நூடுல்ஸ் (30-12-2010)
கடந்த வாரம் நத்தார் பண்டிகையை கொண்டாடிய நண்பர்கள் அனைவருக்கும் எனது நத்தார் தின வாழ்த்துக்கள், ஒவ்வொரு வருடமும் நண்பர்களின் வீட்டிலே அவர்களுடன் சேர்ந்து நத்தார் பண்டிகை கொண்டாடி வந்த எனக்கு இம்முறை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பங்கெடுக்க முடியாமல் போனது வருத்தமே. வழமையாகவே நுவரெலியாவில் டிசம்பர் மாதங்களில் காணப்படும் தூறல், மூடுபனி, கடுங் குளிர் மற்றும் அங்கு கூடும் வெளி மாவட்ட மக்களின் எண்ணிக்கை என்பவற்றால் எமது பிரதேசம் மிகவும் அழகாய் காணப்படும். இவற்றை எல்லாம் இம்முறை மிஸ் பண்ணியது கவலையான விடயம்.
ஒரு காலத்தில் இளைஞர்களுக்கு பிடித்த ஆங்கில வானொலி அலைவரிசையான SUN FM, அரசியல் குத்து வெட்டுக்களின் பின்னர் மீள முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. மீள தொடங்கவிருக்கும் SUN FM வானொலிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
பதிவர் ஜனா தனது மாத்தி யோசி என்னும் பதிவில் என்னை ஒரு ஆவிக்கதை எழுத சொல்லி அழைத்திருக்கிறார். எப்படி யோசித்தாலும் ஆவி வரவே மாட்டேங்குதே? ஆவியை தேடி இரவு 12 மணிக்கு வீதியில் தனியாகவும் நடந்து பார்த்தேன், ஆனாலும் அங்கு நான் ஆவிகளுக்கு பதிலாக பாவிகளையே கண்டேன். அந்த பாவிகளை பற்றி தனியாக ஒரு பதிவு பின்னர் எழுதுகிறேன். அதற்கு முன்னர் ஜனாவின் விருப்பப்படி ஜனவரியில் ஆவிகளை பற்றி எழுத வேண்டும்.
ஆஷஸ் தொடரை இங்கிலாந்துக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டனர் அவுஸ்திரேலிய அணியினர். அவுஸ்திரேலியர் சிகரத்திலிருந்து இவ்வளவு சீக்கிரமாக கீழே விழுவர் என நான் எண்ணியும் இருக்கவில்லை. எனக்கென்னவோ அவுஸ்திரேலியரின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் தேர்வுக்குழுவே என எண்ணத் தோன்றுகிறது. ஸ்மித் போன்ற வீரர்கள் பங்களாதேஷ் டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பதே கடினம், ஆனால் இவ்வாறான வீரர்களை தெரிவு செய்தது அவர்களது முக்கிய குற்றமாகவே படுகிறது. அடுத்த போட்டியில் பொன்டிங்குக்கு பதிலாக அணி தலைவராக பங்கெடுக்கும் கிளார்க் இழந்த மானத்தை ஒரளவாவது காப்பாற்றுவாரா என பார்ப்போம்.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்று தொடருக்கு உயிரூட்டியிருக்கிறது, ஆனாலும் இப்போட்டியில் இந்திய அணி வீரர்களுக்கு ஆதரவாக நடுவர்களும் விளையாண்டனர் என்பது போட்டியை பார்த்த அனைவருக்கும் தெரியும். UDRS முறையை இந்திய அணியினர் எதிர்த்தது இப்போட்டியை பொறுத்தவரையில் அவர்களுக்கு சாதகமாகவே இருந்தது. UDRS முறை இருந்திருந்தால் போட்டி முடிவு மாறியிருக்கலாம். இந்திய அணி முதலாமிடத்தை பிடித்த இலங்கையுடனான தொடரின் முக்கிய போட்டியில் நடுவர்களின் தவறான முடிவுகளால் போட்டி இந்திய அணிக்கு சாதமாக மாறியது அனைவருமறிந்ததே. சேவாக்குக்கு வழங்கப்படாத ஆட்டமிழப்பு, போர்மிலிருந்த டில்ஷானுக்கு இரண்டு இனிங்சிலும் வழங்கிய பிழையான ஆட்டமிழப்புக்களே இந்திய அணியை முதலாமி்டத்துக்கு கொண்டு சென்றது என நான் எண்ணுகிறேன்.
நான் இந்திய அணியின் எதிர்ப்பாளன் இல்லை, ஆனாலும் உலகில் எல்லா அணியும் ஏற்று கொண்டுள்ள தொழிநுட்பத்தை ஏற்க மறுத்தோடு மட்டுமல்லாது, தான் வேறு நாடுகளில் பங்கு பெறும் போட்டிகளிலும் அத்தொழிநுட்பத்தை பாவிக்கவிடாமல் பெறும் வெற்றியை 90சதவீதமான வெற்றியாகவே கருதவேண்டும். இந்திய அணியின் கடந்த அவுஸ்திரேலிய சுற்றுலாவின் போது நடுவர்கள் இந்திய அணிக்கு எதிராக செயல்பட்டது அனைவரும் அறிந்ததே. அத்தொடர் நடந்த காலங்களில் UDRS முறை இருந்திருந்தால் போட்டி முடிவுகள் மாறியிருக்கலாம் என்பதை இந்திய ரசிகர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.
ஆண்டொன்று போனால் வயதொன்றும் போகும் என்பார்கள், இப்போதுதான் ஆரம்பித்தது போன்றிருந்த இந்த 2010 வருடமும் முடிந்து விட்டது. வயதொன்றும் போய்விட்டது. தனிப்பட்ட முறையில் எனக்கு 2010 ஒரு நல்ல வருடமாக அமைந்தது. இதே போல் எதிர்வரும் 2011 வருடமும் சிறப்பாக இருக்கும் என நம்புவோமாக. “நம்பிக்கை தானே வாழ்க்கை”.
எதிர்வரும் 2011 சகலருக்கும் மிகவும் சிறப்பான ஆண்டாக மலர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
-----------------------------------------------------------------------