நூடில்ஸ் (12.08.2010)

முதலாவது பதிவர் சந்திப்பு நடந்து இம்மாதத்துடன் ஒரு வருடமாகிறது, எங்கெங்கொ தனி தனியாக பதிவிட்டு கொண்டிருந்த இலங்கை தமிழ் பதிவர்களை ஒன்று சேர்த்த அந்த நிகழ்வுக்கு முக்கிய காரணமானது புல்லட் கண்ட பதிவர் சந்திப்பு பற்றிய கனவு பதிவு. இப்போது புல்லட் எழுதுவதை காணவில்லை, ஏனென்று தெரியவில்லை?, சீக்கிரம் பதிவுலகிற்கு வருமாறு புல்லட்டை கேட்டு கொள்கிறேன். 

---------------------------------------------------------------------------------

மேலும் இந்த ஆகஸ்ட் 31ம் திகதியுடன் ப்லொக்கருக்கு 11 வயதாகிறது. இம்முறை இலங்கை பதிவர்கள் அனைவரும் சேர்ந்து ப்லொக்கரின் பிறந்த நாளன்று கூகுல் குழுமத்தில் சந்திப்பொன்றை நடத்தினால் நல்லதென்று நினைக்கிறேன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

---------------------------------------------------------------------------------

இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் ஒரு நாள் கிரிக்கட் போட்டிகள் மீண்டும் தொடங்கி விட்டன, தொடர்ந்து இந்த இரண்டு அணிகளுக்கிடையில் போட்டிகள் நடப்பது எனக்கென்னவோ கிரிக்கட் பார்க்கும் ஆசையையே இல்லாமல் செய்து விட்டது.  மீண்டும் மொஹம்மட் யுசுப் பாகிஸதான் அணிக்கு விளையாட போகிறார், “மீண்டும் யுசுப்”, இவர் எத்தனை முறை ஓய்வு பெற்றார் என்பதை இவரே மறந்திருப்பார் என நினைக்கிறேன். உலகத்திலே புரிந்து கொள்ள முடியாதது இரண்டு விடயங்கள் என நினைக்கிறேன், முதலாவது பெண்களின் மனது அடுத்தது பாகிஸ்தான் கிரிக்கட் சபை எடுக்கும் முடிவுகள்.

---------------------------------------------------------------------------------

எந்திரன் பட பாடல்கள் கலக்கோ கலக்கல், மணிரத்தினம் படங்களை போல் ரகுமானுக்கு சங்கர் படங்களில் வித்தியாசமான இசையை வழங்கமுடியாது காரணம், சங்கர் படங்களில் ஒரு குறிப்பிட்ட பார்முலாவிற்குதான் இசையமைக்க முடியும், அதிலும் ரகுமான் ஸ்கோர் பண்ணியிருப்பது மகிழ்ச்சியே. “புதிய மனிதா” பாடலை கேட்கும் போது எஸ்.பீ.பாலசுப்ரமணியத்திற்கு இன்னும் 20 வயதோ என எண்ண தோணுகிறது. மனுஷனின் குரல் இன்னும் இளமையாகி கொண்டே போகிறது. அவர் இன்னும் 100 வருடங்கள் வாழ்ந்து பல பாடல்களை தர வேண்டும்.

---------------------------------------------------------------------------------

தஞ்சை பெருங்கோயிலின் 1000மாவது வருட நிகழ்வை தமிழக அரசு கொண்டாட போகிறதாம், பாவம் தமிழக மக்கள் கோயிலும் கருணாநிதியின் பெருமைகளை கேட்க போகிறார்கள், அதில் எனக்கொரு சந்தேகம் தஞ்சை பெருங்கோயிலை கட்டியது கருணாநிதியின் பாட்டன் என சொல்ல போகிறார்களோ?
---------------------------------------------------------------------------------

கிரிக் இன்போ இணைய தளத்தில் வெளியான இரண்டு கார்ட்டுன்கள் கீழே6 Responses
 1. anuthinan Says:

  /முதலாவது பதிவர் சந்திப்பு நடந்து இம்மாதத்துடன் ஒரு வருடமாகிறது,//

  ம்ம்ம் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை காரணம், அப்போது நான் வலைப்பதிவுகளுக்கு அறிமுகம் இல்லாதவன்!!! ஆனால், இப்போது அறிமுகமாகி இருந்தாலும், சந்திப்பு ஒன்றுக்கு ஒன்று திரட்டுவது கடினமாக இருக்கிறது!!!

  //இம்முறை இலங்கை பதிவர்கள் அனைவரும் சேர்ந்து ப்லொக்கரின் பிறந்த நாளன்று கூகுல் குழுமத்தில் சந்திப்பொன்றை நடத்தினால் நல்லதென்று நினைக்கிறேன்//

  நடந்தால் மிக்க சந்தோசமாக இணைந்து கொள்ளுவேன்.

  // உலகத்திலே புரிந்து கொள்ள முடியாதது இரண்டு விடயங்கள் என நினைக்கிறேன், முதலாவது பெண்களின் மனது அடுத்தது பாகிஸ்தான் கிரிக்கட் சபை எடுக்கும் முடிவுகள்//

  உண்மை அண்ணா

  //எந்திரன்//

  விபரிக்க முடியாதவன்

  //படங்கள்//

  ரொம்பவே அசத்தல்


 2. // புல்லட் எழுதுவதை காணவில்லை, ஏனென்று தெரியவில்லை?//

  எனக்கு காரணம் தெரியும்....அந்த சந்திப்பு என்றுமே தித்திப்பு.

  //மேலும் இந்த ஆகஸ்ட் 31ம் திகதியுடன் ப்லொக்கருக்கு 11 வயதாகிறது. இம்முறை இலங்கை பதிவர்கள் அனைவரும் சேர்ந்து ப்லொக்கரின் பிறந்த நாளன்று கூகுல் குழுமத்தில் சந்திப்பொன்றை நடத்தினால் நல்லதென்று நினைக்கிறேன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்//

  பிறந்த நாள் வாழ்த்துக்கள். குழுமம் என்பதையும் தாண்டி யாரும் ஒழுங்கு செய்யலாமே. நேரடியாக அனைவரும் கலந்து கொள்ளும் படி

  எந்திரன் இன்னும் என்னை முழுமையாய் கொள்ளை கொள்ளவில்லை.


 3. புல்லட் அண்ணா: ஹி ஹி... காரணம் தெரியும்.
  உயிருக்குப் பயந்து உண்மைய வெளில சொல்லமாட்டன்.

  ஓகஸ்ற் 31 - ஆமாம் ஆமாம்.
  குழுமத்தில் பிரேரியுங்களேன்?


  இந்தியா - இலங்கை - ஆமாம். :(
  யூசுப் - :)))

  எந்திரன் - இன்னும் இரசிக்கத் தொடங்கவில்லை.
  இரசிப்போம். :)


  தஞ்சை - நாத்திகர் என்று சொல்லிக் கொள்பவர் ஆளும் அரசு கோவிலுக்கு விழாவா?
  அவ்வ்வ்வ்வ்... ;)


  கேலிச்சித்திரம் - எனக்கு 2ஆவது மிகப் பிடித்தது. :)


 4. ARV Loshan Says:

  முதலாவது பதிவர் சந்திப்பு நடந்து இம்மாதத்துடன் ஒரு வருடமாகிறது,//
  ஞாபகமிருக்கிறது :)
  மறக்குமா?

  //புல்லட் எழுதுவதை காணவில்லை//
  அவரை அடிக்கடி காண்கிறோம்.தம்பி பிசி.. ;)

  கூகுல் குழுமத்தில் சந்திப்பொன்றை நடத்தினால் நல்லதென்று நினைக்கிறேன்//

  //பிறந்த நாள் வாழ்த்துக்கள். குழுமம் என்பதையும் தாண்டி யாரும் ஒழுங்கு செய்யலாமே. நேரடியாக அனைவரும் கலந்து கொள்ளும் படி//
  ஆமாம் சதீஸ்.. மீண்டும் உங்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்..
  உங்கள் பிறந்த நாள் பார்ட்டியாகவே ஒழுங்கு செய்யுங்களேன்.. வருகைகள் அதிகமாகும்.. ;)

  கிரிக்கெட் - :) ;) [)
  யூசுப் = அரசியல்வாதி

  எந்திரன் - உங்கள் ரசனை என்னுடன் ஒத்துப் போகிறது யோ..

  தஞ்சை-கலைஞர்- இரண்டாவது செம்மொழி மாநாடு? ;)

  கார்ட்டூன்ஸ் - கலக்ஸ்..


 5. ம்ம் குழுமத்தில் சந்திப்பா? ம்ம் கலந்துக்கொள்ள முயல்கிறேன்.

  //சங்கர் படங்களில் ஒரு குறிப்பிட்ட பார்முலாவிற்குதான் இசையமைக்க முடியும்//

  உண்மை ஆனால் ரஹ்மான் ஆரம்பத்தில் வழமையான தமிழ் சினிமா இசைப்பாணியை விடுத்து மேற்கத்தைய பாணியிலமைந்த தொழிநுட்ப நேர்த்தி மிக்க பாடல்களை உருவாக்க முனைந்தது இவரின் ஜென்டில்மேன்,காதலன் போன்றவற்றில் என்றே நினைக்கிறேன். திருடா திருடா இவரின் உச்சம் என்ற போதும் அது காதலனுக்கு பின்பு வந்ததுதானே? அப்புறம் பாய்ஸ் இசை ஞாபகம் இருக்கா? ஒரு கிளாசிக், ஒரு மெலடி, பரபரப்பான ஒரு கிளைமாக்சுக்கு முன் நம்மளை சற்றே ஆசுவாசப்படுத்தும் விதமாக ஒரு துள்ளலான பாட்டு எனும் அவரது பாணி இந்தியன்,முதல்வன்,அந்நியன்,சிவாஜியிலதான். எந்திரன் அவ்வகையில் கொஞ்சம் வித்தியாசம்தான். என் கவலை ரஜினிக்கென்றே இருக்கும் பெரும் ரசிகக் கூட்டத்தை புதுமையான இவ்விசை திருப்திபடுத்துமா என்பதில்தான்.

  //தஞ்சை பெருங்கோயிலை கட்டியது கருணாநிதியின் பாட்டன் என சொல்ல போகிறார்களோ//

  அடடா இது கொஞ்சம் ஓவராக இல்லை. அப்படியென்ன கோபம் அவர்மேல்


 6. யோகா தலைப்பில் திகதியை மாத்துங்க பாஸ் இன்னமும் செப்டம்பர் வரவில்லை


Facebook Badge