) //

    அப்போது கெட்ட விடியல் இரசிகர் என்று யாரும் உளரா?
    யார் அவர்கள்? ;-)


  4. பொஸ்…..!

    கலந்து கட்டிச் சொன்னாலும் நல்லாத்தான் இருக்கு.

    அன்புள்ள சந்தியாப் பாடலைக் கேட்டுவிட்டே பேஸ்புக்கில் கருத்துக் கூறியதைப் பார்த்து ரசித்தேன்.


  5. பாடல்கள் கேட்டு நாளாகிறது. எந்திரன் பாடல்கள் சில முறை கேட்டேன். வேறொன்றும் கேட்கவில்லை இன்னும்


  6. Subankan Says:

    அன்புள்ள சந்தியா - எனக்கும்தான் ;)


  7. anuthinan Says:

    repeat

    //பார்வையிழந்த உங்கள் நண்பிக்கு சொல்லுங்கள், அவனை விட மேலான மனிதன் ஒருவன் வருவான் என்று //

    அண்ணா உங்கள் நூடில்ஸ் அருமை!!

    காதல் சொல்ல வந்தேன் பாடல்கள் பலவும் அருமைதான்!! நீங்கள் இதே போல் பாணா காத்தாடி பாடல்களையும் கெட்டு பாருங்கள்!!! நிச்சயம் பிடிக்கும்!!

    இந்திய ஊடகங்கள் இப்போது வெறும் காமேடி பீசுதான்


  8. Bavan Says:

    ரன்டிவ் செய்தது மனச்சாட்சிப்படி தவறு, ஆனால் விதிமுறைகளின் படி ஒன்றுமே தவறில்லை. கனவான்கள் விளையாட்டில் ஸ்போட்டிங் ஸ்பிரிட் இருக்கவேண்டும் என்பதனாலேயே இதை பெரிய விடயமாக்கியுள்ளார்கள்.

    ஒரு வகுப்பில் குழப்படிகாரப்பொடியன் குழப்படி செய்தால் அது பெரிய விடயமல்ல, ஆனால் நல்லபொடியங்கள் குழப்படி செய்தால் இப்பிடித்தான், புதுசாப்பார்ப்பார்கள்.

    ஆனால் ரன்திவ் மன்னிப்புக்கேட்ட பிறகும் அவருக்கு போட்டித்தடை விதித்தது ஏமாற்றத்தை அளிக்கிறது.

    //இந்த பிரச்சினையை பெரிதாக்குவது இந்திய ஊடகங்களாகும்//

    குறித்து வைத்துக்கொள்ளுங்கள் இனபாகுபாட்டை, நல்லிணக்கத்தை குலைப்பது இந்திய ஊடகங்கள்.(சுராஜ் ரன்திவ் நோபோல் போட்டதுக்காக நீங்கள் இலங்கை அணியையே திட்டும் போது நாங்களும் இப்படிச்சொல்லுவோம்)

    ***

    //“காதல் சொல்ல வந்தேன்” படத்திலிருந்து “அன்புள்ள சந்தியா” என்னும் பாடலை கேட்க நேர்ந்தது, செம கலக்கல் பாடல், கார்த்திக் உணர்ந்து பாடியிருக்கிறார்//

    சேம் பிளட்.. தினமும் குறைந்தது 10 முறை கேட்கிறேன்..ஹிஹி

    பார்வையிழந்த நண்பியின் வாழ்க்கையும் இருளிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறது என்று சந்தோஷப்படுவோம்

    நூடுல்ஸ் செம சூடு..;)


  9. Unknown Says:

    அன்பிற்கினிய நண்பரே...,

    / /...இவர்களும் மனிதர்களே.. இவர்களை படைத்த கடவுளின் தவறுக்கு இவர்களை பழிவாங்காதீர்கள். இவர்களை கண்டால் தயவு செய்து அவர்களுக்கு உதவுங்கள்.../ /

    பார்வையிழந்த நண்பியின் வாழ்க்கையும் இருளிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறது என்று சந்தோஷப்படுவோம்(நன்றி - பவன்)

    / /..இரு கண்களிலும் பார்வையில்லை, ஆனாலும் தன்னம்பிக்கை என்னவென்பதை நான் அறிந்து கொண்டது அவளிடம்தான். / /

    தன்னம்பிக்கை அவரை வழிநடத்தட்டும் என்று இயற்கையை வேண்டுகிறேன்.. - மனிதம் வளர்ப்போம்...

    நன்றி..,

    மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
    அன்புடன் ச.ரமேஷ்.


  10. Jana Says:

    அன்புள்ள சந்தியா உண்மையில் சிலிர்ப்புதான். உதித்தின் ஒரு வானவில்லின் பக்கத்திலே, விஜய் ஜேசுதாஸின் என்ன என்ன ஆகின்றேன் ஆகிய பாடல்களும் பறவாய் இல்லை.
    யுவன் !!! புலிக்கு பிறந்தது அல்லவா???


  11. //கன்கொன் || Kangon //

    நன்றி ஐயா நன்றி...


  12. //// LOSHAN said...
    ரண்டீவ் பற்றி விரிவாகவே நான் பேசிவிட்டேன்.. :)////
    ரொம்பவே விரிவாக பேசிவிட்டீர்கள். அந்த பதிவிற்கு எத்தனை பின்னூட்டங்கள்

    ////கடவுள் (இருந்தால்) அவரைக் காப்பாற்றட்டும்..////
    கடவுளுக்கு வேறு வேலை இருக்கிறது,அது சாமியார்களை காப்பாற்றுவது

    ////அருமையான பாடல்..
    நான் மகான் அல்ல பாடல்களையும் கேட்டுப் பாருங்கள்.. நல்லாவே இருக்கு..////
    கேட்டு கொண்டிருக்கிறேன்

    ////
    பேப்பர் தம்பியே தான்.. ;)////
    நம்பிட்டம், பாவமைய்யா அவருக்கு 10 டீ சேர்ட் கொடுங்களேன்

    ////மற்றுமொரு நல்ல விடியல் ரசிகர் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி :)//////
    நான் பல காலமாக விடியலின் ரசிகனே

    ////பார்வையிழந்த உங்கள் நண்பிக்கு சொல்லுங்கள், அவனை விட மேலான மனிதன் ஒருவன் வருவான் என்று ////

    கட்டாயம் வர வேண்டும் என்பதே எனது அவா


  13. ////கன்கொன் || Kangon said...
    பதிவிற்கு சம்பந்தமில்லாத கேள்வி:

    அப்போது கெட்ட விடியல் இரசிகர் என்று யாரும் உளரா?
    யார் அவர்கள்? ;-) ////

    ஆமாம் விடியல் கேட்காமல் 12 மணிவரை தூங்குபவர்கள், (நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை)


  14. ////மருதமூரான். said...
    பொஸ்…..!

    கலந்து கட்டிச் சொன்னாலும் நல்லாத்தான் இருக்கு.

    அன்புள்ள சந்தியாப் பாடலைக் கேட்டுவிட்டே பேஸ்புக்கில் கருத்துக் கூறியதைப் பார்த்து ரசித்தேன்////

    அதெல்லாம் கிண்டல் தலைவா, நம்பிடாதீங்க, நான் ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்


  15. ////Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...
    பாடல்கள் கேட்டு நாளாகிறது. எந்திரன் பாடல்கள் சில முறை கேட்டேன். வேறொன்றும் கேட்கவில்லை இன்னும்////

    நேரமில்லையா? உங்களது பதிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்...


  16. ////Subankan said...
    அன்புள்ள சந்தியா - எனக்கும்தான் ;)////

    ஆமாம், சந்தியாவுடனான உங்களது அனுபவ கதையின் முதலாவது அங்கத்தை வாசித்தேன்


  17. //// Anuthinan S said...
    அண்ணா உங்கள் நூடில்ஸ் அருமை!!////

    நன்றி அனுதினன்

    ////காதல் சொல்ல வந்தேன் பாடல்கள் பலவும் அருமைதான்!! நீங்கள் இதே போல் பாணா காத்தாடி பாடல்களையும் கெட்டு பாருங்கள்!!! நிச்சயம் பிடிக்கும்!!////
    முரளியின் மகன் என்பதால் கொஞ்சம் பயமாக இருக்கிறது, தந்தையை போல் ஏதாவது நோயாளியாக நடித்திருப்பாரோ என??

    ////இந்திய ஊடகங்கள் இப்போது வெறும் காமேடி பீசுதான்////
    எல்லாம் என சொல்ல முடியாது, ஆனால் காசுக்காக விபச்சாரம் செய்யும் ஊடகங்கள் அதிகம் இருப்பது உண்மை


  18. ////Bavan said...
    ரன்டிவ் செய்தது மனச்சாட்சிப்படி தவறு, ஆனால் விதிமுறைகளின் படி ஒன்றுமே தவறில்லை. கனவான்கள் விளையாட்டில் ஸ்போட்டிங் ஸ்பிரிட் இருக்கவேண்டும் என்பதனாலேயே இதை பெரிய விடயமாக்கியுள்ளார்கள்.

    ஒரு வகுப்பில் குழப்படிகாரப்பொடியன் குழப்படி செய்தால் அது பெரிய விடயமல்ல, ஆனால் நல்லபொடியங்கள் குழப்படி செய்தால் இப்பிடித்தான், புதுசாப்பார்ப்பார்கள்.////

    அது சரியாக சொல்லியிருக்கிறீர்கள் பவன்

    //ஆனால் ரன்திவ் மன்னிப்புக்கேட்ட பிறகும் அவருக்கு போட்டித்தடை விதித்தது ஏமாற்றத்தை அளிக்கிறது.////

    இந்திய வீரர் இப்படி செய்திருந்தால் இந்தளவுக்கு இந்திய கிரிக்கட் சபை நடந்திருக்குமா என தெரியாது.. இலங்கை கிரிக்கட் சபையையி்ன் இவ்வாறான தண்டிப்பு ஓரளவுக்கு ஏற்புடையதே.

    ////குறித்து வைத்துக்கொள்ளுங்கள் இனபாகுபாட்டை, நல்லிணக்கத்தை குலைப்பது இந்திய ஊடகங்கள்.(சுராஜ் ரன்திவ் நோபோல் போட்டதுக்காக நீங்கள் இலங்கை அணியையே திட்டும் போது நாங்களும் இப்படிச்சொல்லுவோம்)////
    இனத்துவேசத்தை எப்படி எல்லாம் காட்டலாம் என்பதை இவர்களிடம் கற்று கொள்ளலாம் பவன்


    ////சேம் பிளட்.. தினமும் குறைந்தது 10 முறை கேட்கிறேன்..ஹிஹி////

    அப்படி என்றால் யாரந்த சந்தியா?

    ////பார்வையிழந்த நண்பியின் வாழ்க்கையும் இருளிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறது என்று சந்தோஷப்படுவோம்////

    அதே...

    ////நூடுல்ஸ் செம சூடு..;)////
    வருகைக்கு நன்றி பவன்


  19. ////S.ரமேஷ். said...
    அன்பிற்கினிய நண்பரே...,

    பார்வையிழந்த நண்பியின் வாழ்க்கையும் இருளிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறது என்று சந்தோஷப்படுவோம்(நன்றி - பவன்)////

    ஆமாம் நண்பரே, ஆமோதிக்கிறேன்.

    ////தன்னம்பிக்கை அவரை வழிநடத்தட்டும் என்று இயற்கையை வேண்டுகிறேன்.. - மனிதம் வளர்ப்போம்...//// கட்டாயம் மனிதம் வளர்ப்போம் நண்பரே...


    ////நன்றி..,

    மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
    அன்புடன் ச.ரமேஷ்.////

    உங்களது ”மரங்களோடு மனிதம் வளர்ப்போம்” என்னும் வசனம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது நண்பரே, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்


  20. ////Jana
    August 19, 2010 12:48 AM
    அன்புள்ள சந்தியா உண்மையில் சிலிர்ப்புதான்.////

    எனக்கும் அவ்வாறே ஜனா, இந்த வாரம் ஹொக்ரெயில் இல்லையா?

    ////உதித்தின் ஒரு வானவில்லின் பக்கத்திலே, விஜய் ஜேசுதாஸின் என்ன என்ன ஆகின்றேன் ஆகிய பாடல்களும் பறவாய் இல்லை.
    யுவன் !!! புலிக்கு பிறந்தது அல்லவா???////

    யுவன் புலி என்பதை அரவிந்தனிலேயே நிரூபித்துவிட்டார்.


  21. Unknown Says:

    நல்ல நுடுல்ஸ்


Facebook Badge